Monday, February 23, 2015

திருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு!!நேற்று திருவரங்கத்தில் அமர்க்களமாக நடைபெற்ற குட்டி பதிவர் மாநாடு பற்றிய பதிவு இது. ரஞ்சனிம்மா திருவரங்கம் வருவதாக சென்ற மாதம் தெரிவித்திருந்தார். இதையொட்டி திருச்சி பதிவர்கள் ஒன்றாக சந்திக்கலாம் என முடிவு செய்தோம். ருக்மணியம்மா நீண்ட நாட்களாக திருச்சி பதிவர்கள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரே 18ந்தேதி சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, ரஞ்சனிம்மா வருகை குறித்தும் பதிவர் சந்திப்பு குறித்தும் சொன்னதும், உடனே பயணத்தை ரத்து செய்து அவரது வீட்டிலேயே சந்திக்கலாம் என்று சொன்னதால் அவர் இல்லத்திலேயே பதிவர் மாநாடு ஏற்பாடானது.

மாலை 5 மணிக்கு எல்லோரும் அங்கிருக்க வேண்டும் என்றும் கிளம்புவது அவரவர் செளகர்யப்படி கிளம்பலாம் என்று திட்டம் தீட்டியானது. நானும் ரோஷ்ணியும் 4.30க்கு அங்கு செல்ல, அப்போது தான் வை.கோ சார், ராதா பாலு மேடம், தமிழ் இளங்கோ சார், கீதா மாமி எல்லோரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். எங்களை வரவேற்றனர் ருக்மணியம்மாவும், ரிஷபன் சாரும்..

தமிழ் இளங்கோ சாரையும், ராதா பாலு மேடத்தையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறையாக இருந்த போதிலும், வை.கோ சாரின் பதிவுகள் வாயிலாக பார்த்திருந்த காரணத்தால் மிகவும் பரிச்சயமானவர்கள் போன்று தான் தோன்றியது. எல்லோரும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தும், அறிமுகம் செய்து கொண்டும் பேசிக் கொண்டிருக்க, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சாரும் வந்தார். அடுத்து இந்த சந்திப்புக்கு காரண கர்த்தாவாய் இருந்த ரஞ்சனிம்மா அவரது கணவருடன் அங்கு வர, கூடவே மாதங்கி மாலியின் அப்பா திரு மாலி சாரும் அங்கு வருகை தந்தார்.

இந்தியா ஜெயித்து விட்ட சந்தோஷத்திலும், பதிவர் சந்திப்பு குறித்த சந்தோஷத்திலும் ”ஸ்வீட் எடு கொண்டாடு” என்று இனிப்புகளை பகிர்ந்து கொண்டு சுவைத்தோம். அடுத்து புகைப்பட படலம். க்ரூப்பாகவும், ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் என மாறி மாறி படம் பிடித்தோம். ஐந்து ஆண் பதிவர்களும், குட்டி பதிவரான ரோஷ்ணியை சேர்த்து ஆறு பெண் பதிவர்களும் என அந்த இடமே கலகலப்பாக இருந்தது. மெஜாரிட்டி இங்கு பெண்களே……:) ரோஷ்ணி தான் எங்களின் புகைப்பட கலைஞர்….:)


“ஆரண்யநிவாஸ்” சிறுகதை தொகுப்பை ராமமூர்த்தி சார் எல்லோருக்கும்  பரிசளிக்க, எனக்கு ஏற்கனவே ரிஷபன் சார் தந்து விட்ட காரணத்தால் என்னிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். ரஞ்சனிம்மா தன்னுடைய புத்தகங்களான ”மலாலா” மற்றும் ”விவேகானந்தரை” எல்லோருக்கும் கையெழுத்திட்டு பரிசளித்தார். ருக்மணியம்மா அவரது ”திருக்குறள் கதைகளை” பரிசளித்தார். ரோஷ்ணிக்கு கூடுதலாக சிறுவர் நெடுங்கதையொன்றையும் பரிசளித்தார்.


