Friday, June 5, 2015

பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால்!!!சமீபத்தில் ரிஷபன் சார் அவர்கள் முகப்புத்தகத்தில் பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால் அங்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பற்றி சுவைப்பட சொல்லியிருந்தார். அதை படித்ததிலிருந்து தில்லியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. வாங்க! அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்J

நான் திருமணமாகி தில்லி சென்ற சமயம் எங்கள் பக்கத்து ப்ளாட் காலியாகத் தான் இருந்தது. எல்லோரும் குப்பைகளை அங்கு தான் கொட்டிக் கொண்டும், பைகளில் கட்டி வீசிக் கொண்டு இருந்தார்கள். என்னவர் அலுவலகம் கிளம்பும் போது வாசலில் பை சொன்ன பின்னர் அவர் கீழே இறங்குவதற்குள் வாசல் கேட்டை மூடிவிட்டு பால்கனிக்கு ஓடி அங்கிருந்து அவர் தெருமுக்கு திரும்பும் வரை பை சொல்ல காலி ஃப்ளாட் பெரும் உதவியாக இருந்தது…:))) இதெல்லாம் டூ மச் இல்ல!!!….:)))

குளிர்காலத்தில் ஒருநாள் நான் மற்றும் எங்கள் ஃப்ளாட் தோழிகளான மகி மற்றும் கவிதாவுடன் எங்களுக்கு சொந்தமான மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். தில்லியில் எப்பவுமே POLLUTION கூடுதல் என்பதால் மாடி முழுவதும் மண்ணாக இருந்தது. சரி பெருக்கி விட்டு பாய் போட்டு வெயிலில் உட்காரலாம் என்று ஆளுக்கொரு வேலையாக பெருக்கி சுத்தம் செய்தோம். சேகரித்த குப்பைகளை என்ன செய்யலாம்? கீழே எடுத்துப் போகலாமா என்று யோசிப்பதற்குள் கவிதாவும், மகியும் அப்படியே கீழே தூக்கிப் போடு என்று சொல்ல முறத்தோடு மண்ணை கொட்டினேன். அவ்வளவு தான்…

கீழேயிருந்து ஹிந்தியிலும், மலையாளத்திலுமாக செமையாக வசவுகள். மூவரும் அலறிக் கொண்டு எட்டிப் பார்த்தால் நான் கொட்டிய மண் முழுவதும் கீழே சென்று கொண்டிருந்த ஒரு ஆளின் தலையில் அபிஷேகமாக ஆகியுள்ளது. மூவரும் சிரிப்புத் தாளாமல் கீழே அமர்ந்து கொண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். ஒருபுறம் பயம் வேறு. அந்த ஆள் மேலே ஏறி வந்து சத்தம் போடுவாரோ??? இல்லை வேலைக்கு சென்றுள்ள இந்த மனுஷன் வேறு இந்த விஷயம் தெரிந்து என்ன சொல்வாரோ??? என்று ஆயிரம் கேள்விகள்….:))) நல்லவேளை எந்த கெடுதலும் நிகழவில்லை…:))) ஆனால் பல வருடம் என்னை இந்த விஷயத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்….:)))

இந்த சுவையான சம்பவத்தை நினைவு கூர்வதற்கு உதவி புரிந்த ரிஷபன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

15 comments:

 1. மலரும் நினைவுகள்....ஹஹஹா.....சுவை தான்....)))))....

  தம +1

  ReplyDelete
 2. //கீழேயிருந்து ஹிந்தியிலும், மலையாளத்திலுமாக செமையாக வசவுகள். மூவரும் அலறிக் கொண்டு எட்டிப் பார்த்தால் நான் கொட்டிய மண் முழுவதும் கீழே சென்று கொண்டிருந்த ஒரு ஆளின் தலையில் அபிஷேகமாக ஆகியுள்ளது.//

  நல்லதொரு அபிஷேகம் செய்த புண்ணியம் ...... படிக்க நகைச்சுவையாக இருப்பினும் அந்த ஆள் மிகவும் பாவம் ...... அதுபோல மீண்டும் யாரும் செய்யக்கூடாது என போதிக்கும் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. வணக்கம்
  மனதை விட்டு அகலாத நினைவுகள்...பகிர்வுக்கு நன்றி த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. மலரும் நினைவுகளைப்படிக்கப்படிக்க புன்னகை விரிந்தது!

  ReplyDelete
 5. கடைசி வரிகள் மனம் விட்டு சிரிக்க வைத்தது.
  தங்கள் தளத்திற்கு முதல் முறையாக வந்து இணைந்துள்ளேன். இனி தொடர்கிறேன்!
  த ம 4

  ReplyDelete
 6. அந்த மனிதருக்கு மண்ணபிஷேகம். நல்ல வேளை மேலே வராது போனார். தெரியாமல் செய்த தப்பு இன்னும் மனதில் வருகிறது. அதுதான் விசேஷம். அன்புடன்

  ReplyDelete
 7. அபிஷேகம் இப்படிக்கூட செய்யப்படுமோ
  இனி தெருவில் போகும்போது கூட கவனமா இருக்கனுமப்பா.
  தம +

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா வாண்டுங்க செய்யுற வேலைய நீங்க செஞ்சிருக்கீங்க !

  ReplyDelete
 9. திட்டு வாங்காம தப்பிச்சுட்டீங்க...
  நல்ல பகிர்வு ஆதி..

  ReplyDelete
 10. ஹஹஹஹஹ மொட்டை மாடி இருக்கற வீடு வழியா நடந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும் போல .....சுவையான சம்பவம்.....ரசித்தோம்...

  ReplyDelete
 11. ஃப்ளாட் காலியாயிருந்தால்! அபிஷேகமா நல்லா இருக்கே....

  ReplyDelete
 12. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
 13. அன்புள்ள சகோதரி திருமதி. ஆதி வெங்கட் அவர்களுக்கு வணக்கம்! தங்களது பதிவுகளையும் மற்றும் தங்கள் கணவர் வெங்கட் நாகராஜ், தங்கள் மகள் செல்வி ரோஷ்ணி ஆகியோரது பதிவுகளையும் (தமிழ்மணத்தில்) தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில், நானும் ஒருவன்.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/07/35.html

  த.ம.7

  ReplyDelete
 14. மலரும் நினைவுகள் அருமை

  ReplyDelete
 15. (நகைச்)சுவையான அனுபவம், வாழ்த்துகள். பாவம் அந்த மனுஷன்...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…