Monday, December 1, 2014

மணமாலையும் மஞ்சளும் சூடி....



சமீபத்தில் வழக்கமாக செல்லும் பேன்சி ஸ்டோர்க்கு சென்றிருந்தேன். அங்கு இந்த வெற்றிலையை பார்த்தேன். கடைக்காரர் “அக்கா எடுத்துக்கோங்க” என்று ஒன்று தந்தார்....:) வெற்றிலையில் மஞ்சள், குங்குமம், சுவாமி விக்கரகம், ரோஜா என்று வைத்து அழகாக இருந்தது. தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க ஏற்றவை. வெற்றிலை இப்போது போட்டுக் கொள்வது குறைந்து விட்டது. வெறுமனே வாடிப் போய் தூக்கிப் போடுவதற்கு பதிலாக இப்படி கொடுத்தால் நன்றாக இருக்கும் தான். முன்பு பிளாஸ்டிக் வெற்றிலையில் மஞ்சள், குங்குமம் வைத்து வந்து கொண்டிருந்தது. இப்போது இந்த துணி மாதிரி வெற்றிலையில் வந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் ரவிக்கைத் துணி போல இதுவும் சுற்றிக் கொண்டே இருக்குமோ???


மஞ்சள், குங்குமம் என்று சொல்லும் போது நினைவில் வந்தது. தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்ததில் ஒரு சில டப்பாக்களில் வண்டு வந்திருக்கும், அல்லது காலியாகவே கூட இருந்துள்ளது....:( காரணம் யாரும் அதை திறந்து பார்ப்பதுமில்லை, உபயோகிப்பதுமில்லை....:( அப்படியே வைத்திருந்து வேறு ஒருவருக்கு தந்து விடுகின்றனர். நான் இரண்டு மூன்று தடவையாக இம்மாதிரி வைத்து கொடுக்கும் மஞ்சள், குங்கும பாக்கெட்டுகளையும், டப்பாக்களையும் தனித்தனியே பிரித்து போட்டு சலித்து கோவிலுக்கு தந்து விடுகிறேன். 


உறவினர் வீட்டுத் திருமணத்தில் கிடைத்த சுருக்குப் பை இது. மணமக்களை வாழ்த்த அட்சதையை இதில் போட்டு தந்திருந்தார்கள். இதே போல் தேங்காய் வடிவிலும் உள்ளே அட்சதை போட்டு ஒன்று இருந்தது. நெடுநாட்களாக வைத்திருந்தேன். இப்போ அது எங்கே சென்றது என்று தெரியவில்லை.....:)


இது ஒரு குட்டி விசிறி. ஏதோ ஒரு விசேஷத்தில் தான் கிடைத்தது.

கற்பனைத்திறன் இருந்து விட்டால் வேண்டாத பொருட்கள் கூட அழகாக மாறிவிடும். இந்த மாதிரி பொருட்களால் பலருக்கு வேலைவாய்ப்பும், வியாபாரமும் பெருகுகிறது என்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


13 comments:

  1. கல்யாணத்தில் இந்த மாதிரி குட்டியான அழகான பையில் அட்சதை போட்டு தருவதைப் போலவே குட்டி டப்பாக்களிலும் தர்றாங்க. அந்த விசிறி கொள்ளை அழகு.

    ReplyDelete
  2. வெற்றிலையும் சுருக்குப்பையும் குட்டி விசிறியும் அழகோ அழகு !குட்டி விசிறி கொலுவில் வைக்கலாம் .ரோஷினிக்கிட்ட சொல்லி ஒரு குட்டி பொம்மை செய்து அதன் கையில் விசிறியை வைக்க சொல்லுங்க .
    அந்த சுருக்குப்பையில் தான் எங்கள் திருமணங்களில் கேக் கொடுப்பது வழக்கம் ..
    ஒரு திருமணத்தில் அந்த குட்டி பையில் விதைகள் போட்டு கொடுத்தாங்க !
    பிளாஸ்டிக் தவிர்த்து துணியில் வெற்றிலை நல்ல ஐடியா

    ReplyDelete
  3. கைவண்ணன் அருமை
    படங்களுடன் பதிவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வித்தியாசமான அன்பளிப்புகள். பகிர்வுக்கு நன்றி.
    த.ம. 3

    ReplyDelete
  5. வெற்றிலையும், விசிறியும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. அதுவும் அந்த விசிறி சூப்பர்.

    ReplyDelete
  6. கலை ரசனை கொண்ட பொருட்கள்! அழகு!

    ReplyDelete
  7. துணியில் செய்த தாம்பூலம் கொள்ளயழகு. இதுவரை நான் பார்த்ததில்லை. கலியாணங்களுக்குப் போனால்தானே தெரியும். இன்த அழகுச் சுருக்குப்பை கிப்ட் இதில் போட்டுக் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். நல்ல தொகுப்பு. அன்புடன்

    ReplyDelete
  8. படங்களுடன் அழகிய பதிவு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. இதில் காட்டியுள்ள எல்லாப்படங்களும் அழகாக அருமையாக கலை வண்ணத்துடன் உள்ளன. விசிறியும், சுருக்குப்பையும், வெற்றிலையில் உள்ள பிள்ளையாரும் மிகவும் சூப்பர் அழகாக உள்ளன.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…