பதிவுகள் குறித்தும், அவரவர் குடும்பத்தை பற்றியும், அடுத்து எங்கு சந்திக்கலாம் என பல விஷயங்களை பேசினோம். ராதா பாலு மேடம் வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணியுடன் சிப்பியிலான குங்குமச்சிமிழ், பிள்ளையார், விஷ்ணு பாதம் போன்றவற்றை தாம்பூலத்துடன் வைத்து தர ரோஷ்ணிக்கு ஸ்பெஷலாக ஒரு பவுச்சில் காதணிகள், கழுத்துக்கு மணி, பேண்ட், க்ளிப் போன்றவற்றை தாம்பூலத்துடன் தந்தார்.

முதலில் கீதா மாமி உறவினரின் வருகையினால் சீக்கிரமே அங்கிருந்து கிளம்ப, நாங்கள் எல்லோரும் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ருக்மணியம்மா தன் கையினால் சமைத்து வைத்திருந்த சிற்றுண்டிகளான இட்லி, சாம்பார், சட்னி, உருளைக்கிழங்கு போண்டா, பால் இனிப்பு ஆகியவற்றை சுவைத்தோம். காபி என்ற பேச்சு துவங்கும் முன்னரே வழக்கம் போல எனக்கு வேண்டாம் என அலற, ரஞ்சனிம்மா ”காபி குடித்தேயிராத நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அற்புத தருணங்களை இழந்துவிட்டீர்கள்” என்றார்……:)) என்ன செய்வது!!!

சுமார் ஏழு மணியளவில் அங்கிருந்து நாங்கள் கிளம்பத் துவங்க ஒவ்வொருவராக விடைபெறத் துவங்கினர். ருக்மணியம்மாவும் எல்லோருக்கும் தாம்பூலம் தர பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக என்ன செய்தேன் தெரியுமா????


அலைபேசியில் தில்லிக்கு ஒரு அழைப்பை விடுத்து இனிமையான தருணங்களை என் துணையிடம் பகிர்ந்து கொண்டேன்…….:)))) மாலை சிற்றுண்டியே நிறைந்திருந்த காரணத்தால் இரவு ஆளுக்கொரு தம்ளர் பாலை குடித்து விட்டு உறங்கச் சென்றோம்.

இனிமையான மாலைப் பொழுது, சுவையான சிற்றுண்டி, மனதிற்கினிய மனிதர்கள் என எல்லாப் புகழும் ரஞ்சனிம்மாவுக்கே!! வை.கோ சார் தன்னுடைய பாணியில் இந்த சந்திப்பை பற்றி படங்களுடன் சுவையான தொடராக இன்று ஆரம்பித்திருக்கிறார்..

கீதா மாமி எழுதிய பதிவு - இதோ

ரிஷபன் சார் எழுதிய பதிவு - நட்பின் சந்திப்பு

தமிழ் இளங்கோ சார் எழுதிய பதிவு - ஸ்ரீரங்கம் - வலைப்பதிவர்கள் சந்திப்பு - 2015

ராதா பாலு மேடம் எழுதிய பதிவு - மூத்த பதிவர் ருக்மணி சேஷசாயி அவர்கள் வீட்டில் பதிவர் சந்திப்பு

ஆர்.ஆர்.ஆர் சார் எழுதிய பதிவு - ஸ்ரீரங்கம் பதிவர் மாநாடு!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


38 comments:

 1. ஆளுக்கொரு பதிவா? ஜமாயுங்க!

  ReplyDelete
  Replies
  1. இதுவரை ஏழு பேர் எழுதியுள்ளோம்.

   தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 2. ஹைய்யோ!!! நான் ரொம்பவே மிஸ் செஞ்சுட்டேனே:(

  அடுத்த முறை விடுவதில்லை:-)))))

  திருவரங்கப் பதிவர்களை சந்திக்கவே ஒரு ட்ரிப் வரப்போறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க! வாங்க! டீச்சர் ஏறக்குறைய 15 நாட்களுக்கு முன்பாவது உங்கள் வருகையைப் பற்றி சொன்னால் எல்லோரையும் ஒருங்கிணைக்க வசதியாக இருக்கும்.

   தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 3. ஆஹா, மிகவும் அருமையான அழகான நிறைவான பகிர்வு. சந்திப்பினில் கலந்துகொண்டு சிறப்பித்த தங்களுக்கும், குறிப்பாக தங்கள் குழந்தை ரோஷ்ணிக்கும் என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லோரையும் ஒன்றாக சந்தித்தது குறித்து எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி சார்.

   தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 4. //தமிழ் இளங்கோ சாரையும், ராதா பாலு மேடத்தையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறையாக இருந்த போதிலும், வை.கோ சாரின் பதிவுகள் வாயிலாக பார்த்திருந்த காரணத்தால் மிகவும் பரிச்சயமானவர்கள் போன்று தான் தோன்றியது.//

  :) மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. அன்புடன் VGK

  ReplyDelete
 5. அருமையான சந்திப்பு. மிக அழகாக விவரித்து இருக்கீங்க.
  //ரோஷ்ணி தான் எங்களின் புகைப்பட கலைஞர்….:)// வாழ்த்துக்கள்.

  எங்க அவங்க எடுத்த புகைப்படம் எல்லாம் . வெளியிடவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய கேமராவை கொண்டு செல்லாததால், செல்ஃபோனில் தான் படம் பிடித்தோம். அவை அவ்வளவு தரத்துடன் இல்லை. மேலும் வை.கோ சாரே பகிரட்டும் என்பதால் நான் ஏதும் இங்கு பகிரவில்லை....:)

   தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ரமா ரவி.

   Delete
 6. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பினைப் பற்றி சிறப்பாக எழுதியதற்கும் உடனடியாக வலைப் பதிவரான உங்கள் வீட்டுக்காரரிடம் தெரிவித்தமைக்கும் நன்றி. தங்கள் மகள் ரோஷ்ணி நிறைய படங்களை செல்போன் கேமராவில் எடுத்தார். தனது தந்தையைப் போலவே அவருக்கும் போட்டோகிராபியில் நல்ல ஆர்வம். வாழ்த்துக்கள். நானும் மற்றவர்களைப் போலவே இந்த சந்திப்பினை பற்றிய திரு V.G.K அவர்களது பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களை அன்று முதல் முறையாக சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.

   தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ சார்.

   Delete
 7. இனிய சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராமலஷ்மி.

   Delete
 8. மிக இனிமையாக நல்ல விளக்கமான விஷயங்களோடு பதிவு கொடுத்திருக்கிறீர்கள். இந்த க்ஷணம் ஸ்ரீரங்கத்தில் இருக்கக் கூடாதா என்று தோன்றியது. எவ்வளவு கலகலப்பாக இருந்திருக்கும். அதுவும் மிக சீனியர் பார்த்திவர் ருக்மணி சேஷசாயீ,ராதா பாலு இவர்களை எல்லாம் சந்தித்திருக்கலாமே என்ற ஏக்கம் பிடித்துக் கொண்டது. ரோஷனி எடுத்த படங்களைக் காணோமே.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சந்திக்கலாம் வல்லிம்மா.

   தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 9. சுருக்கமாக அதே சமயம் அனைத்தையும் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள். நேற்று அனைவரையும் பார்த்துப் பேச நேர்ந்ததில் ஒரு புத்துணர்ச்சியே உண்டானது. :))) மாமாவும் வந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருப்பேன். அது தான் முடியலை.

  ReplyDelete
 10. மறக்க முடியாத நினைவுகளை அப்படியே எழுத்தில் வடித்து விட்டீர்கள் !

  ReplyDelete
 11. Interesting get together... Interesting narrative...

  ReplyDelete
 12. குட்டி பதிவர் சந்திப்பா இருந்தாலும் அசத்திவிட்டீர்கள் போல! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 13. என்னங்க இப்படி பதிவர் மீட்டிங்கல கலந்து கொள்ளனும் என்றால் புத்தகம் போட்டு இருக்கணும் என்பது எழுதாத விதி ஆகிவிடும் போல.......அப்படி ஒரு விதி வந்தால் நான் யாரையும் மீட் பண்ண முடியாது போலிருக்குதே

  ReplyDelete
 14. என்னங்க எனக்கு மட்டும் அழைப்பு அனுப்பல இது சரியான ஒர வஞ்சனையாக இருக்கு...வெங்க்ட் சார் மட்டும் வந்திருந்தா எனக்கு அழைப்பு அனுப்பிச்சு இருப்பாரு.....

