Sunday, March 22, 2015

தீ ரண சஞ்சீவிக்கு நன்றி!இரண்டு வாரங்களுக்குப் பிறகு கைகள் ஏறக்குறைய குணமாகிவிட்டது. பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும் விசாரித்த நட்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுத்தோல் வரத் துவங்கியுள்ளது. சென்ற பகுதியில் சொன்னது போன்று நான் பயன்படுத்திய தீ ரண எண்ணெய் பற்றிய சில தகவல்கள்….

திருச்சியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணெய் பற்றி தெரிந்திருக்கிறது. அக்கம் பக்கம் முதல் வெளியில் செல்லும் போது என்று எங்கு சென்றாலும் கைகளை பார்த்தவர்கள் அனைவரும் என்னிடம் இந்த எண்ணெய் உள்ளது தருகிறேன். தவறாமல் தடவிக் கொள் சரியாகிவிடும்என்று அத்தனை பேரும் பரிந்துரைத்தார்கள்.

எனக்கு வேதனையாக இருந்த போது தான் மகளுக்கும் நல்ல ஜுரமாக இருந்தது. அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று blood test எல்லாம் எடுத்து ஊசி போட்டு பின் குணமானது. அப்போது அந்த மருத்துவரிடமே கைகளை காண்பித்து கொப்புளங்கள் உடைகின்றன. மீண்டும் தண்ணீர் கோர்த்துக் கொள்கிறது, நடுவிரல் கொழகொழப்பாகவே இருப்பதாகவும் சொல்ல, மேல்தோலை கத்தரித்து எடுத்து விட்டு இந்த எண்ணெயைத் தான் தடவச் சொன்னார்…..:)

மருந்து கடைகளிலும் இதைத் தான் பரிந்துரைத்தனர். ஆக மொத்தம் இவ்வளவு பேரும் பரிந்துரைத்த, எனக்கும் நிவாரணம் கிடைத்த எண்ணெய் இதோ….


தீப்புண், சைலன்சர், குக்கர் ஆவி, கொதிக்கும் எண்ணெய், நாள்பட்ட காயங்கள் என அனைத்திற்குமே நிவாரணம் தரும் இந்த எண்ணெய். 70 சதவீத தீக்காயங்களைக் கூட குணமாக்கியுள்ளது.

தில்லியில் உள்ள தோழி ஒருவர் இங்கே ஒரு எண்ணெய் வேண்டும் என்று கேட்டிருந்தார். பல வருடங்களுக்கு முன்னர் வாங்கி சென்றிருக்கிறாராம். கிடைத்தால் வாங்கித் தருகிறோம் என்று சொன்னோம். அந்த எண்ணெயின் பெயர் ”வசந்த மாலதி”….:) தெரிந்த கடையில் கேட்கவே சற்று தயங்கினேன். ஒருவர் கேட்டிருந்தார் என்று தான் முதலிலேயே ஆரம்பித்து சொன்னேன். ஆமாங்க! அந்த எண்ணெய்க்கு காலாவதி தேதியே கிடையாது. அற்புதமான எண்ணெய், கிடைப்பது சற்று சிரமம் என்றார். அப்பாடா! உடனே நான் “அவசரம் இல்லை, கிடைக்கும் போது வாங்கித் தாங்க. தில்லியிலிருந்து ஒருவர் கேட்டிருந்தார் என்று சொல்லி புக் செய்து விட்டு வந்தேன்…..:)

ஆக, சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கு நல்ல சக்தி இருக்கிறது….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


பின்குறிப்பு:- முகப்புத்தக பூதத்திடம் அகப்பட்டுக் கொண்டால் மீளவே முடிவதில்லை….:))

27 comments:

 1. நிறைய பேர் பயன் பெற்று பரிந்துரைத்திருக்கிறார்கள். கை கண்ட மருந்து.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார். நிறைய பேர் பயன்பட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். கைவசம் வைத்துக் கொள்வது நல்லது... கருத்துக்கு மிக்க நன்றி.

