Wednesday, November 26, 2014

கண்ணழகி காஞ்சனமாலை!!!தில்லியின் வார சந்தையில் வழக்கமாக பழம் ஒருவரிடம் வாங்குவோம். நான்கு வழிச்சாலை ஒன்றின் திருப்பத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் அவரை நாங்கள் மையழகன்என்று சொல்வதுண்டு….:))) ஏனென்றால் அவர் ஒரு ஹரியானாக்காரர். ஹரியானா ஆண்கள் எல்லோரும் அழகாக மை வைத்து கொண்டிருப்பர். சரி! இவரைப் பற்றியல்ல இப்பதிவு. நாம் விஷயத்துக்கு வருவோம்.

இது கண்ணழகி காஞ்சனமாலையை பற்றியது. பெயர் அழகாக இருக்கிறதல்லவா?? அது வேறு யாருமல்ல. அடியேன் தான்…..:)) இருக்கிற பெயர்கள் பத்தாது என்று இவள் வேறு புதுப்பெயர் வைத்து கொண்டிருக்கிறாளே என்று நீங்கள் சொல்வது என் காதுகளில் விழுகிறது…..:) என்ன செய்ய???

கடந்த ஒரு வார காலமாக விஜயகாந்த் கண் போல காட்சியளிக்கிறது என்னுடைய கண்கள். சென்ற வாரத்தில் ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த மகள் கண் சிவந்திருப்பதாக சொல்லவே, அவளை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மெட்ராஸ் ஐதான் என உறுதி செய்து கொண்டேன். அவர்கள் தந்த சொட்டு மருந்துகளை விட்டு வந்தேன். இந்த குழந்தைகளுக்கு என்னமோ தெரியலை, அப்போது தான் நம்மீது பாசம் அதிகமாகி விடுகிறது…..:)) அடுத்த நாளே எனக்கும் பரிசு கிடைத்து விட்டது……:))

நல்லவேளை மகளுக்கு அவ்வளவு தீவிரமில்லை. எனக்கோ கண்களை திறக்கவே முடியவில்லை. பயங்கரமான வீக்கமும் ரத்தத்தைப் போல் கண்கள் சிவந்து, தெறித்து விழுந்து விடுவதைப் போல் இருந்தன. இதனுடன் ஜோடி போட்டுக் கொண்டு ஜூரமும், ஜலதோஷமும் வேறு. இதனோடு தவிர்க்கவே முடியாத அன்றாட வேலைகளும். எனக்கே என் கண்களைக் காண பயமாக இருக்கின்றன…..:)) கண்களிலிருந்து தண்ணீர் ஒருபுறம் கொட்ட, மூக்கிலிருந்து ஒருபுறம் தண்ணீர் கொட்ட…… இதற்கு ஒரு கைக்குட்டை, அதற்கு ஒரு கைக்குட்டை என படு பிஸியாக இருந்தேன்….:) முதலில் ஒத்தை கண் சிவராசுபோல் ஒரு கண்ணில் தான் கேடு. பின்பு இரண்டாவதும் சேர்ந்து கொண்டன. அவ்வப்போது குளிர்ந்த நீரில் கண்களை கழுவிக் கொண்டும், சொட்டு மருந்துகளை விட்டுக் கொண்டும் வருகிறேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை.

இருந்தாலும் வெளியில் தலையை காட்டினாலே எல்லோரும் தலை தெறிக்க ஓடுகிறார்கள். நேற்று கூட ஒரு வேலையாக கண்ணாடி அணிந்து கொண்டு வெளியில் சென்றிருந்தேன். கடையில் இருந்த பெண் அக்கா கண் வலியாஎனக் கேட்க கடைக்காரரோ விசாரித்தாலே நமக்கும் வந்துடும். கேட்காதேஎன்கிறார்…..:)) நல்ல கதை தான்.

சிறுவயதில் வந்த அனுபவம் இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. அப்பாவுடன் நாங்கள் கோவையில் இருந்த போது டவுன்ஹாலுக்கு ஏதோ வாங்குவதற்காக சென்றிருந்தோம். சைக்கிளில் என்னை உட்கார வைத்துக் கொண்டு அப்பா தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். என் கண்களில் புளிச்சைஎன்று சொல்லக்கூடிய அழுக்கு அவ்வப்போது வந்து கொண்டே இருப்பதாக சொல்லி தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து விட்டுக் கொண்டே இருந்தார். அப்புறம் இரண்டு மூன்று நாட்களுக்கு சொட்டு மருந்துகளை விட்டு குணப்படுத்தினர்.

கண் வலி துவங்கி காது வலி, கழுத்து சுளுக்கு, பல் வலி, பிரசவம் வரை எல்லாமே வேதனை தரும். அந்த நிமிடம், இது தான் உலகிலேயே மிகவும் கொடியது என்று தோன்றும். அடுத்த ஏதேனும் வேதனை வரும் வரை…. இல்லையா? எல்லாமே கஷ்டம் தான். அது போக பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இந்த வலிகள் எல்லாமே துவங்குகிறது. இதுவும் ஒரு ஆச்சரியம் தான்.

