Tuesday, March 10, 2015

தண்ணில கண்டம்!!!!

சமீபத்தில் வெளியான ”தண்ணில கண்டம்” படம் பற்றி ஏதோ எழுதப் போறேன்னு யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல…. ஏறக்குறைய பத்து நாட்களுக்கு முன்னர் தண்ணீரால் என் கைக்கு ஒரு கண்டம் ஏற்பட்டதைத் தான் உங்களிடம் சொல்லப் போகிறேன். ஞாயிறான அன்று காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மாசிமாத தெப்போற்சவத்தில் வீதியுலாவின் ஒரு நாளாக எங்கள் குடியிருப்புக்கு பெருமாள் வரவிருப்பதால் அதற்கு தயாராகி கும்பலில் முட்டி மோதி நம்பெருமாளை தரிசித்து விட்டு நானும் மகளும் வீட்டுக்கு வந்தோம்.

மதிய சமையலுக்காக குக்கரில் சாதமும் பருப்பும் வைத்து விட்டு, எப்போதும் எங்கள் வீட்டில் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிய நீர் தான் குடிக்க பயன்படுத்துவேன் என்பதால், ஒரு அடுக்கில் வெந்நீர் போட இண்டக்‌ஷன் அடுப்பில் வைத்தேன். ஏதோ வோல்டேஜ் தகராறு போல அது வேலை செய்யவில்லை…. சரியென்று கேஸ் டவ்வில் ஒரு புறம் குக்கரும் இன்னொருபுறம் வெந்நீரும் போட, சிறிது நேரத்தில் கொதித்ததும் நிறுத்தி விட்டு இறக்கி அந்த அடுப்பில் ரசம் வைக்கலாமென  இறக்கினேன். இரு கைகளாலும் அடுக்கை பிடித்து இறக்கும் போது குக்கரின் பிடி இடித்து தண்ணீர் கைகளில் தெளித்து கொட்ட……

அந்த நேரத்திலும் அடுக்கை பத்திரமாக மேடையில் இறக்கி தட்டை போட்டு மூடி விட்டு வேக வேகமாக பாத்ரூமில் பக்கெட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் இரு கைகளையும் வைத்து விட்டு அமர்ந்தேன். (திருச்சியில் இப்போதே அடிக்கும் வெய்யிலில் குழாய்களில் கொதிக்க கொதிக்க வெந்நீர் தான் வருகிறது) ஐந்து நிமிடம் ஆகியிருக்காது அந்த நீரும் எனக்கு எரிச்சலைத் தர ஃப்ரிட்ஜை திறந்து ப்ரீசரில் கைகளை வைத்துக் கொண்டேன். அப்போது தான் என் மகளுக்கே காயம் ஏற்பட்ட விஷயம் தெரியவந்தது. அவளை விட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இட்லி மாவை எடுத்து கைகளில் தடவ சொல்லி கத்திக் கொண்டிருந்தேன். அவளும் மாவை பதட்டத்துடன் கைகளில் தடவி விட்டாள். எல்லாம் ஐந்து நிமிடம் தான். மீண்டும் எரிச்சல்…. அவள் நான் துடிப்பதை பார்த்து பயந்து போய் அவள் அப்பாவுக்கு போன் செய்து விட்டாள்….:)

என்னையும் பேசச் சொல்கிறாள். நான் பேசக்கூடிய நிலையிலேயே அப்போது இல்லையே, முடியாது என்று சொல்ல…. அவளே பக்கத்து வீட்டில் இருந்த தோழியை அழைத்து அவரிடம் பேசச் சொல்லி என்னவரின் அறிவுரையின் பேரில் தேங்காயெண்ணையும் மஞ்சளும் குழைத்து கைகளில் தடவிவிட்டார்கள். ஃபேன் காற்றில் கைகளை காண்பித்து ஊதிக் கொண்டேயிருக்க, எரிச்சலும், வலியும் ஒன்று சேர ஒருமாதிரி மயக்கம் ஏற்பட, சற்று ஓய்வு எடுக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் முடியவில்லை.

