Thursday, December 4, 2014

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!!!!ரொம்ப நாளா மக்குபுள்ளையாவே இருந்த நான், இப்போ பாஸாயிட்டேன்…..:) என்ன பரீட்சை? அப்படின்னு தானே கேட்கறீங்க…. இருங்கஇருங்க…. அதுக்குள்ள ஐஏஎஸ் பரீட்சை அளவுக்கு யோசிச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல…..:) ”அனைவருக்கும் வங்கி கணக்குஎன்று பிரதமர் ஒருபுறம் அறிவுறுத்திக்   கொண்டிருக்கிறார், ஆனா பாருங்க அதைவிட வேற ஒரு அக்கவுண்ட் ரொம்ப முக்கியம் என்று அவருக்கு தெரியவில்லை. வங்கி கணக்கு இல்லன்னா கூட நீங்க இந்திய பிரஜை இல்லன்னு யாரும் சொல்லப் போறதில்லை.

ஆனா பாருங்க. FACEBOOK ல் அக்கவுண்ட் இல்லன்னா அது ஏதோ வேற்றுகிரக ஐந்து மாதிரி ஆகிவிடுகிறோம். வடிவேலுவை ஒரு படத்தில்இந்த வேலைக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான்னுசொல்ற மாதிரி எந்த பக்கத்துக்கு சென்றாலும் அங்க முகப்புத்தக இணைப்பு இருக்கும். கடவுச்சொல்லை சொல்லு இல்லாட்டி திரும்பி போயிறு என்று மிரட்டும். நானும் இவ்வளவு நாளா அந்த பக்கமெல்லாம் போகாம ஜிமெயிலுக்குள்ளேயே சுத்திகிட்டு இருந்தேன்….:)

எதற்கு முகப்புத்தக இணைப்பு, தேவையில்லாத தொந்தரவுகள் வரலாம், என்று அறிவுரைகள். தொலைக்காட்சியை பார்த்தால் விளம்பரங்களில், சீரியல்களில் என்று எல்லாவற்றிலும் எங்களது ஃபேஸ்புக் இணையத்தள முகவரி என்று போடுவார்கள். எங்கு சென்றாலும் பேசுபவர்களிடையே இந்த பேச்சு கட்டாயமாய் இருக்கும். ஃபேஸ்புக் பற்றி பேசாதவர்கள் பாவம் செய்தவர்கள் போல் கருதப்படுவார்கள். பதிவுலகிலும் தொடர்ந்து எழுதி கலக்கி கொண்டிருந்தவர்கள் பலர் திடீரென்று காணாமல் போனார்கள்….:(

சமீபத்தில் பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அவர்களும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருப்பதாக சொல்லி உங்கள் முகவரியைத் தாருங்கள் என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகள் வேறு அம்மா நீ மட்டும் தான் ஃபேஸ்புக்கில் இல்லாத ஆள்எல்லாரும் வெச்சிருக்காங்க என்று ஏதோ நான் ஒரே கிளாஸிலேயே நான்கு வருஷம் உட்கார்ந்து படிக்கிற மக்குபுள்ள போல் சொன்னாள்…..:)

ரோஷத்தில் நானும் ஓப்பன் செய்து விட்டேன். இந்த சமுத்திரத்தில் நானும் நீச்சலடிக்க துவங்கிவிட்டேன். என்னவரே எனக்கு முதல் நண்பரானார்….:) பிறகு சிலருக்கு நான் அழைப்பு விடுக்க அவர்களும் உறுதி செய்தார்கள். அது போல் பலரும் எனக்கு அழைப்பு விடுக்க நானும் நட்பாக்கி கொண்டேன். வலைப்பூவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒன்று அதிகமானாலே பெரிய விஷயமாகி விட்ட நிலையில் இங்கோ ஏகப்பட்ட நட்புகள்……:)) காணாமல் போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த பதிவர்கள் இங்கு தான் தினந்தோறும் தங்கள் அப்டேட்ஸை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்….:)