  ReplyDelete
 15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஆதி வெங்கட்....மறக்க முடியாத நினைவுகள்...

  ReplyDelete
 17. சகோதரி அவர்களுக்கு. நானும் இந்த சந்திப்பு குறித்த ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதில் உங்களது இந்த பதிவினையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 18. இனிய சந்திப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 19. பதிவர்கள் சந்திப்பை அற்புதமாக எழுத்தில் வடித்துவிட்டீர்கள். நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

  ReplyDelete
 20. " பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)" தங்களின்

  இந்த அறிமுகம் தான், பதிவர்கள் சந்திப்பில் என்னுடைய முகமைக்கு ஒரு அங்கீகாரம் ...மேலும் இந்த சந்திப்பிற்கு வருகை தரும் சில பதிவர்களை நான் அறிவேன் என்றதால் -( மாதங்கி -சென்னை சென்றிருந்ததால்-வர இயலாததால் ) நான் மட்டும் கூட 'ஆர்வத்துடன் ' (?) ஆஜராகிவிட்டேன் !

  மற்றும் பொதுவாகவே ' பதிவர்கள் ' யாவரும் முதற்கண் ஏழுத்தாளர்கள் என்ற காரணத்தினால்

  அவர்களுடைய உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் ஆர்வத்திற்கு ஒரு முக்கிய

  காரணம் ; நான் சிறிதும் ஏமாறவில்லை ! புகைப்பட session -க்கு பிறகு சில பதிவர்களின் சுய அறிமுகம் அதன் பிறகு திருமிகு.ருக்மணி சேஷசயீ அவர்களின் அன்பான உபசரிப்போடு , மிகவும் ருசியாான இட்லி-சட்னி,சாம்பார் ...ஆஹா நல்ல புஷ்டியான ஞாயிறு மாலை பொழுது ..இந்தாவாய்ப்புக்காக எல்லா பதிவர்களுக்கும் நன்றி..நன்றி ..

  மாலி.


  ReplyDelete

 21. சந்திப்புகள் மகிழ்வூட்டும்
  மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்
  சந்திப்புகள் பயன்தருமே!

  ReplyDelete
 22. ஆதி,

  நல்ல்ல்லா எஞ்ஜாய் பண்ணியிருக்கீங்கன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 23. முதலில் உன்பதிவைப்படித்து விட்டு மிகவும் ஸந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து ஓரிடத்தில் கூடினால் எவ்வளவு மகிழ்ச்சி என்பதை அனுபவிக்க முடிந்தது.. மனதால்தான்.
  நல்ல இனிமையான ஸந்திப்பு. அன்புடன்

  ReplyDelete
 24. பதிவர் சந்திப்பை மிக அருமையாக பதிவு செய்தீர்கள்.
  ரோஷிணி எடுத்த படத்தையும் பகிர்ந்து இருக்கலாம்.

  ReplyDelete
 25. ஆத்மார்த்தமான அன்போடு பதிவர் சந்திப்பு...
  அருமை.

  ReplyDelete
 26. ரொம்பவும் இனிமையான சந்திப்பு, ஆதி. எங்கள் நடுவில் நீங்கள் இளமையுடன் உலா வந்தது ரசிக்க வைத்தது. ரோஷ்ணி துறுதுறுவென்று புகைப்படங்கள் எடுத்து எல்லோரையும் அசர வைத்துக் கொண்டிருந்தாள். அவளது கலகல சிரிப்பு இன்னும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  ஆஹா! ராதா பாலு ரோஷ்ணிக்கு மட்டும் விதம் விதமாகப் பரிசளித்திருக்கிறாரே! ரோஷ்ணியைப் பார்க்கும்போது எனக்கு எனது இளமைக் காலம் நினைவிற்கு வந்தது. அவளுக்கும், உங்கள் இருவருக்கும் எங்களின் ஆசிகள்.

  ReplyDelete
 27. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
 28. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் தளத்தை அவரது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. உங்களது தளம் பற்றி நான்அறிவேன். பாராட்டுக்கள்.
  http://www.drbjambulingam.blogspot.com/
  http://www.ponnibuddha.blogspot.com/

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…