மாலையில் எரிச்சல் கொஞ்சம் குறைய, வேலை செய்ய ஆரம்பித்ததும் கொப்புளங்கள் ஏராளமாக வரத் துவங்கவே.. அப்போது தான் தெரிந்தது. இடது கையில் நான்கு விரல்களிலும், வலது கையில் இரண்டு விரல்கள் என ஆறு விரல்களை இந்த வெந்நீர் குளிப்பாட்டியிருக்கிறது என….

தீ ரண சஞ்சீவி

மாலையில் பால்காரர் மூலம் தான் இந்த எண்ணையின் மகிமையைத் தெரிந்து கொண்டேன். 70 சதவீத தீக்காயத்தைக் கூட சரிசெய்யக்கூடியதாம்.  அவரது மகன் ப்ளாஸ்க்கில் வைத்திருந்த டீயை (மூடி சரியாக மூடாமல் இருந்ததை கவனிக்காமல் விளையாட்டாக) தோள்களில் சாய்த்து கொள்ள, கொட்டி வெந்து விட்டதாகவும் இந்த எண்ணெயின் மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்ததாகவும் சொல்லவே 100 மி.லி எண்ணெய் ரூ 150 எனச் சொல்லி அவரே வாங்கி வந்து தந்தார்.

ATS இன்ஜக்‌ஷன் போடலாம் என நினைத்தால் அன்று ஞாயிறு என்பதால் அருகில் மருத்துவர்கள் இல்லை. இந்த எண்ணையே போதும் என்று சொன்னார். அன்று முதல் கொப்புளங்கள் மேலேயே வேலைகளை முடித்துக் கொண்டு மீதி நேரங்களில் இந்த எண்ணையினை பயன்படுத்துகிறேன். வேலைகள் செய்யும் போது கொப்புளங்களில் ஓட்டை ஏற்பட்டு உடைந்து தண்ணீர் வருவதும், மீண்டும் தண்ணீர் ஊறிக் கொள்வதும் என வேதனை தான். இடது  கையின் நடுவிரலில் தான் மிகவும் மோசமாக இருந்தது. இப்போது அந்த விரல் தவிர மற்றவை பரவாயில்லை.

குக்கரில் கையை சுட்டுக் கொள்வதும், தோசைக்கல்லை காலில் போட்டுக் கொள்வதும் என இருந்த எனக்கு, எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இதுவே எனக்கு ஏற்பட்ட பெரிய தீக்காயமாகும்…:)

திருச்சியில் எல்லோரும் பரிந்துரைத்த, எல்லோர் வீட்டிலும் கட்டாயம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய அருமையான இந்த தீ ரண எண்ணெயை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். சென்னையிலும் இது கிடைக்கிறது. விவரங்கள் அடுத்த பகுதியில்…. இப்போ கை வலிக்கிறது. எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்… பை….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

28 comments:

 1. விரைவில் நலம் பெற ப்ரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 2. வணக்கம்
  எண்ணெயை பற்றிய விளம்பரம் நன்று... விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. இதைப்பற்றி தொடர் பதிவு எழுதும் அளவுக்கு, ஓரளவு குணமாகியுள்ளது கேட்க/பார்க்க எனக்கு மனதுக்குச் சற்றே ஆறுதலாக உள்ளது. விரைவில் முழுவதும் குணமாகட்டும். அதுவரை அதிகமாக STRAIN செய்து கொள்ள வேண்டாம், Please.

  ReplyDelete
 4. எதிர்பாராதது. சகோதரி முழு குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

  ReplyDelete
 5. sudu thani kudipathal noai etherpu sakthi kurium. intha link paaruga anatomictherapy.org/tatfbook-download.php

  ReplyDelete
 6. வணக்கம் சகோதரி.!

  இந்த நிலையிலும் தங்கள் நிலையை பதிவாக எழுதியதை படித்தேன். மனசுக்கு கஸ்டமாக இருந்தது.விரைவில் தங்கள் வேதனை குறைந்து நலமுடன் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  நட்புடன்.
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 7. அடடா.. டேக் கேர் !

  ReplyDelete
 8. டாக்டரிடம் காண்பித்து ஒரு டிடிஎஸ் ஊசி போட்டுக்கொள்ளவும். இது ஒரு முன் ஜாக்கிரதை செயலாகும்.

