Tuesday, February 17, 2015

சதுரகிரியும் சில தகவல்களும்!மஹாசிவராத்திரியான இன்று இப்பதிவை எழுதுவது சிறப்பு என்று நினைக்கிறேன். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ”தொடத் தொட தங்கம்” என்ற நாவலிலும், ”அவள் ஒரு சாவித்திரி” என்ற நாவலிலும் சதுரகிரியைச் சுற்றியே கதை. அங்கு வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமியும், சித்தர்களும் கதை முழுதும் வியாபித்திருக்க, சதுரகிரியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கூகிளில் தேடினேன். இமயமலைக்கு அடுத்ததாக ஈசன் வசிக்கும் இடம் எனவும் தென்னந்தியாவின் கயிலாயம் என்றும் போற்றப்படும் சதுரகிரி எங்கே உள்ளது? தெரிந்து கொள்வோம் வாருங்கள்…மதுரையிலிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை என்ற இடத்தை அடைந்தால் அதுவே சதுரகிரியின் அடிவாரம் ஆகும். முதல் முறையாக ஏறுபவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகலாம் எனவும், அடிக்கடி செல்பவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகலாம் எனவும் சொல்லப்படுகிறது. மலை மேலே மின்சாரமோ, செல்ஃபோன் டவரோ கிடையாதாம். பெளர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

மலையே சிவரூபம் ஆதலால் காலணிகளை தவிர்த்து சிவ சிந்தனையோடு சென்று வருபவர்களுக்கு பயணமும் அதில் கிடைக்கும் அனுபவமும் ஆச்சரியமூட்டுவதாக அமையும் என்று சொல்லப்படுகிறது. அரிய வகை மூலிகைகளும், மரங்களும் இங்கு காணப்படுகிறது.

சித்தர்களைப் பற்றிய தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றது. 116 வயது வரை கூட வாழ்ந்துள்ளனர், கூடு விட்டு கூடு பாய்தல், இறந்தவனையும் பிழைக்க செய்தல், எப்பேர்ப்பட்ட நோயையும் குணமாக்குதல் என்று பல விஷயங்களை வாசித்தேன். சித்தர்கள் தங்கள் உண்டியை சுருக்கி ஆயுளை பெருக்குகின்றனர். நாம் அதற்கு எதிர்மாறாக செயல்படுகிறோம். உப்பு, புளி, காரத்தை முடிந்தளவு குறைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நான் வாசித்த சில தகவல்கள்:-

தினமும் ஒரு நெல்லிக்காய் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டுமாம். ஒருநாள் கூட தவறாமல் 1008 நெல்லிக்காய்களை நாம் சாப்பிட்டு முடிக்கும் போது வாழ்நாளில் நமக்கு கண்புரை வராதாம், தலைமுடி முதிராது, ஜலதோஷமே பிடிக்காது, பல்லும் விழுந்து பொக்கை ஏற்படாது, மூட்டுவலியும் வராது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிறியா நங்கை இலைகளையோ, வேர்த்தண்டையோ கைவசம் வைத்துக் கொண்டால் விஷப்பூச்சிகள் கிட்ட வரவே வராதாம்.

புங்கை மரக்கட்டையை கொளுத்தி பிடித்தால் அந்த புகைக்கு கொசு வரவே வராது.

அவுரிச் செடியை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டாலோ இல்லை இதன் சாற்றினை காயத்தின் மேல் பூசினாலோ காயம் ஆறும் என்றும், விஷக்காயங்கள் ஆறுவதோடு வெண் குஷ்டமும் குணமாகும் என்றும்,

புல்லாந்தியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதாகவும், வெயிலில் காயவைத்து பொடி செய்து கஷாயம் வைத்து 7 தடவை குடித்தால் தலைமுடியால் பாறையையும் கட்டி இழுக்கலாம் எனவும் உடம்பும் பொன்னாக மின்னும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மூலிகைகளின் சிறப்புகளையும் பயன்களையும் வாசிக்கும் போது எவ்வளவு ஆச்சரியம்.

ஒரு கோடி:-


சித்தர்கள் பற்றி நான் தேடிய போது கிடைத்த ஒரு கோவில் விழுப்புரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ”ஒரு கோடி” கிராமம். ஆமாங்க! ஊர் பெயரே ஒரு கோடி தான். அவ்வளவு சித்தர்கள் இங்கு வந்து பூஜித்துள்ளனராம். உலகிலேயே மிகச்சிறிய வாசல் உள்ள கோவில் என்ற பெயரும் இதற்குள்ளது. ஒரு கண்ணை வைத்து ஈசனை பார்க்குமளவு தான் வாசல். ஈசன் அபிராமேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மன் முக்தாம்பிகையாகவும் இங்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் பல சுவையான தகவல்களை இங்கு சென்று பாருங்கள்.

