Wednesday, April 29, 2015

புதிதாக ஒரு பழக்கம்!!!

பட உதவி - கூகிள்!

காலையில் காபியோ தேநீரோ குடிக்காவிட்டால் ஏதாவது ஆகிவிடுமா????? ஒன்றும் ஆகாது….:)) எங்கள் வீட்டிலேயே அப்பா, அம்மா, தம்பி என அனைவருமே காபி பிரியர்கள்…..:)) ஒருவேளை குடிக்காட்டா கூட என் அம்மா தலையில் துண்டை இறுக கட்டிக் கொண்டு தலைவலியில் துடித்து போயிடுவார்….:))) ஆனா இவர்களுக்கு மத்தியில் காபியே குடித்திராத ஜீவன் ஒன்று இருந்ததென்றால் அது வேறு யாராக இருக்கும்???? அடியேன் தான் என்று சொல்லவும் வேண்டுமா?? எப்படியோ தப்பி பிழைத்து விட்டேன்…..:)))

மாலையில் தேநீர் அருந்த மட்டும் பழகினேன். அதுவும் கல்லூரிப்பருவத்தில். திருமணத்திற்குப் பின் யார் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் கிச்சனுக்கு செல்லும் முன்பே எனக்கு முன்னே என்னவர் சொல்லிவிடுவார். இவள் காபியே குடித்திராதவள் என்று….:)) பிடிக்காத சிலதும் கர்ப்பகாலத்தில் பிடிக்கும்….:))) அதனால் அப்போ குடிக்க ஆரம்பிப்பே என்றும் சிலர் பயமுறுத்தினர்….:))) ஆனால் ம்ஹூம்ம்ம்….:))

சரி! இப்போ இந்தப் புராணம் எதற்கு???? இப்போ புதிதாக ஒரு பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். அதை இனி என் வாழ்வில் தொடரவும் வேண்டும் என்பது என் விருப்பம்….:)) என்ன அது????

சென்ற வருடம் உடல்நலமின்மைக்காக மருத்துவரை சந்திக்க நேர்ந்தது. எல்லா டெஸ்டும் செய்து விட்டு உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தாலும் வயிறு குறைவதற்காக டயட் சார்ட் போட்டுக் கொடுத்தார். பிரசவத்திற்கு பிறகு கூட வயிறு கூடவில்லை…:)) தில்லி திரும்பிய பின் என் தோழிகள் கூட ஆச்சரியப்பட்டனர். தலைமுடியும் நன்கு வளர்ந்திருந்தது.. வயிறும் கூடவில்லை. குண்டாகவும் இல்லை….:)) ஆனால் HARMONAL IMBALANCEஆல் அவதிப்பட ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது…..:(( இப்போதும் அதே தான்…L

அந்த டயட் சார்ட்டில் இருந்ததை ஏறக்குறைய ஒரு வருடமாக முடிந்தளவு பின்பற்றுகிறேன். அதில் ஒன்று தான் இந்த பழக்கம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேனும், அரைமூடி எலுமிச்சை சாறும் கலந்து பருகத் துவங்கினேன். இதை குடித்த பின் அப்படி ஒரு புத்துணர்ச்சி. முன்பு பாலோ, தேநீரோ குடிக்கும் போது கூட அதன் சுவை நாக்கில் சுழட்டிக் கொண்டேயிருக்கும்.. ஆனால் இப்போ அதெல்லாம் இல்லை….:))

இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்…J

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


7 comments:

 1. வணக்கம்
  நிச்சயம் கடைப்பிடியுங்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. நல்ல பழக்கம்தான்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. பழக்கத்தில் நானேதான் நீயும். ஆனால் இதுவரை காபி,டீ எதுவும் ருசிபார்த்ததும் இல்லை.
  தேனுடன் வென்னீர் கலந்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.. நல்ல பழக்கம். புத்துணர்ச்சியைத் தரும் தேன். காபி குடிக்காமல் எப்பட இருக்க முடியும். முடியும் என்பதுதான் என் பதில்.. அன்புடன்

  ReplyDelete
 4. நல்ல பழக்கம்தான் ஒரு காலத்தில் கடை பிடித்தேன்... தொடர முடியவில்லை...

  ReplyDelete
 5. பழக்கம் வழக்கமாகி விட்டது... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 7. அன்புடையீர் வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (02.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:
  http://blogintamil.blogspot.in/2015/06/2.html

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…