Friday, December 19, 2014

உடுப்பி சாம்பார்!





விஜய் தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும்சமையல் சமையல்பகுதியில் திரு வெங்கடேஷ் பட் அவர்களின் குறிப்புப்படி செய்து பார்த்த சாம்பார். ஆனால் சற்று மாற்றங்களுடன்….:)  அவர் செய்தது உடுப்பி கோவிலில் பரிமாறும் சாம்பாராம்.

தேவையானப் பொருட்கள்:-

குடமிளகாய், முள்ளங்கி, கேரட் தலா 1
புளிக்கரைசல் – ½  கப்
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
வேகவைத்த துவரம்பருப்பு – ½ கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்தாளிக்கத் தேவையான அளவு

அரைக்க:-

தேங்காய்த்துருவல்அரை கப்
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
வரமிளகாய் – 3

செய்முறை:-

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, காய்களை சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின் வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும். புளிக்கரைசலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். காய் வெந்த பின் அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பருப்பை சேர்க்கவும் அடுப்பை குறைந்த தணலில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான மணமான உடுப்பி சாம்பார் தயார்.
எப்போதும் தனியா, கடலைப்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் முதலியவற்றை எண்ணெய் சேர்த்து வறுத்து தேங்காயுடன் அரைத்து செய்வேன். இது பச்சையாக தனியா, சீரகம் போன்றவற்றை அரைப்பதால் சுவை அருமையாக உள்ளது. கொஞ்சம் மோர்க்குழம்பை நினைவுபடுத்துகிறது….:)



இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்ற எல்லாவற்றுடனும் ஒத்துப் போகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

பின்குறிப்பு:-

பட் அவர்கள் பருப்பு சேர்க்கவில்லை. நான் சேர்த்துள்ளேன்

அதே போல உடுப்பி சாம்பாரில் பூசணிக்காய், வாழைக்காய், பலாக்காய் முதலியவற்றை சேர்ப்பார்களாம். நான் என்னிடமிருந்த காய்களை சேர்த்தேன்.

அங்கு வெல்லம் சேர்ப்பார்களாம். நான் அதை தவிர்த்துவிட்டேன்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சமையல் எண்ணெய் சேர்த்துள்ளேன்.

அவர் செய்த “உடுப்பி சாம்பாரின் காணொளிகீழே....




மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


18 comments:

  1. செய்துடுவோம். வறுத்து அரைத்துப் பருப்புச் சேர்க்காமல் ராயர் குழம்பு என்று வைப்பதுண்டு. இது வறுக்காமல் செய்யணும். செய்து பார்த்துடலாம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. காணொளியுடன் பகிர்ந்த விதம் அருமை
    செய்து பார்த்துவிடுகிறோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுவையும் மணமும் மிக்க உடுப்பி சாம்பார் அருமை..

    ReplyDelete
  4. பருப்பு சேர்க்காமல் எப்படி சாம்பார் வைப்பது?

    ReplyDelete
  5. உடுப்பி சாம்பாரின் எப்போதும் வெல்லம் நிச்சயம் இருக்கும். ஆனால் சாமான்களை வறுக்காமல் பச்சையாக அரைத்துப்போடுவதைப்பற்றி இப்போது தான் அறிகிறேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. டிவியில் பார்ப்பதுபடி சமைத்தால் வாயிலே வைக்க முடியாது அதை பார்த்து நமது கைவண்ணத்தை கலந்து செய்தால் அருமையாக வரும்.. அப்படிதான் நானும் செய்வேன் நீங்களும் செய்து இருக்கிறீர்கள் குட்

    ReplyDelete
  7. உடுப்பி சாம்பார் சில மாறுதலுடன் அருமை.

    ReplyDelete
  8. என் அருகில் திருமணம் நிச்சயமான நண்பர் சொல்கிறார்.. அவர் உட் பிக்கு உடுப்பி சாம்பார் ரெசிபி அனுப்பப் போகிறாராம் !

    ReplyDelete
  9. வணக்கம்
    அம்மாவிடம் சொல்லி செய்து பார்க்கிறேன்... விளக்க குறிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. என் மகனுக்கு உடுப்பி சாம்பார் ரொம்பப் பிடிக்கும். அவன் பிறந்த நாளுக்கு என்ன கொடுப்பது என்று முழித்தபோது உங்கள் பதிவைப் பார்த்தேன். இதையே அவனுக்கு பரிசாகக் கொடுக்கப் போகிறேன். பதிந்ததற்கு நன்றி. ஆமாம்.. அதில் நிறைய மாறுதல்கள் செய்ததால், மேம்படுத்தப் பட்ட உடுப்பி சாம்பார் என்று இதை நீங்கள் ஏன் சொல்லக் கூடாது?

    ReplyDelete
  11. செய்து பார்த்து சொல்கிறேன். அந்த அவரைக்காய் பொரியலை அப்படியே இங்க அனுப்புங்க..என் ஃபேவரிட்!! :)

    ReplyDelete
  12. நாங்களும் செய்து பார்த்து விடுகிறோம்... நன்றி...

    ReplyDelete
  13. படிக்கவே சுவையாக உள்ளது!!

    ReplyDelete
  14. உடுப்பி சாம்பாரை அபுதாபியில் செய்து பார்த்து விடலாம்...

    ReplyDelete
  15. உடுப்பி சாம்பார் உங்க செய்முறைப்படி செய்தால்தான் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. பருப்பு சேர்க்காமல் சாம்பார்? ம்ஹூம்... வீட்டில் யாருக்கும் இறங்காது. அப்புறம் அந்த அவரைக்காய் பொரியல்... மகிக்கு நானும் போட்டி... பார்த்தாலே நாவூறுகிறது.

    ReplyDelete
  16. அரைத்து செய்வதே சுவை அதிகம் தான் சூப்பராக இருக்கு

    ReplyDelete
  17. நான் உன் ஸாம்பாரை லேட்டாகப் பார்த்தேன். உடுப்பி போயிருந்தபோது சாப்பிட்டது ஞாபகத்துக்கு வந்தது. அது கொஞ்ஜம் இனிப்பும்,காரமுமாக கெட்டியாக இருந்தது. உன்னிது சன்னாகிதே. நன்னாயிருக்கு. அன்புடன்

    ReplyDelete
  18. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…