இந்த மெட்ராஸ் ஐ சீசன் முடிந்து விட்டாலும் நீங்களும் கவனமாகவே இருங்க. இந்த பதிவை படித்ததால் உங்களுக்கும் இது தாக்கலாம்…..:)) முதலில் கண்களை குளிந்த நீரால் கழுவிக்கோங்க….:))


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


30 comments:

 1. கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம்
  எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி
  தாங்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறோம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 2. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 3. விசாரித்தாலே வந்துடுமா...??!! மக்களின் பயத்துக்கு அளவேயில்லை. தொற்று வியாதிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அப்படித்தான் சொல்கிறார். ..:))

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.

   Delete
 4. வலியைக் கூட சுவாரசியமாய் எழுதியிருக்கீங்க... அது என்ன மாயமோ தெரியலை சின்ன வயதிலிருந்து இதுவரை எனக்கு கண் வலி வந்ததில்லைங்க.... ஆனால் ஒவ்வொரு முறை ஊரெல்லாம் வரும்போது பயந்துக்கிட்டுத்தான் இருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. சொல்லாதீங்க... வந்துடப் போகுது....:))

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.

   Delete
 5. சூப்பர் இதை படிச்சாலே கண் வலி வந்திடுமா..உங்க பெயரும் சூப்பரா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பெயர் பிடிச்சிருக்கா... நன்றி....:)

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அமுதா.

   Delete
 6. பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரிம்மா.

   Delete
 7. மெட்ராஸ் ஐ வந்தால் கஷ்டம் தான்.
  எப்படியும் ஓருவாரம் கஷ்டப்படுத்தும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா. மெட்ராஸ் ஐ சரியானாலும், கண்களுக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்காம். அதனால் சிவப்பு மாறவில்லை. மேலும் ஒரு வாரம் ஆகுமாம்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 8. பத்திரமா இருங்க ஆதி..தனியா குழந்தையையும் பார்த்துக்கொண்டு..கஷ்டம்தான்!!

  //கண் வலி துவங்கி காது வலி, கழுத்து சுளுக்கு, பல் வலி, பிரசவம் வரை எல்லாமே வேதனை தரும். அந்த நிமிடம், இது தான் உலகிலேயே மிகவும் கொடியது என்று தோன்றும். அடுத்த ஏதேனும் வேதனை வரும் வரை…. இல்லையா? // ஆமாம், 100% சரிதான்! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மகி.

   Delete
 9. அட ராமா!!!! கவனமாக இருங்கள். நாடு திரும்பியவுடன், ஒளிந்திருந்த வலிகள் எல்லாம் 'சௌக்கியமா?' என்று விசாரிக்க வந்துவிட்டன. இடுப்பு முறிந்து போகும் வலி. எக்ஸ்ரே எடுக்கணுமாம். நாளைக்குப்போறேன்.

  ReplyDelete
  Replies
  1. உடம்பை பார்த்துக்கோங்க டீச்சர்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 10. // கண் வலி துவங்கி காது வலி, கழுத்து சுளுக்கு, பல் வலி, பிரசவம் வரை எல்லாமே வேதனை தரும். //
  True. I would like to add 'mouth ulcer' to the list.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அதையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துட வேண்டியது தான்..

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மாதவன் சார்.

   Delete
 11. மூன்று வருடங்கள் முன்பு இப்படி வலி வந்து அவஸ்தை பட்டேன்! வாரம் தோறும் எண்ணெய்க் குளியல் செய்தால் இந்த நோய் வர வாய்ப்பு குறைவு.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா!! தகவலுக்கு மிக்க நன்றி.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete
 12. நாங்கள் போன மாதமே குடும்பத்துடன் கண்கள் சிவந்து விட்டோமே....!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! சில வருடங்களுக்கு முன்பு என்னவருக்கு வந்த போது நாங்கள் தப்பித்தோம். இம்முறை மகளோடு மருந்து விட போராடி பெற்றுக் கொண்டேன்.....:))

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 13. //இந்த பதிவை படித்ததால் உங்களுக்கும் இது தாக்கலாம்…..:)) முதலில் கண்களை குளிந்த நீரால் கழுவிக்கோங்க….:))//

  எனக்கு இப்போ மெட்ராஸ் ஐ வராதே !! அது லண்டன் வர்றதுக்கு விசா டிக்கட் எல்லாம் வேணும் !!
  take care aadhi .

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! சூப்பர் போங்க....:) இதோ அதை ப்ளைட்டில் ஏத்தி விடறேன்.....:))

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ஏஞ்சலின்.

   Delete
 14. கண்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கண் வலியுடன் எதற்கு வலைப்பதிவு எழுதுகிறீர்கள் ஆதி ? ஸ்ட்ரெயின் அதிகம் தானே !

  ReplyDelete
  Replies
  1. இப்போ பரவாயில்லை.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்.

   Delete
 15. படித்தவுடனே எழுந்து போய் கண்களை குளிர்ந்த நீரில் கழுவிக்கொண்டு வந்துவிட்டேன்!!! (சும்மா! தமாஷ்!)
  சீக்கிரமே குணமாகி உண்மையில் கண்ணழகி காஞ்சனாவாக மாற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…