Wednesday, April 8, 2015

மாங்காய் தொக்கு!





மாங்காய் சீசனில் இந்த தொக்கு செய்து வைத்துக் கொண்டால் தயிர்சாதத்துக்கும், சப்பாத்தி, பராட்டா போன்றவற்றுக்கும் தொட்டுக்கையாக பயன்படுத்த ஏற்றதாகும். கிளிமூக்கு, குண்டு மாங்காய் என்று எதில் செய்தாலும் சுவையாக இருக்கும். நான் கிளிமூக்கு மாங்காயில் செய்திருக்கிறேன்.

தேவையானப் பொருட்கள்:-

மாங்காய் (பெரியது) – 1
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

மாங்காயை கழுவி தோல் சீவி விட்டு கேரட் துருவுவது போல் துருவிக் கொள்ளவும். வாணலியில் வெந்தயத்தை போட்டு நன்கு சிவக்க பொரிய விடவும். அதை ஆறிய பின் மிக்சியில் அரைத்து பொடியாக வைத்துக் கொள்ளவும். இப்போது வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். அடுத்து பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும், துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். கடைசியாக பொடி செய்த வெந்தயத்தை சேர்த்த பின் இறக்கவும்.

சுவையான, எளிதான மாங்காய் தொக்கு சுவைக்கத் தயார்…


நீங்களும் செய்து பார்த்து ருசியுங்கள்….:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

14 comments:

  1. எங்களுக்கும் ரொம்..............பப் பிடிக்கும்! காரம் கொஞ்சம் தூக்கலாய்ச் செய்வோம்!

    ReplyDelete
    Replies
    1. இங்கு காரம் கொஞ்சம் கம்மி தான்...:)) மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் சார்.

      Delete
  4. நாக்கில் நீர் ஊறச்செய்யும் மாங்காய்த்தொக்கு படங்களும் செய்முறைகளும் அருமை. எங்கள் வீட்டிலும் இதனைக் கொஞ்சம் காரசாரமாகச் செய்வார்கள். FRESH ஆக இருந்தால் மட்டும் நான் இதனை மிகவும் விரும்பித் தொட்டுக்கொள்வது உண்டு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வை.கோ சார்...

      Delete
  5. செஞ்சு பாத்துடறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

      Delete
  6. பார்க்கும் போதே எச்சில் ஊறுது... கொஞ்சம் வெல்லமும் சேர்த்தால் இன்னம் ருசி...

    ReplyDelete
  7. எனக்கும் ரொம்ப பிடித்த தொக்கு,அசத்தலா இருக்கு..

    ReplyDelete
  8. பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கு ஆதி..
    நானும் இதே மாதிரிதான் செய்வேன். ஆனால் காரம் கொஞ்சம் ஜாஸ்தியாக போடுவேன். கொஞ்சம் வெல்லமும் போடுவேன்.

    ReplyDelete
  9. தொக்கு ரொம்ப நன்றாக இருக்கு.
    எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்?

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…