   Delete
 2. எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது... வேறு வேறு பெயர்களில்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார். எல்லா ஊர்களிலும் கிடைப்பதாக போட்டிருந்தது. ஆனால் வேறு வேறு பெயர்களிலா!! நன்றி.

   Delete
 3. மருந்தை விட சக்தி வாய்ந்தது அந்த பூதம்...!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா..

   சக்தி வாய்ந்த பூதம் தான்.. நன்றி.

   Delete
 4. இன்னிக்கு வரை இதைப் பத்தித் தெரியாது. எனக்கு எண்ணெய் கொட்டினப்போ மருந்துக்கடையில் ரைட் என்றொரு ஆயின்ட்மென்ட் கொடுத்தார். அது தான் இப்போவும் பயன்படுத்தறேன். அதுவும் சீக்கிரம் புண்ணை ஆற்றுகிறது. இந்தத் தைலம் கிடைக்குமிடம் சொல்லவே இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. இந்த எண்ணெய் தயாரிப்பதே உங்கள் ஏரியாவில் தான் மாமி....:)) 38, புதுத்தெரு, அங்காயி அம்மன் கோயில் சமீபம், அம்மா மண்டபம்.

   வசந்த மாலதியும் அங்கே தான்...:)) S.N மண்டபம் அருகில்...

   கருத்துக்கு நன்றி.

   Delete
 5. எல்லோரும் சொல்றாங்க, ஆனாலும் அப்படி ஒண்ணும் முகநூல் சுவாரசியமாத் தெரியலை! :)

  ReplyDelete
  Replies
  1. சுவாரசியமோ என்னவோ! அங்கே போனால் வலைப்பூ பக்கம் எட்டி பார்ப்பதில்லை...:)

   Delete
 6. நாகரிகம் என்கிற பெயரில் நம் பாரம்பரியத்தின் பல்சுவைகளை, அறிவுத்திறனை நாம் முடக்கிவிட்டோம்.
  அதிலொன்றுதான் நாட்டு மருத்துவம்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். கருத்துக்கு நன்றி.

   Delete
 7. நல்ல தகவல் ஆதி. கை குணமாகிவருவது மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

   Delete
 8. தாங்கள் ஓரளவு குணமானதில் மனதுக்கு நிம்மதியே.

  இந்தப்பதிவு அனைவருக்குமே ஆபத்துக்குப் பயன்படும் சமய சஞ்சீவி.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.

   Delete
 9. பேரின் மகிமையே சொல்கிறது . மருந்தின் சகதியை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா.

   Delete
 10. இறைவன் அருளால் குணமடைந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். தீ ரண சஞ்சீவி, வசந்த மாலதி – ஆகிய நிவாரணிகள் குறித்து தெரிந்து கொண்டேன் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார். திருச்சியில் எல்லா இடத்திலும் கிடைக்கிறது.

   Delete
 11. குணமாகி மீண்டும் உற்சாக பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 12. கையிருப்பாக ஒரு பாட்டில் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். அப்பாடா புண் ஆறினதுடன் சமய ஸஞ்சீவியை எல்லோருக்கும் பரிந்துரைத்தது எbdbளவு ஒத்தாசை தெரியுமா? நல்ல உபகாரம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. கைவசம் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. நன்றி காமாட்சிம்மா.

   Delete
 13. நாங்கள் பெரும்பாலும் நாடுவது நாட்டுவைத்தியம் தான். இந்த எண்ணெய் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது. என்ன ஒரு சில இடங்களில் பேர் சொல்லிக் கேட்டால் வேறு பெயரில் இருப்பதால் விளக்கமாகச் சொல்லிக் கேட்க வேண்டியிருக்கின்றது....ஸோ குணமாகின்றது மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார் மிக விரைவில் குணம் தெரிகின்றது. அதனால் தான் மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என பகிர்ந்து கொண்டேன். நன்றி துளசிதரன் சார்.

   Delete
 14. இதுபற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…