சதுரகிரியைப் போன்றே சிறப்புமிக்கது வெள்ளியங்கிரி. இது கோவையை அடுத்தே உள்ளது. திருவண்ணாமலையும் சித்த புருஷர்கள் வாழும் பூமி தான். 

இங்கேயெல்லாம் சென்று வந்தவர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படங்கள் உதவி -இணையம்


21 comments:

 1. அருமையானதகவல்கள் ஆதி.
  இணையத்திலும் நிறைய நண்பர்கள் போ ய் வந்திருக்கிறார்கள் . சித்தமருத்துவம் அருமையானது. இப்பொழுது அதற்கான மருந்தகங்களும் சென்னையில் இருக்கின்றன மிக நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 2. இன்று சிவராத்திரிக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு. படங்களும் அழகு. பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 3. நான் சிலகாலம் வத்ராப்பிலேயே வேலை பார்த்தும் மகாலிங்கமலை ஏறியதில்லை. அப்போது தோன்றவில்லை!

  ReplyDelete
  Replies
  1. கிட்ட இருக்கும் போது தோன்றாதோ என்னவோ! எங்கிருந்தெல்லாமோ ஸ்ரீரங்கத்துக்கு வருகிறார்கள். இங்கே வசித்தும் கோவிலுக்கு செல்வதே அரிதாகி விட்டது...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 4. சிவராத்திரிக்கேற்ற சிறப்பான‌ பதிவு..சதுரகிரி பற்றிய தகவல்களுக்கும் மூலிகை குறிப்புகளுக்கும் மிக்க நன்றிங்க..

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரப்பணிக்கு இடையிலும் தங்களது கருத்து கண்டு மகிழ்ந்தேன்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மேனகா.

   Delete
 5. சதுரகிரி மலை பற்றி அறியத் தந்த பகிர்வு... அதுவும் சிவராத்திரி அன்று சிறப்பு சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க குமார்.

   Delete
 6. இதுவரை இங்கெல்லாம் போனதே இல்லையேப்பா:(

  இந்திரா செளந்தர்ராஜன் கூட இதுவரை வாசித்ததே இல்லை. ஆனால் அவர் பேச்சைக் கேட்டேன் மதுரை பதிவர் மாநாட்டில்.

  ReplyDelete
  Replies
  1. டீச்சர் போகாத ஊரா!!! அடுத்த தடவை போயிட்டு வாங்க டீச்சர்...:)

   நான் திருச்சி வந்த பின் தான் அண்டை வீட்டு உபயமாக வாசிக்கத் துவங்கினேன் இவரின் எழுத்துக்களை...இந்திரா செளந்தர்ராஜன் கதைகளில் சித்தர்கள் வாழ்க்கை, சரித்திரம், விறுவிறுப்பு என்று எல்லாமே இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்துப் பாருங்க டீச்சர்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 7. பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் பயன் தரும் தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 8. சிறப்பான தகவல்கள். நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமா மேடம்.

   Delete
 9. கிட்டத்தட்ட மூணு வருடத்துக்குத் தொடர்ந்து நெல்லிக்காய் கிடைக்காது என்பதில்தான் விஷயம் உள்ளதா? புது நெல்லிக்கு சீசன் இல்லாத சமயத்தில் எங்கு போவது?

  ReplyDelete
  Replies
  1. இப்போ தான் நெல்லிச்சாறு எங்கும் கிடைக்கிறதே... அதை வாங்கி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். நானும் சில மாதங்கள் குடித்திருக்கிறேன்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

   Delete
 10. சதுரகிரி போகணும்னு ஒரு ஆசை இருந்தது. ஆனால் இப்போப் போக முடியாது. மலை ஏற மருத்துவர் தடை விதிச்சிருக்கார். :( நீங்க போயிட்டு வந்துதான் எழுதி இருக்கீங்களோனு நினைச்சேன். என்றாலும் பதிவு அருமையாகவே இருக்கிறது. எங்கள் நண்பர்கள் போய் வந்திருக்காங்க என்றாலும் அனுபவங்கள் பகிர்ந்தது இல்லை. :)

  ReplyDelete
  Replies
  1. ஈசனின் அருள் கிடைத்தால் அடுத்த முறை இவரை போயிட்டு வரச் சொல்லியிருக்கேன். பார்க்கலாம்.
   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   Delete
 11. சிவராத்ரியன்று இப்பதிவு படித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்கள் வீட்டில் தொடர்ந்து நாட்டிய ரிஹர்ஸல் நடந்து வந்ததால் பதிலெழுத முடியவில்லை. அநுதினமும் மனதில் நினை தரு சதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே என்ற என்ற சதகஅடிகள் படித்தது ஞாபகம்
  வந்து அதையே சொல்லிக்கொண்டிருந்தேன். நன்றி உனக்குதான். அன்புடன்

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…