Thursday, November 27, 2014

சிறுதானியப் பொங்கல்!சமீபகாலமாக மக்களிடையே சிறுதானியங்கள் அதிகமான முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அரிசி உணவை விட நார்ச்சத்து இதில் அதிகமுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த காலத்து மக்களால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, குதிரை வாலி, திணை, சோளம், பனிவரகு போன்றவை தான் சிறுதானியங்கள் என்பதாகும். இவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஆங்காங்கே சிறுதானிய உணவகங்களும் செயல்படத் துவங்கியுள்ளன.

அப்படிப்பட்ட சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வைத்து வெண்பொங்கல் செய்து பார்த்தேன். முதன்முறையாக சமைத்ததால் சற்றே பயம் இருந்தது. ஆனால் சாப்பிடும் போது அந்த எண்ணமே மாறி விட்டது. அவ்வளவு மிருதுவாகவும், சுவையாகவும் இருந்த அந்த பொங்கலின் செய்முறை இங்கே….

சாமைப் பொங்கல்தேவையானப் பொருட்கள்:-

சாமை – 1 கப் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) ஆங்கிலத்தில் LITTLE MILLET 
பயத்தம்பருப்பு – ¼ கப்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

தாளிக்க:-

பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் தேவையான அளவு
முந்திரிப்பருப்பு சிறிதளவு

செய்முறை:-பயத்தம்பருப்பை வாணலியில் சற்றே வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சாமையை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறப் போடவும். வாணலியில் நெய்யோ அல்லது எண்ணெயோ சிறிதளவு வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். குக்கரில் சாதம் வைப்பது போல் பாத்திரத்தில் சாமை, பயத்தம்பருப்பு, தாளித்த பொருட்கள், உப்பு, தண்ணீர் (1க்கு 1½)   பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் கொடுத்து நிறுத்தவும். சூடான, சுவையான பொங்கல் தயார்.

சட்னி, சாம்பாரோடு சாப்பிட சுவையாக இருக்கும். சுடச்சுட இருந்ததால் நான் வெறுமனேயே சாப்பிட்டு விட்டேன்….:) சாதாரணமாக அரிசியில் செய்யும் பொங்கலில் அரிசியும், பருப்பையும் வேகவைத்துக் கொண்டு, கொஞ்சம் மசித்து விட்டு தாளித்துக் கொட்டுவேன். ஆனால் இதை நீங்கள் மசித்தால் கூழாகி விடும். அதனால் தாளித்த பின்னர் குக்கரில் வைப்பது தான் சரி. நேரிடையாக குக்கரிலேயே தாளித்தும் செய்யலாம். எப்படி வசதியோ அப்படி செய்து கொள்ளுங்கள்.

இந்த சிறுதானியங்களை அரிசிக்குப் பதிலாக பயன்படுத்தி, அடை, உப்புமா, இட்லி, தோசை போன்றவையும் செய்யலாம். வேறு ஏதாவது சிறுதானிய உணவுடன் பின்னர் சந்திக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.20 comments:

 1. வணக்கம்

  சுவையான உணவு பற்றிய செய்முறை விளக்கம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  த.ம-2
  எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.

   Delete
 2. சிறுதானியங்கள் உடலுக்கு ஊட்டம் என்பதோடு அவை அழிந்துபடாமல் காப்பாற்றவுமே இப்போதைய பிரச்சாரம். சித்த மருத்துவர்கள் மற்றும் மரபு வழி மருத்துவர்கள் அக்கறையோடு பரிந்துரைப்பதால் விளைவிக்கவும் வாங்கவும் உத்வேகம் வந்து கொண்டிருக்கிறது. ருசித்துப் பார்த்தால் வழக்கமான அரிசியைவிட சுவை கூடுதலாக இருப்பதால் பலன்களும் மிகுதி என்பதால் பெரும்பாலோர் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சமையல் குறிப்புகளிலும் முன்னணி பெறத் தொடங்கி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.

   Delete
 3. என்னப்பா இப்படி ஆளாளுக்குப் பொங்க(ல்) வைக்கிறீங்க!!!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் பொங்கல் வெச்சுடுங்க...

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 4. பொதுவாக பொங்கல் பிடிப்பதில்லை.

  பொங்கல் பிடிப்பவர்களுக்கு இது ஒரு சுவையான குறிப்பு. பொங்கல் சுவையாக இருப்பது என்பது அதன் சைட் டிஷைப் பொறுத்து அமையும்! இது என் கருத்து!

  ReplyDelete
  Replies
  1. இங்கு இரண்டே பேர். அதிலும் மகள் சட்னி சாம்பாரெல்லாம் தொட்டுக்க மாட்டாள். எனக்காக என்ன செய்வது? அதனால் வெறுமனேயே சாப்பிட்டு பழகிக் கொண்டேன்....:))

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 5. சிறுதானிய சாமைப் பொங்கல் அருமை! செய்து பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete
 6. நல்லதொரு குறிப்பை எழுதியிருக்கிறீர்கள் ஆதி! அன்பு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

   Delete
 7. சத்தான உணவு வகைகளைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.
  இங்கே அந்த LITTLE MILLET கிடைக்கிறதா என்று பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கிடைத்தால், கட்டாயம் செய்து பாருங்கள்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.

   Delete
 8. வித்தியாசமான பொங்கல்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.

   Delete
 9. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
  http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_28.html?showComment=1417134527203

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி சார்.

   Delete
 10. சாமைப்பொங்கல் பார்க்கவும் அழகாக இருக்கு. டேஸ்டும் அருமை. சிறுதானியங்கள், மற்றும்
  கோதுமை,பயறு, பார்லி,சோளம் எல்லாம் சேர்த்து , வறுத்து கஞ்சி மாவு அதான் ஸத்துமாவு
  என்பெண் செய்கிறாள். நானும் செய்கிறேன். காலை வேளையில் அதன் கஞ்சிதான். கடந்த
  7,8 மாதங்களில் அதுவே பிரதம உணவாகக் கூட இருந்தது சிலவேளைகளில்.
  வரகு அரிசியிலும் இது போன்று எல்லாம் தயாரிக்கலாம். நல்ல வித்தியாஸமான குறிப்பு. மிகவும்
  உபயோகமானது. தொடருவோம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. கஞ்சி மாவு நல்ல உணவு தான். நானும் செய்து விடுகிறேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…