Tuesday, February 9, 2016

எல்லாம் நன்மைக்கே!

அன்பு நட்புகளே,

எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய பதிவுகள் எழுதி ஆறு, ஏழு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். திருவரங்கத்தில் வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்ததால் இணைய இணைப்பின்றி உங்க எல்லோருடைய பதிவுகளை படிக்க இயலாமல் போய்விட்டது. தற்சமயம் தான் இணைப்பு கொடுத்துள்ளோம். இனி முடியும் போது நட்புகளின் பதிவுகளை வாசிக்க முயல்கிறேன்.

நேற்று திருவரங்கத்திற்கு துளசி டீச்சர், கோபால் சாருடன் வருகை தந்திருப்பதையொட்டி கீதா மாமி வீட்டில் திருச்சி பதிவர்களின் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். புகைப்படங்களும், சந்திப்பு பற்றிய விவரங்களும் துளசி டீச்சரின் பதிவில் விரிவாக வரலாம். 

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


12 comments:

 1. வணக்கம்
  தங்களின் சந்திப்பு பற்றி தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவில் படித்தேன்
  இனித் தொடருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வாருங்கள் ஆதி சகோ/தோழி

  உங்கள் அனைவரது சந்திப்பு பற்றியும் கீதாசாம்பசிவம் சகோ அவர்களின் தளத்தில் சூடாகப் படித்துவிட்டோம். உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து...

  கீதா: ஆதி! நேற்று வெங்கட்ஜியையும் சந்தித்தாயிற்று. ஒரு சிறிய வருத்தம்...நான் அவரைச் சரியாகக் கவனிக்க இயலவில்லை...சாப்பிடச் சொல்லி என்று. எங்கள் வீட்டில் என்றால் அவரை எப்படியேனும் சாப்பிட வைத்திருப்பேன்....பின்னே அவர் மட்டும்தான் பதிவில் பல ரெசிப்பிக்கள் எழுதுவாரா..!!!! .நம்ம கைவண்ணத்தையும் காட்டலாமேனுதான்..ஹஹஹ்....ஹும் முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம்...சரியாக அவரை விருந்துபசாரம் செய்ய முடியவில்லை என்று...அடுத்த முறை கவனித்துக் கொள்கின்றேன்...
  மீண்டும் வருகை மகிழ்ச்சி...

  ReplyDelete
 3. மீண்டும் வலையுலகுக்கு வந்த தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். சகோ!
  த ம 3

  ReplyDelete
 4. எல்லாம் நன்மைக்கே!

  நீண்ட நாட்களுக்குப்பின் தாங்கள் மீண்டும் பதிவுலகுக்கு எட்டிப்பார்த்துள்ளது உள்பட ..... :)

  >>>>>

  ReplyDelete
 5. //திருவரங்கத்தில் வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்ததால் இணைய இணைப்பின்றி உங்க எல்லோருடைய பதிவுகளை படிக்க இயலாமல் போய்விட்டது. தற்சமயம் தான் இணைப்பு கொடுத்துள்ளோம். இனி முடியும் போது நட்புகளின் பதிவுகளை வாசிக்க முயல்கிறேன்.//

  மிகவும் இனிப்பான செய்தியாக உள்ளது. தங்களைப்போன்ற சிலர் பின்னூட்டமிட வருவதே இல்லை என்பதால், நான் புதிய பதிவுகள் வெளியிடுவதையே ஒராண்டுக்கும் மேலாக நிறுத்திக்கொண்டுள்ளேன். :)

  கடைசியாக சென்ற ஆண்டு (2015) கடைசிநாளான 31.12.2015 பதிவு கொடுத்ததோடு சரி. :)

  >>>>>

  ReplyDelete
 6. //நேற்று திருவரங்கத்திற்கு துளசி டீச்சர், கோபால் சாருடன் வருகை தந்திருப்பதையொட்டி கீதா மாமி வீட்டில் திருச்சி பதிவர்களின் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம்.//

  அப்படியா! இதனைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  //புகைப்படங்களும், சந்திப்பு பற்றிய விவரங்களும் துளசி டீச்சரின் பதிவில் விரிவாக வரலாம்.//

  ஆஹா, அதனையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

  தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப்பதிவினில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. மீண்டும் வலைப்பதிவிற்குள் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...
  எழுதுங்கள்...

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள். சென்ற ஞாயிறு அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற, வலைப்பதிவர் சந்திப்பு பற்றி கீதா சாம்பசிவம் அவர்களும் நானும் பதிவுகள் எழுதியுள்ளோம். வெங்கட் அவர்களுடைய பதிவினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்

  ReplyDelete
 10. வாங்க வாங்க மீண்டும் வலைதளம் வரவிற்கு வாழ்த்துக்கள்,,

  ReplyDelete
 11. திரு தமிழ் இளங்கோ, திரு வெங்கட் பதிவுகளைக் கண்டோம். தங்களது பதிவின் மூலமாகச் செய்தியினை அறிந்தோம். நீண்ட நாளுக்குப் பின் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 12. சந்திப்பின் புகைப்படங்களை பார்த்து ரசித்தேன். ரோஷிணிக்குட்டி வளர்ந்துவிட்டாள். அவளுக்கு அன்பும் ஆசியும்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…