Friday, March 27, 2015

தென்னங்காற்று! – வித்யா சுப்ரமணியம்

சமீபத்தில் நூலத்திலிருந்து எடுத்து வந்து வாசித்த நூல் தான் வித்யா சுப்ரமணியம் அவர்களின் தென்னங்காற்று. குடும்பக் கதையாகவும், அதில் இயற்கையை போற்றியும், ஆங்காங்கே பாரதியாரின் பாடல்களும் என வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.


கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களே கதையாக இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. படித்து விட்டு தக்க வேலைக்காக காத்திருக்கும் அவனுக்கு, வாஞ்சையாக பரிந்து பேசும் அம்மா, உடன்பிறந்தோர், கண்டிப்பான அப்பா, உற்ற நண்பனான சிகாமணி என உற்றார் உறவினர். அக்காப் பெண்ணை திருமணம் செய்து வைத்து அவர்களின் கடையை சீதனமாக தர முன் வர, பிடிக்காத பெண்ணை கட்டிக் கொள்ள மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

மனம் போன போக்கில் ஒரு கிராமத்தில் இறங்கிய அவனுக்கு அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் உதவுகிறார். அவரின் மகள் பாலாம்பிகா தான் கதையின் நாயகி. கொள்ளை அழகுக்கு சொந்தமான அவளுக்கு ஆயிரம் பிரச்சனைகள். கிருஷ்ணமூர்த்தி அங்குள்ள தென்னந்தோப்பை விலைக்கு வாங்குகிறான். கடை ஒன்றிலும் வேலை செய்கிறான். கிருஷ்ணமூர்த்திக்கும், பாலாம்பிகாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்த கிராமத்தில் முதியோர் கல்வியை துவக்கி பத்திரிக்கை உலகே பேட்டிக் காண தேடி வரும் அளவில் உயர்கிறான். இவனுடன் இந்து என்ற பெண்ணும் உற்ற துணையாக இருக்கிறாள்.

மகனின் புகழ் பத்திரிக்கை வரையில் வந்ததைக் கண்டு அப்பாவே தேடி வருகிறார். இனி என் வாழ்க்கை உன்னுடன் தான் என்று மகனை ஆரத்தழுவுகிறார். இந்து கிருஷ்ணமூர்த்தியை விரும்ப அவன் யாரை திருமணம் செய்து கொண்டான் என்பது தான் கதை…

ஆங்காங்கே சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று பாரதியாரின் பாடல்களும், கிராமத்து சூழலை கண் முன்னே காண்பித்து இருக்கும் வரிகளும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையே இருக்கும் பாச பிணைப்பும், ”திருமணம் முடிந்து இந்த வேப்ப மரத்திடம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். என் மனைவியை இதற்கும் காண்பிக்க வேண்டும்” என்பது போன்ற ஆத்மார்த்தமான வரிகளும் புத்தகம் முழுவதும் நிரம்பியுள்ளன. பாராட்டுகள் மேடம்.

என்னைக் கவர்ந்த நூல், உங்களுக்கும் பிடிக்குமாயின் வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் வாசித்து மகிழுங்களேன்.

சென்ற மாதம் இவரை சந்தித்த அனுபவத்தை இங்கே எழுதியிருக்கிறேன்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டங்கள் உதவி - கூகிள்.

27 comments:

 1. அருமை ஆதி! நானும் இந்த புத்தகத்தை படித்து மலைத்திருக்கிறேன்

  ReplyDelete
 2. Replies
  1. பாராட்டுகள் மேடம்.

   Delete
 3. தாங்கள் எழுதியுள்ள புத்தக விமர்சனம், உடனே அந்தப்புத்தகத்தைத் தேடி வாங்கி படிக்க வேண்டும் போல ஆவலைத் தூண்டக்கூடியதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. puthaga mathepuri arumai vaalthukal.

  ReplyDelete
 5. வணக்கம்
  புத்தகம் பற்றி சொல்லிய போது படிக்க தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன் சார்.

   Delete
 6. அருமையான ஷார்ட் அண்ட் ஸ்வீட் விமர்சனம்! நிச்சயமாக வாசிக்கின்றோம்...

  வெங்கட்ஜி யின் தளத்தை ரசித்து வாசிப்போம்.....தங்கள் தளம் அறிந்தும் தொடர முடியாமல் இருந்தது. இனி தொடர்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்வதற்கு மிக்க நன்றி துளசிதரன் சார்.

   Delete
 7. மிக அருமை, ஆதி. சுவரசியமான புத்தகம்.

  ReplyDelete
 8. அருமையான நூல் விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் சார்.

   Delete
 9. வாசிக்கத் தூண்டும் அருமையான பகிர்வு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலஷ்மி மேடம்.

   Delete
 10. சுவாரஸ்யமான புத்தகம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.

   Delete
 11. முடிவைச் சொல்லாமல் வாசிக்கத் தூண்டுகிற விமர்சன நுணுக்கம் கைவந்து விட்டது !

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரிஷபன் சார்.

   Delete
 12. நூல் விமர்சனம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமார் சார்.

   Delete
 13. அருமை.....வாசிக்க வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அனுராதா.

   Delete
 14. தேர்ந்த எழுத்தாளரின் சிறந்த நூலுக்கு ஆழ்ந்த விமரிசனம். பாராட்டுக்கள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…