Thursday, March 24, 2016

மதுரைக்கு ஒரு நாள் பயணம்!

சென்ற வாரத்தில் ஒரு நாள் பயணமாக மதுரைக்கு சென்று வந்தேன். மாமா பெண்ணுக்கு மதுரையில் திருமணம் என்றதும், சென்று வரலாமா என்று எண்ணம் இருந்தது.. தில்லியில் இருந்த போது இதற்காக வர முடியாது என்று பல விசேஷங்கள் விட்டு போய்விட்டது. இங்கு வந்த பிறகும் ஏதோ ஒரு சில காரணங்களால் செல்ல முடியாத சில திருமணங்கள். திருமணத்திற்கு பின் என் தாய் வழியில் நான் கலந்து கொண்ட முதல் திருமணம் இது தான்.


ரோஷ்ணிக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ,முதல் மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நாங்கள் இருவரும் கிளம்பி திருச்சி ஜங்ஷனுக்கு சென்று சேர்ந்தோம். என் தம்பியும் குடும்பத்துடன் அங்கு வர  மாலை 6.30க்கு வர வேண்டிய வைகை விரைவு வண்டி எதிர்பார்க்கப்பட்டு 7.00 மணிக்கு வந்தடைந்தது. ஆனால் குறித்த சமயத்தில் மதுரையை சென்றடைந்தது. வெளியில் வந்து ஆட்டோ ஒன்றை பிடித்து பைபாஸ் ரோட்டில் இருந்த மண்டபத்தை அடைந்தோம்.


மாலை ரிசப்ஷன் நாங்கள் போவதற்குள்ளாகவே முடிந்து விட்டபடியால், ஒரு சில உறவுகளை மட்டுமே பார்த்து குசலம் விசாரித்து விட்டு, முதலில் பசி வயிற்றை கிள்ள, சாப்பிடச் சென்றோம். முன்பெல்லாம் மாப்பிள்ளை அழைப்பு இருக்கும். இப்போது அதற்கு பதில் ரிசப்ஷன்.. என் அப்பா சொல்வார். கல்யாண சாப்பாட்டை விட மாப்பிள்ளை அழைப்பு  டிபனும், சாப்பாடும் தான் நன்றாக இருக்கும் என்று. மாலை சேவை, போண்டா, அல்வா என்றும், இரவு போளியுடன். வடை, பால்பாயாசம் என்று பல வகையறாக்கள்.  இப்போது கலவை சாதங்களாகி விட்டன. வெஜிடபிள் பிரியாணியுடன், சாம்பார் சாதம், தயிர்சாதம், இவற்றுடன் வட இந்திய சங்கமமாக ருமாலி ரொட்டி குருமாவுடன்.... சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்றோம்.

அடுத்து என்ன! உறக்கம் தான்...எங்களுக்கான இடத்தில் உறங்கச் சென்றோம்...:)) மதுரை கொசுக்கள், திருச்சி கொசுக்களை விட பலசாலிகளா??? பார்க்கலாம்..:)))

காலையில் திருமணம். தயாராகி மற்ற உறவுகள், ஊர்க்காரர்கள் என்று சந்திக்க வேண்டும். முடிந்தால் மீனாட்சியை தரிசிக்கணும் என்று எண்ணம். பார்க்கலாம்..

(தொடரும்)

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


12 comments:

 1. கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக உறங்கி எழுந்திருக்கவும், மறுநாள் திருமண நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மனை தரிஸிக்கவும், அது பற்றி சுவையானதோர் பதிவு தரவும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. மீனாட்சி என்ன சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.

  ReplyDelete
 3. வாங்க, வாங்க மதுரைக்கு வாங்க, ஹிஹிஹி, நான் ஶ்ரீரங்கம் தான். மதுரை சொந்த ஊரு, அதனால் அழைப்பு! என்ன வெயிலாக இருந்தாலும் மாலை கொஞ்சம் காற்று வீசும். மதியம் கூடத் தெருக்களில் நடக்கையில் ஒண்ணும் தெரியாது. :)

  ReplyDelete
 4. நான் பொதுவாக்கல்யாணங்களில் சாப்பாட்டைத் தவிர்த்துவிடுவேன். டிஃபன் எனில் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டு சமாளிக்கலாம். சாப்பாடெல்லாம் சாப்பிட்டால் வயிறு நான் இருக்கேன் என பயமுறுத்தும். ஆகவே டிஃபனை விடறதில்லை! :)

  ReplyDelete
 5. அடடே... நம்ம மதுரை!

  ReplyDelete
 6. ஆஹா.... கல்யாண வைபோகமே !! இந்தமாதிரி விசேஷங்களுக்குப் போனால் ஏறக்குறைய அனைத்து உறவுகளையும் சந்திச்சுக்கலாம்!

  ReplyDelete
 7. மதுரை மீனாட்சியை தரிச்சிச்சிட்டு வாங்க...
  அப்படியே முடிந்தால் அழகர் மலையானையும்...

  ReplyDelete
 8. உங்களுடன் வர காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 9. இன்று பிறந்த நாள் காணும் குழந்தை ரோஷினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ரோஷணிக் குட்டிக்குப் பிறந்தநாள் என்று இங்கு வந்த் போது மதுரைத்தமிழன் கருத்திலிருந்து அறிந்து கொண்டோம். ரோஷணிக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தாமதமான...

  கீதா: கல்யாணங்கள் இப்பொதெல்லாம் சாப்பாடு கொஞ்சம் பயமுறுத்துகிறது, பல கல்யாணங்கள் மிகவும் ஆடம்பரமாகப் போவதாலும், மக்களும் மொனொடெனஸாக ஒரே போன்று 5, 10 நிமிடம் கூட இலலமல் ஹாய் பாய் என்பதாலும் கொஞ்சம் போரடிக்கிறது என்றாலும் நெருங்கிய உறவினர் கல்யாணம் என்றால் எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

  ReplyDelete
 11. நானும் இன்னும் மீனாட்சியை பார்க்க போகவில்லை. போக வேண்டும்.

  ReplyDelete
 12. மதுரை என்று பார்த்தவுடன் மயங்கியே வந்தேன் :-))
  பதிவுகள் வசந்தமாக வாழ்த்துகள் ஆதி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…