என்னுடைய கல்லூரி கால நட்புகள் இங்கு கிடைப்பார்களா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஃபேஸ்புக்கின் அர்த்தத்தை புரிந்து கொண்டு பலர் தங்களின் முகத்தை போட்டுக் கொண்டிருக்க, சிலர் என்னைப் போல் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்…..:) இப்போ தான் ஆரம்பித்திருப்பதால் ஒவ்வொருநாளும் வேதாளம் விக்கிரமாத்தித்தனிடம் கேள்விகளை கேட்பது போல், நானும் என்னவரிடம் கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இனிமே ஒரு வீட்டுக்கு மருமகளா போகணும்னா, பாடத் தெரியுமா? சமைக்கத் தெரியுமான்னு கேட்க மாட்டாங்க…:) ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் இருக்கா? What’s app ல மெசேஜ் அனுப்புவியா? என்று கேட்டாலும் கேட்பாங்க போல! :)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


19 comments:

 1. ஆதி நீங்களாவது வலைப்பூ முகப்புத்தகம் இரண்டிலும் கவனம் சொலுத்துங்க

  ReplyDelete
 2. வாங்க ஆதி :) பூங்கொத்துடன் வரவேற்கிறோம் FB க்கு :)
  ப்ளாகில் காணமா போனவங்க பல பேர் அங்கேதான் குடியிருக்காங்க :)

  ReplyDelete
 3. Welcome to the new world. Use FB also to communicate like your favourite blog. We are ecpecting more. All the best.

  ReplyDelete
 4. ஆதி,
  இன்றையக் காலக் கட்டடத்தில், மாப்பிள்ளையும், பெண்ணும் face புக் கில் நட்பாகி, அவர்கள் நட்புகள், அதன் மூலம் ஒருவர் மற்றவரின் கடந்த காலத்தைப் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்கிறார்கள்.

  ReplyDelete
 5. ஃபேஸ்புக் அக்கவுண்ட் அவ்வளவு பெரிய விஷயமா என்ன? அட, எனக்குத் தெரியாமல் போச்சே! நான் பாட்டுக்குத் தேமேன்னு இருக்கேன் அங்கே!

  ReplyDelete
 6. அந்த அக்கவுன்ட்ல இருந்து கடன் கேட்டா தருவாங்களா?

  ReplyDelete
 7. ஶ்ரீராம் குடித்தனமே முகநூலில் தான்! :P நான் குழுமத்துக்காக முகநூலுக்கு அவ்வப்போது வருவேன். :) அப்படி ஒண்ணும் சுவாரசியமாத் தெரியலை. ஆனால் பலருக்கும் முகநூல் தான் முக்கியமா இருக்கு. :)

  ReplyDelete
 8. ஆனாலும் எப்போதும் கவனம் தேவை...

  ReplyDelete
 9. வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. DD சொல்வது கவனத்தில் வைக்கவும். வெல்கம்.ஆதிமா. ஜனவரியிலிருந்து பணக்கணக்கு வைக்கணும்னு தகவல் வந்தது. அப்படி இருந்தால் மீண்டும் கூலிள் ப்ளஸும் ப்ளாகும் தான் அடைக்கலம்.

  ReplyDelete
 11. நான் கூட இருக்கிறேன் தெரியுமா? அன்புடன்

  ReplyDelete
 12. ஜனவரியிலே இருந்து பணக் கணக்கா? சாமியோவ், முகநூலே வேண்டாம். :)

  ReplyDelete
 13. ஏதோ நான் ஒரே கிளாஸிலேயே நான்கு வருஷம் உட்கார்ந்து படிக்கிற மக்குபுள்ள போல் சொன்னாள்…..:) // ரோஷ்ணிக்கு நன்றி !

  ReplyDelete
 14. facebook உலகிற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் சகோதரி.

  ReplyDelete
 15. வாங்க,வாங்க, வலைத்தளத்தை மறக்காமல் இருந்தால் சரி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. கருத்தும், வரவேற்பும் தெரிவித்துள்ள நட்புகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 17. வாங்க ஆதி அங்கயும் அடிகக்டி பேசிக்கலாம்
  jaleelakamal en id add pannikkangka

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் ஆதி மேடம். நீங்களும் கடல்ல குதிச்சிட்டீங்க.
  நீங்களாவது இரண்டு துடுப்புகளையும் விடாமல் பிடித்து கரையேறிடுங்க.
  நானெல்லாம் பாதியிலேயே மூழ்கிப் போயிட்டேன்.
  தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…