Tuesday, February 10, 2015

சந்தேஷ் - ருசிக்கலாம் வாங்க!சமீபத்தில் குடும்ப நண்பரின் மகனுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த வாரம் மணமக்களுக்கு விருந்து கொடுக்கலாம் என முடிவு செய்தேன். பாயசம் போக இலையில் பரிமாற வழக்கமாக செய்யும் மைசூர்பாகு போல் வேண்டாமென பாலில் செய்யும் இனிப்பாக இருக்கட்டும் என முடிவெடுத்தேன்.

நான் வழக்கமாக தொடரும் சமையல் தளமான GAYATHRI’S COOKSPOTல் தேடியதில் பெங்காலி இனிப்பான சந்தேஷ் என்னைக் கவர்ந்தது. செய்வதற்கும் எளிமையாக இருக்கவே குறித்துக் கொண்டேன். முதலில் 1 லிட்டர் பாலில் பிஸ்தா சந்தேஷ் செய்து அதை படம்பிடித்து முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு கருத்து சொன்ன துளசி டீச்சர் கலர் சேர்த்திருக்கலாமே எனச் சொல்ல, அதே சமயம் 1 லிட்டர் பாலில் சிறிய அளவிலான 7 சந்தேஷ் தான் வந்தது.
 பிஸ்தா சந்தேஷ்

மணமக்களோடு உறவினர் சிலரும் சேர்ந்து வருவதால் கூடுதலாக ஒன்று கேட்டால் கூட என்ன செய்வது என்று மீண்டும் அடுத்த நாள் 1 லிட்டர் பாலில் பாதாம் சந்தேஷ் செய்தேன். பாதாம் என்பதால் மஞ்சள் கலரும் துளி சேர்த்தேன். தூள் போங்க….

பகிர்ந்து கொண்ட காயத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படிப்படியான செய்முறை படங்களுடன் நீங்கள் அவர்களின் தளத்தில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

பால் – 1 லிட்டர்
சிட்ரிக் ஆசிட்– ½ தேக்கரண்டி (எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்)
சர்க்கரை – அரை கப்
பிஸ்தா (அ) பாதாம் – கால் கப்

செய்முறை:-

பாலை காய்ச்சிக் கொள்ளவும். பொங்கி வரும் போது தண்ணீரில் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து பாலில் விட்டு அடுப்பை அணைக்கவும். ஒரு கரண்டியால் மெள்ளக் கிளறி விடவும். பால் திரிந்து பனீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்திருக்கும். இதை மெல்லிய துணியில் வடிகட்டி சிறிது நேரம் தண்ணீரை வடிய விடவும். ஒரு வாணலியில் சர்க்கரையையும் பனீரையும் சேர்த்து ஐந்து நிமிடம் போல வதக்கவும். சர்க்கரை கரைந்து பனீரும் ஒன்றாக சேர்ந்திருக்கும். அடுப்பை நிறுத்தி ஆற விடவும்.

மிக்சி ஜாரில் பிஸ்தா பருப்பை பொடித்துக் கொள்ளவும். அதை தனியே வைத்துக் கொண்டு, அதே ஜாரில் பனீர் கலவையை விட்டு விட்டு அரைக்கவும். இப்போது அந்த பனீர் கலவையுடன் பிஸ்தா தூளையும் சேர்த்து பிசைந்து வேண்டிய வடிவத்தில் செய்து கொள்ளலாம். மேலே அலங்கரிக்க பொடியாக நறுக்கிய பிஸ்தாவை தூவினால் சந்தேஷ் தயார்.

பாதாம் சந்தேஷ்

செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், ருசியில் அபாரமாகவும் இருந்தது. தில்லியில் கொட்டிக் கிடக்கும் இனிப்புகளில் சந்தேஷை பலமுறை பார்த்திருந்தும் ருசித்ததில்லை. ஆனா பாருங்க! நானே செய்து தான் ருசிக்கணும்னு இருக்கும் போது மாற்றவா முடியும்!

இந்த சந்தேஷை நீங்களும் செய்து ருசிக்கலாமே…

விருந்துக்காக நான் செய்த எளிமையான சமையல் மெனு இதோ…குடமிளகாய், முள்ளங்கி, காரட் போட்டு அரைத்து விட்ட சாம்பார்
தக்காளி ரசம்
உருளைக்கிழங்கு கறி
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
சேமியா பாயசம்
கொண்டக்கடலை வடை
அப்பளம்
இவற்றுடன் சாதம், தயிர் மற்றும் ஊறுகாய்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

34 comments:

 1. வணக்கம்

  சமையலை திறமையாக அசத்தி விட்டீர்கள்... செய்முறை விளக்கத்துடன்... பார்த்தேன் எடுத்து சுவைக்கமுடியாமல் உள்ளது...பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.

   Delete
 2. வணக்கம்
  த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.

   Delete
 3. படத்தில் பார்த்தாலே ‘பாதாம் சந்தேஷ்’ சந்தோஷம் அளிக்குது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 4. ஆதி,

  பேரே வித்தியாசமா இருக்கு. பனீர் இருந்தால் நொடியில் தயாராயிடும்போல. கலர் சேர்த்த பிறகு சூப்பராத்தான் இருக்கு.

