Friday, June 5, 2015

பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால்!!!



சமீபத்தில் ரிஷபன் சார் அவர்கள் முகப்புத்தகத்தில் பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால் அங்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பற்றி சுவைப்பட சொல்லியிருந்தார். அதை படித்ததிலிருந்து தில்லியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. வாங்க! அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்J

நான் திருமணமாகி தில்லி சென்ற சமயம் எங்கள் பக்கத்து ப்ளாட் காலியாகத் தான் இருந்தது. எல்லோரும் குப்பைகளை அங்கு தான் கொட்டிக் கொண்டும், பைகளில் கட்டி வீசிக் கொண்டு இருந்தார்கள். என்னவர் அலுவலகம் கிளம்பும் போது வாசலில் பை சொன்ன பின்னர் அவர் கீழே இறங்குவதற்குள் வாசல் கேட்டை மூடிவிட்டு பால்கனிக்கு ஓடி அங்கிருந்து அவர் தெருமுக்கு திரும்பும் வரை பை சொல்ல காலி ஃப்ளாட் பெரும் உதவியாக இருந்தது…:))) இதெல்லாம் டூ மச் இல்ல!!!….:)))

குளிர்காலத்தில் ஒருநாள் நான் மற்றும் எங்கள் ஃப்ளாட் தோழிகளான மகி மற்றும் கவிதாவுடன் எங்களுக்கு சொந்தமான மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். தில்லியில் எப்பவுமே POLLUTION கூடுதல் என்பதால் மாடி முழுவதும் மண்ணாக இருந்தது. சரி பெருக்கி விட்டு பாய் போட்டு வெயிலில் உட்காரலாம் என்று ஆளுக்கொரு வேலையாக பெருக்கி சுத்தம் செய்தோம். சேகரித்த குப்பைகளை என்ன செய்யலாம்? கீழே எடுத்துப் போகலாமா என்று யோசிப்பதற்குள் கவிதாவும், மகியும் அப்படியே கீழே தூக்கிப் போடு என்று சொல்ல முறத்தோடு மண்ணை கொட்டினேன். அவ்வளவு தான்…

கீழேயிருந்து ஹிந்தியிலும், மலையாளத்திலுமாக செமையாக வசவுகள். மூவரும் அலறிக் கொண்டு எட்டிப் பார்த்தால் நான் கொட்டிய மண் முழுவதும் கீழே சென்று கொண்டிருந்த ஒரு ஆளின் தலையில் அபிஷேகமாக ஆகியுள்ளது. மூவரும் சிரிப்புத் தாளாமல் கீழே அமர்ந்து கொண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். ஒருபுறம் பயம் வேறு. அந்த ஆள் மேலே ஏறி வந்து சத்தம் போடுவாரோ??? இல்லை வேலைக்கு சென்றுள்ள இந்த மனுஷன் வேறு இந்த விஷயம் தெரிந்து என்ன சொல்வாரோ??? என்று ஆயிரம் கேள்விகள்….:))) நல்லவேளை எந்த கெடுதலும் நிகழவில்லை…:))) ஆனால் பல வருடம் என்னை இந்த விஷயத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்….:)))

இந்த சுவையான சம்பவத்தை நினைவு கூர்வதற்கு உதவி புரிந்த ரிஷபன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.