  ReplyDelete
 9. சீக்கிரம் சரியாகட்டும்.

  அடிபட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் TT போட்டுக் கொள்ளலாம். தண்ணீரில் நனைத்தது சரி, தோசை மாவெல்லாம் கூடாது. சில்வர் சல்படையசின் ஆய்ண்ட்மெண்ட் போடலாம்.

  காயங்கள் சீக்கிரம் ஆற ஆண்டிபயாடிக் எடுத்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
 10. விரைவில் குணமாகட்டும்...

  ReplyDelete
 11. விரைவில் குணமடைய வேண்டும்.மீண்டும் பதிவு எழுத வேண்டும்.

  ReplyDelete
 12. கவலை வேண்டாம்... விரைவில் குணமாகும்...

  ReplyDelete
 13. எங்கேப்பா என் பின்னூட்டத்தைக் காணோம்? :-)

  பரவால்லை, தேடி சிரமப்பட வேணாம். ஒண்ணுமில்லை, கவனமா இருங்கன்னு எழுதிருந்தேன், அவ்வளவுதான்.

  ReplyDelete
 14. இதுக்குதான் சொல்லுறது ஆத்துகாரர் வீட்டில் இல்லாத நேரத்தில் சமைக்க ஆள் வைச்சிக்கிடனும் என்கிறது. இதெல்லாம் நாங்க சொல்லி நீங்க எங்க கேட்க போறீங்க. ஹும்ம்ம்ம் கவனமா இருங்க

  ReplyDelete
 15. விரைவில நலம் பெறுவீர்கள் .........take care

  ReplyDelete
 16. கவனம், பத்திரம்....

  விரைவில் குணமடையும்....

  ReplyDelete
 17. ஆதி,

  முதலில் first aid ointment வாங்கி வச்சுக்கோங்க. அதைப் போட்டிருந்தால் எரிச்சலில் இருந்து தப்பித்திருக்கலாம். பெரியவர்கள்னாகூட பரவாயில்லை, ஏதோ தாங்கிக்கொள்கிறோம். ஆனல் சின்ன பிள்ளைகள் இருக்கும்போது கண்டிப்பாகத் தேவை.

  பதிவு வந்திருப்பதால் கொஞ்சம் குணமாகியிருக்கும் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 18. மிகவும் கஷ்டமாக இருக்குமே சகோதரி. விரைவில் குணமடையட்டும்.

  ReplyDelete
 19. சுடுதண்ணீர் கொப்பளம் பயங்கர எரிச்சலையும் வலியையும் தரக்கூடியது! வலியை பொறுத்துக்கொண்டு பதிவு எழுதிய உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது! விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 20. விரைவில் குணமடைவீர்கள் எவ்வளவு வலி என்பது உங்கள் பதிவில் தெரிகிறது பத்திரம்

  ReplyDelete
 21. இத்தோட பதிவு வேரெ போட்டிருக்கே. ஜாக்கிரதையம்மா. ஸரியாகிவிடும். வேலை செய்யாம முடியாது. என்னவோ போ. எனக்கும் கவலையாக யிருக்கு.. அன்புடன்

  ReplyDelete
 22. இப்போது பரவாயில்லையா ஆதி மேடம்? இந்த வேதனையிலும் பதிவு எழுதும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுவதா இல்லை கடிந்து கொள்வதா எனத் தெரியவில்லை. கவனமாய் இருங்கள்..

  ReplyDelete
 23. ஆறுதல் வார்த்தை சொன்ன அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 24. குணமாகிவிட்டதா? தண்ணில கண்டம் என்றத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நகைச்சுவைப் பதிவோ என்று எண்ணி வந்தால்.....சோகப் பதிவாகிவிட்டதே...அதனுடனேயே இந்தப் பதிவா....சூப்பர்தான் போங்க!!...

  ReplyDelete
  Replies
  1. குணமாகிவிட்டது சார். நான் இந்த பதிவை வெளியிட்ட போதே ஏறக்குறைய பத்து நாட்களாகி விட்டது....:))

   Delete
 25. விரைவில் நலம் பெற இறைவன் அருள் காட்டவேண்டுகிறேன்!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…