  கால சாப்பாடே இன்னும் தயாராகல, அதுக்குள்ள மெனுவுடன் இப்படி விருந்து சாப்பாட்டைக் காட்டி ...... அடுப்பை நோக்கி ஓட வச்சிட்டீங்களே !

  ReplyDelete
  Replies
  1. பெங்காலி இனிப்பு சந்தேஷ்....பனீர் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். கடையில் வாங்கியது சரிப்படாது என்று தோன்றுகிறது.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.

   Delete
 5. முதல்ல சந்தோஷ்னு படிச்சிட்டேன்.... ஹா ஹா...

  வீட்டம்மாவுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷ்....:)) அது சரி!

   சொல்லிக் கொடுங்க....:) தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சரவணன்.

   Delete
 6. சந்தேஷ் மிகவும் பிடித்த ஒன்று,அருமை..கடைசி படம் விருந்து சமையல் அட்டகாசம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மேனகா சாத்யா.

   Delete
 7. சுவையான குறிப்பு! உங்கள் விருந்து மெனு சூப்பர்! கொண்டகடலை வடை பார்த்தாலே மிகவும் ருசியாக இருக்கும் என்று தெரிகிறது!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் ருசியானதும், நெடுநேரம் வரை க்ரிஸ்பியாகவும் இருக்கும்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

   Delete
 8. Nice Spread Adhi.. I love the vadai! U make it perfectly..noticed in your pongal post as well! perfect shape n looks crispy, delicious!! :)

  ReplyDelete
  Replies
  1. பொங்கல் போஸ்ட்டில் போட்டது முப்பருப்பு வடை மகி. கொண்டக்கடலை வடை சென்ற வருடம் போகியன்று செய்து பகிர்ந்திருந்தேன். இங்கே இருக்கிறது அது...

   http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_13.html

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மகி.

   Delete
 9. சந்தேஷ் மிகவும் சந்தோஷ்... நாங்களும் உங்கள் செய்முறைப்படி செய்ய முயல்கிறோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 10. அருமையான ஸ்வீட் ...முயற்சிக்க வேண்டும் ..பகிற்விற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சுலபமானது. செய்து பாருங்கள் நன்றாக வரும்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அனுராதா.

   Delete
 11. சந்தேஷ் குறிப்பு மிகவும் நன்றாக உள்ளது. எனக்குத் தெரிந்த வகையில் அரிசிமாவு சேர்ப்பதாகச் சொன்னார்கள். அது மாவு சேர்ப்பதால் மாவிளக்கு ருசி வருவதுபோலத் தோன்றியது. இது சூப்பர் ஐடியா. பிஸ்தா,பாதாம் சேர்ப்பதால் பாலுடன் நன்றாகத்தான் இருக்கும். படங்களும் ரொம்பவே அழகானபதிவு. சில அழகான மோல்டுகள் கிடைக்கிரது. அதிலும் வைத்து தயாரிக்கலாம். மனம் கவர்ந்த பதிவு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அரிசிமாவா!!! அடுத்த தடவை மோல்ட்களில் தயாரித்து விடலாம்....:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

   Delete
 12. எளிதாக இருக்கிறது.

  சமையல் விருந்து மெனு ஈர்க்கிறது.


  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 13. அருமையான இனிப்பு. விருந்து மெனு சூப்பர். கொண்டை கடலை வடை செய்முறையையும் விளக்குங்களேன் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. கொண்டக்கடலை வடையை முன்பே பகிர்ந்திருக்கிறேன் இங்கே...

   http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_13.html

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமா ரவி மேடம்.

   Delete
 14. ஸ்ரீராம்! அடுத்தமுறை சென்னைக்கு உங்க வீட்டிற்கு வரும்போது செய்து கொடுங்கள், எளிதாக இருக்கிறது என்று கருத்துரை போட்டால் போதுமா? :)
  விருந்து மென்யூ ரொம்பவும் கவர்ந்தது, ஆதி! சந்தேஷ் கலர்புல்லாக வந்திருக்கிறது. முதல் தடவையே நன்றாக வந்துவிட்டால் சந்தோஷத்திற்குக் கேட்கவே வேண்டாம்!
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அதானே! ஸ்ரீராம் சார் செய்து தயாராய் வைத்திருங்கள்....:) வந்து விடுகிறோம்...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 15. கேட்க எளிதாக இருக்கிறது ஆதி! செய்து பார்த்தால் தான் தெரியும். செய்து பார்க்கிறேன்...

  மெனு அருமை...

  ReplyDelete
  Replies
  1. எளிது தான் தியானா. செய்து பாருங்கள்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 16. சந்தேஷ் மிக அருமை, விருந்தும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜலீலாக்கா.

   Delete
 17. வந்தவர்களுக்கு அளவுச் சாப்பாடுதானா? செய்முறை அருமை.

  ReplyDelete
  Replies
  1. //வந்தவர்களுக்கு அளவுச் சாப்பாடுதானா?//...............:))))

   என்னவரும் படத்தை பார்த்து அப்படித்தான் சொன்னார்.....:))

   வந்தவர்களுக்கு இலையில் தான் பரிமாறினேன். ஆனால் அவர்களை உட்கார வைத்து விட்டு படமெடுப்பது சாத்தியமில்லை...:)) அதனால் தான் அவர்கள் வரும் முன்பே படமெடுக்க வசதியாக கிண்ணங்களில் விட்டு எடுத்தேன்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தெல்லைத் தமிழன்.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…