Wednesday, April 6, 2016

மதுரைக்கு ஒரு நாள் பயணம் - 2சென்ற பகுதியில் திருச்சி கொசுக்களை விட மதுரை கொசுக்கள் பலசாலிகளா என்று பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? நிச்சயம் அவை பலசாலிகளே.....:)) இரவு முழுவதும் எங்களால் உறங்கவே முடியவில்லை... விடிகாலையில் காபி விநியோகம் ஆரம்பிக்க, நாங்களும் ஒவ்வொருவராக சென்று குளித்து தயாரானோம்..திருமணச் சடங்குகளும் துவங்கவே , முந்தைய நாள் பார்க்காத பல உறவினர்களையும் குடும்ப நட்புகளையும் பார்த்து குசலம் விசாரித்தோம். காலை சிற்றுண்டி தென்னிந்திய இட்லி, ஊத்தாப்பம், வடை, கேசரி என்று இருந்தது. முடித்துக் கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டோம். நல்லபடியாக திருமணம் முடிந்ததும் எல்லோருக்கும் சில்லென்று குளிர்பானம் வழங்கப்பட்டது. பருகிக் கொண்டே என் உறவினர் ஒருவர் இன்னொருவரிடம் “இவளின் பதிவுகள் வாசிக்க சுவையாக இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்க , நான் சங்கோஜத்துடன் இப்போதெல்லாம் பதிவுகளே எழுதுவதில்லை. முகப்புத்தகத்தில் அவ்வப்போது ஏதோ எழுதுவதோடு சரி என்று சொல்ல வேண்டியதாயிருந்தது..:(

வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் ஒரு பதிவு வெளியிட்ட உடன் அடுத்த பதிவுக்கான விஷயம் மனதில் ஓடத் துவங்கி விடும். ஆனால் இன்று வெட்ட வெளியாக இருக்கிறதே!!! என்ன செய்ய!!!சரி ! இப்போ விஷயத்திற்கு வருவோம். பத்து மணிக்குள்ளாகவே திருமணம் முடிந்து விட்டபடியால், எங்களுக்கும் மாலை ஐந்து மணிக்கு தான் திருச்சிக்கு ரயில் என்பதால் இடைப்பட்ட நேரத்தில் மீனாட்சியை தரிசிக்கணும் என்று என் தம்பியை நச்சரிக்கத் துவங்கினேன். நெருங்கிய சொந்தங்களிடம் சொல்லிக் கொண்டு  ஒரு ஆட்டோவை பிடித்தோம்.நேராக மீனாட்சியம்மன் கோவில் வடக்கு கோபுரம் அருகே ஆட்டோ நின்றது.. ஆட்டோக்காரரும் என் தம்பியிடம் “அண்ணே இந்த கோபுரம் வழியாவே வெளிய வந்துருங்க, இல்லன்னா நேரம் ஆயிடும்” என்றார். தன்னுடைய தொலைபேசி எண்ணையும் தந்தார். இலவச தரிசனத்தில் ஏகப்பட்ட பேர் இருக்க, கட்டண சேவையில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். 

அன்று வெள்ளிக்கிழமை, முகூர்த்த நாள், நிறைய கல்யாண ஜோடிகளையும் பார்க்க முடிந்தது. 100 ரூபாய் கட்டண சீட்டு வாங்கிக் கொண்டோம். சிறுவர்களுக்கு கிடையாது. கட்டணம் செலுத்துமிடத்தில் முதலில் மீனாட்சியை தரிசித்து பின்னர் சுந்தரேஸ்வரரை தரிசியுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். தரிசனம் உடனே செய்ய முடிந்ததா??

மீனாட்சி ராஜ்ஜியம் ஆச்சே!

(தொடரும்)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படங்கள் உதவி  - இணையம்.
8 comments:

 1. எங்களூர் வந்தது தெரியாமல் போச்சே
  சந்தித்திருப்போமே ?
  ஆவலுடன் தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 2. மீனாக்ஷி அவ்வளவு எளிதில் தரிசனம் கொடுத்து விடுவாளா என்ன? கொஞ்சம் கஷ்டம் தான் படணும்! :( முன்னெல்லாம் மதுரையில் நினைச்சப்போப் பார்த்த ஞாபகங்கள் வருகின்றன.

  ReplyDelete
 3. //திருமணம் முடிந்ததும் எல்லோருக்கும் சில்லென்று குளிர்பானம் வழங்கப்பட்டது.//

  பதிவும் ஜில்லென்று போய்க்கொண்டு இருக்கிறது. தொடரட்டும்.

  ReplyDelete
 4. //முதலில் மீனாட்சியை தரிசித்து பின்னர் சுந்தரேஸ்வரரை தரிசியுங்கள் //

  மதுரையில் இதுதானே எப்போதும் வழக்கம்?

  ReplyDelete
 5. மீனாட்சியை அவ்வள்வு சீக்கீரம் பார்த்துவிட முடியாது.
  இப்போது காத்திருந்துதான் பார்க்க வேண்டும் மீனாட்சியை.

  ReplyDelete
 6. இப்போதெல்லாம் மீனாட்சியைப் பார்க்க ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மதுரை கோயில்உலா அருமை. பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து வருகிறோம்.

   Delete
 7. சுவாரசியமாகச் சொல்கிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் ஆதி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…