Monday, January 5, 2015

முத்தங்கி சேவை!

இன்று வெற்றிகரமாக இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் மூலவர் ரங்கநாதரை முத்துக்களால் ஆன அங்கியுடன் தரிசனம் செய்தாச்சு.. 10.30 மணிக்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு 12.30 மணிக்கு தரிசனம் செய்தேன். ஆனா இரண்டு நிமிடம் கூட நின்று பார்க்கவிடவில்லை...:( 

திருவடியை பார்த்து விட்டு திருமேனியை பார்ப்பதற்குள் கருவறைக்குள்ளேயே இருக்கும் காவல்துறை பெண்மணிகள் இழுத்து வெளியே தூக்கி வீசிடறாங்க...:(

அதிலும் ஒரு காவல் துறை பெண்மணிக்கு என்னமோ சாமி வந்துட்டா மாதிரி போயிறு! போயிறு! போய்கிட்டே இரு! வேண்டிகிட்டது போறும்! உன் குடும்பமே நல்லாயிருக்கும்... பேரன் பேத்தி வரை நல்லா இருப்பாங்க! நடையை கட்டு என்று தொடர்ந்து அலறல்!

இங்கு நடக்கும் எல்லா கூத்துகளையும் புன்சிரிப்போடு பார்த்துட்டு கொண்டு ரங்கன் இருக்கார்... அவருக்கென்ன...:))

நடுவில் நம்பெருமாளின் புறப்பாடு. மூலஸ்தானத்திலிருந்து மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார் ராப்பத்து உற்சவத்துக்காக.. கூண்டுக்குள்ளேயே நின்று தரிசனம் செய்தேன். பெருமாளை தரிசனம் செய்த கையோடு அந்த வரிசை பரமபத வாசலை நோக்கி சென்றது. இன்றும் புண்ணியத்தை தேடிக் கொண்டாச்சு.

சந்திர புஷ்கரணி அருகில் நம்பெருமாள் முத்துக் கொண்டையோடு மீண்டும் தரிசனம்...அடுத்து கோதண்டராமர் குடும்பத்தை முத்தங்கியில் தரிசனம். சீதையின் வெல்வெட் பாவாடை ஜோர்.... :)

ஆண்டாள் கண்ணாடி அறை சேவையில் இன்றைய பாசுரப்படியும், காகாசுரன் சரண் புகுதலும் அழகா வடிவமைச்சிருந்தாங்க. எல்லாவற்றையும் பார்த்துட்டு வந்தாச்சு...ஆண்டாளின் கொலுசும், முத்து மாலையும் கொள்ளை அழகு போங்க...

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

13 comments:

 1. இத்தனை சிரமங்களை மீறி ரங்கரைப் பார்த்தாச்சு.... விடுங்க!

  :))))

  ReplyDelete
 2. முத்தங்கி சேவை பற்றிய பதிவுக்கு நன்றி. திருப்பதியில் ஜரகண்டியை எடுத்து விட்டார்கள். ஸ்ரீரங்கத்தில் கொண்டு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

  சென்ற ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்று வந்தேன். இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டும் சேர்ந்து கொண்டதால் மக்கள் வெள்ளம். செல்லவில்லை.

  த.ம.3

  ReplyDelete
 3. ஹைய்யோ!!! வாசிக்கும்போதே...மனசுக்குள் பரவசமா இருக்கு. கூடவே ஒரு ஏக்கமும்.
  உங்கள் கண்கள் வழியாகப் பார்க்க முடிஞ்சது, இப்போ!

  எம்பெருமாளே...... நீர் நல்லா இரும்!

  ReplyDelete
 4. வர்ணனை அருமை. தங்களின் ஆதங்கம் புரிகிறது.

  ReplyDelete
 5. ரம்மியமான தரிசனம்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இப்போதெல்லாம் இது மாதிரி பெரிய கோயில்களில் சாமி கும்பிடச் சென்றால் இது போன்ற ஆசாமிகளின் தொல்லை பொறுக்க முடியவில்லைதான்!

  ReplyDelete
 7. எப்படியோ தரிசனம் கிடைத்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. இருந்த இடத்திலிருந்தே முத்தங்கி தரிசனம் கண்டேன். கண் கொள்ளாக் காட்சியது. இம்மாதிரி இலவச தரிசனங்கே என்னைப் போன்றோறுக்கு கண்டரியானது கண்டேன்தான். அழகு வர்ணனை.அன்புடன்

  ReplyDelete
 9. பெருமாளை நாங்களும் தரிசித்த ஆனந்தம் ..வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. கருத்து தெரிவித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள் பல..

  ReplyDelete
 11. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் தோழி !

  ReplyDelete
 12. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…