Monday, April 6, 2015

சிறுதானியப் பாயசம்!சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. நார்ச்சத்து நிறைந்தவை. அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சிறுதானியத்தில் செய்த பாயசம் இதோ… சென்ற மாதம் வந்த மகளின் நட்சத்திர பிறந்தநாளன்று செய்தது இது….:)

தேவையான பொருட்கள்:-

சிறுதானியம்சின்ன கிண்ணம்
சர்க்கரை – 8 தேக்கரண்டி
பால் – ½ லிட்டர்
ஏலக்காய் – சிறிதளவு
முந்திரி, திராட்சை – சிறிதளவு
நெய் – சிறிதளவு
எசென்ஸ் – தேவைப்பட்டால் ஒரு சில சொட்டுகள்
கண்டென்ஸ்டு மில்க் – விருப்பத்திற்கிணங்க சிறிதளவு

செய்முறை:-

வாணலியில் சிறுதானியத்தை போட்டு சற்று வறுத்துக் கொள்ளவும். பின் அதை தண்ணீரில் அலசி விட்டு, காய்ச்சிய பால் சேர்த்து வேகவிடவும். விரைவில் வெந்து விடும் என்பதால் நான் பாயசம் செய்த பாத்திரத்திலேயே வேகவிட்டேன். பின் அதனுடன் ஏலக்காய், சர்க்கரை சேர்க்கவும். கன்டென்ஸ்டு மில்க் சிறிதளவு வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சற்று ஆறியதும் எசென்ஸ் ஓரிரு சொட்டுகள் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான சத்தான சிறுதானியப் பாயசம் தயார். வெள்ளை சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல என்பதால் அதற்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்வது நல்லது.


என்ன! உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

சிறுதானிய உணவு - சிறுதானியப் பொங்கல்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

12 comments:

 1. பாயஸம் சூப்பர் ! பகிர்வுக்கு நன்றிகள்.

  சிறுதானியம் என்றால் என்ன ? என்றே எங்கேயுமே சொல்லவில்லையே !

  கேழ்வரகு ? சாமை ? தினை ? விரகரிசி ? குதிரைவாலி ? ஜவ்வரிசி ? போன்ற எதுவோ ?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார். கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு, திணை, கம்பு, சோளம் போன்றவை தான் சிறுதானியங்கள். பெரும்பாலானவர்களுக்கு இது பற்றி தெரிந்துள்ளது. அதனால் தான் குறிப்பிடவில்லை...மன்னிக்கவும்...

   இது சாமையில் செய்த பாயசம்....:)

   நன்றி வை.கோ சார்.

   Delete
 2. Super Payasam Adhi....Ithil thengaayppaal serththu seythaal suvai innum koodum. Naan adikkadi ithupola payasam seyven.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை தேங்காய்ப்பால் சேர்த்தே செய்து பார்க்கிறேன். டிப்ஸ்க்கு நன்றி.

   நன்றி ராதா பாலு மேடம்.

   Delete
 3. சுவையான சிறு தானியப் பாயசம்.
  செய்முறை விளக்கத்திற்கு நன்றி ஆதி..

  ReplyDelete
 4. சிறுவயதிலிருந்தே சிறு தானியத்திற்குப் பழக்கப்பட்டதால் வீட்டில் செய்வதுண்டு. கேப்பைக் களி, தினைமாவு முருகனுக்கு என்றும், (தேன், தினைமாவு, தேங்காய் கலந்து) சாமை, வரகு, குதிரவாலி, சோளம், மக்காச் சோளம், கம்பு இப்படி எல்லாமே....அடையும் செய்யலாம். நீங்கள் சொன்ன பாயாசம் சகோதரி அதை அப்படியே குக்கரில் சிறிய குக்கரில், நேரடியாக பால் தானியம் போட்டு இட்டு சிம்மில் வைத்துவிட்டால் கண்டென்ஸ்டு மில்க் போட்டுச் செய்த டேஸ்ட் பிங்க் கலரில் கிடைக்கும். எல்லா பால் பாயாசமும் அப்படிச் செய்தால் சுவையும் கிடைக்கும். உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

  சிறுதானிய புட்டு உப்பு புட்டு, வெல்லப்புட்டு, பொங்கல் நீங்கள் சொல்லி இருப்பது....வெல்லம் போட்டு இனிப்புப் பொங்கல்...இப்படி நீங்களும் செய்திருப்பீர்கள் தான்....

  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி! டெம்ப்ட் ஆகிவிட்டது...

  கீதா...

  ReplyDelete
  Replies
  1. சிறுதானியங்களை நான் இப்போது தான் சுவைக்கத் துவங்கியிருக்கிறேன். பொங்கல், அப்பம், பாயசம், அடை, கிச்சடி என்று எல்லாமே நன்றாக உள்ளது.

   மங்கையர் மலர் புத்தகத்தில் வந்த குறிப்புகளை படித்து தில்லியில் குக்கரில் பால் பாயசம் செய்திருக்கிறேன். சூப்பராக வந்தது. சிறுதானியத்தில் புட்டு செய்தது இல்லை... விரைவில் செய்து பார்க்கிறேன்.

   நன்றி கீதா மேடம் & துளசிதரன் சார்..

   Delete
 5. சூப்பர்... செய்து பார்க்கிறோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.

   Delete
 6. நானும் சிறுதானியத்தில் பாயாசம் செய்வதுண்டு...

  ReplyDelete
 7. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
  4. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
  வலைத்தளங்கள்:
  கோவை2தில்லி
  சாப்பிட வாங்க
  ரசித்த பாடல்
  http://kovai2delhi.blogspot.in/2015/04/blog-post_6.html
  சிறுதான்யப் பாயஸம்
  http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post.html
  மார்கழிக் கோலங்கள்
  http://kovai2delhi.blogspot.in/2013/12/blog-post_6.html
  எல்.கே.ஜி. அட்மிஷன் என்றால் சும்மாவா!!!

  http://kovai2delhi.blogspot.in/2013/11/blog-post_28.html
  பிடி கொழுக்கட்டை

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…