Friday, March 11, 2016

சிறப்புமிக்க நாகலிங்கமரம்!


விசேஷமான மரம் இது. இந்த மரத்தின் இலை, பூ, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த மரம், அரிதாக தமிழகத்தின் காவிரி கரையோரத்திலும் வளர்கிறது. சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதிலும் இந்த மரம் பெரும்பங்கு வகிக்கிறது. தூசிகளை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துகிறது.

பட்டையும், இலையும், காய்களும் விஷ ஜூரம், தோலில் தோன்றும் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகளை குணப்படுத்துகிறது. பல் கூச்சம், சொத்தை போன்றவற்றையும் குணப்படுத்துகிறது என்பது கூடுதல் தகவல். பழங்கள் நச்சு தன்மை வாய்ந்தவையாகும்...


இதன் பூ மிகவும் சிறப்புத்தனமை வாய்ந்ததாகும்.  வானுலகிலிருந்து இறைவன் பூமிக்கு தந்த கொடை இந்த மலர். நாகம் குடைபிடிக்க , நடுவில் சிவலிங்கம் சுற்றிலும் நூற்றுக்கணக்கான முனிவர்களும், தேவர்களும் தவம் செய்வதைப் போன்ற தோற்றம். குங்கும சிவப்பாய் ஐந்து இதழ்கள் என்று வெகு அழகு. இதன் மணம் சுகந்தத்தை பரப்பும்.

அதிசயமாய் இந்த பூ செடியில் பூக்காமல் மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்களைத் தாண்டி, மர உச்சிக்கும் இடையில் தனியே கிளைகளைப் பரப்பி அதில் காய்க்கிறது. காய்கள் பந்து போன்று உள்ளது.

 இவ்வளவு சிறப்புமிக்க மரம் எங்கள் இல்லத்தின் வெகு அருகில் உள்ளது. இங்கு வந்த நாளாய் முடியும் போது மலர்களை பறித்து வந்து இறைவனுக்கு சூடுவதுண்டு. மஹாசிவராத்திரியன்று கோவிலுக்கு எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் கொத்து கொத்தான மலர்கள் எட்டா உயரத்தில் இருந்தன. என்னடா இது ! என்று மனம் துவண்டது... எனக்காகவே வைத்தது போல் இரண்டு மலர்கள் ஒரு கல்லின் மேல் இருந்தன. அவற்றை எடுத்துச் சென்று கோவிலில் கொடுத்தேன்.


வெள்ளிக்கிழமையான இன்று பார்த்தால் கீழாகவே நிறைய தென்பட்டன. சிவ சிவ என்று ஜபித்துக் கொண்டே பறித்து மடியில் எடுத்து வந்தேன். அக்கம் பக்கம் தோழமைகளுக்கும் கொடுத்து எங்கள் வீட்டின் பூஜையறையிலும் வைத்தேன்.  இன்றைய நாள் இனிதே துவங்கியுள்ளது.

ஆனால் பறிக்கும் போதே மனதுள் ஒரு கலக்கம். இவ்வளவு சிறப்புமிக்க மரம் அடுத்த கட்டிடம் வந்தால் காணாமல் போய்விடுமே என்று தான்...


நல்லதே நடக்கட்டும்.. எல்லோரும் ஆனந்தமாய் இருப்போம் நட்புகளே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

(படங்கள் உதவி - இணையம்)

6 comments:

 1. மிகச்சிறப்பானதோர் மலர் பற்றிய மிக அழகான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  //இதன் பூ மிகவும் சிறப்புத்தனமை வாய்ந்ததாகும். வானுலகிலிருந்து இறைவன் பூமிக்கு தந்த கொடை இந்த மலர். நாகம் குடைபிடிக்க , நடுவில் சிவலிங்கம் சுற்றிலும் நூற்றுக்கணக்கான முனிவர்களும், தேவர்களும் தவம் செய்வதைப் போன்ற தோற்றம். குங்கும சிவப்பாய் ஐந்து இதழ்கள் என்று வெகு அழகு. இதன் மணம் சுகந்தத்தை பரப்பும்.//

  ஆம். இறைவன் படைத்த மலர்களிலேயே இது ஒரு தனிச்சிறப்பானதுதான். நானும் பார்த்து அடிக்கடி வியந்துபோயுள்ளேன்.

  ’சிவ சிவ சிவ சிவ சிவ’

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. வணக்கம்
  அறியாத தாவரம் பற்றி அறியத்ததந்தமைக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. எத்தனை வருடங்களாயிற்று இந்தப் பூவை பார்த்து! புகைப்படம் மிக அழகு ஆதி! இதன் வாசம் தூக்கலாக இருக்கும்! நாகங்கள் எப்போதும் இதைச் சுற்றி உறைவதால் நாகலிங்கப்பூவாயிற்று என்பார்கள்!

  ReplyDelete
 4. அழகான பூ! நீங்கள் சொல்லியிருப்பது போல் எங்கள் வீட்டின் அருகில் பிரதான சாலையில் இருந்தது. பெரிய அரச மரமும் கூட இருந்தது. இப்போது சாலையைப் பெரிதாக்குகின்றோம் என்று இரு மரங்களையும் வெட்டிவிட்டனர். இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் அந்தச் சாலை வழிதான் செல்வதே என்பதால் தினமும் நினைவில் வந்து வேதனை செய்யும். புகைப்படம் அழகாக இருக்கிறதே!!வெங்கட்ஜியின் புகைப்படங்கள் போல்...அருமை

  கீதா

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…