குழந்தைகள்
தினத்தையொட்டி எங்கள் மகளின் பள்ளியில் கண்காட்சி இவ்வாண்டு நடைபெற்றது. இதற்காக
சில நாட்கள் முன்னரே ஒவ்வொரு வகுப்பிலும் மாணாக்கர்களை பிரித்து ஒவ்வொருவருக்கும்
வேலைகள் தரப்பட்டன. எங்கள் மகளுக்கு NATIONAL SYMBOLS ஒதுக்கப்பட்டது. ஒரு
மயில் பொம்மையும், தெர்மக்கோலில் NATIONAL SYMBOLS என்று
எழுதியும் தந்தேன். பள்ளிக்கு
எடுத்துச் சென்றவள் ஆசிரியரிடம் தருவதற்குள் வாண்டுகள் சிலரின் விஷமத்தால்
உடைக்கப்பட்டு வீட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டன. அழுது கொண்டே
வீட்டுக்குத் திரும்பினாள்.
சரி! போனால்
போகிறது விடு! என்று
சொல்லி திரும்ப பரணிலிருந்து ஒரு கடினமான அட்டையை எடுத்து வெட்டி அதில் சார்ட்
பேப்பரை ஒட்டி, அதில் எழுதி, மயிலின்
படத்தை பழைய புத்தகங்களிலிருந்து வெட்டி எடுத்து அதையும் ஒரு அட்டையில் ஒட்டித் தந்து
இரண்டுக்குமே ஒரு குச்சியை பின்னால் ஒட்டி எங்கேனும் பொருத்தி வைக்கும் படி செய்து கொடுத்தேன்.
நல்லவேளை இதை பத்திரமாக ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டாள்.
மறுநாளான
குழந்தைகள் தினத்தன்று கண்காட்சியைக் காண பள்ளிக்குச் சென்றோம்.
ஒவ்வொரு துறைக்கும் தனித் தனி அறைகள் பிரிக்கப்பட்டு மாணாக்கர்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.
ஒவ்வொரு அறையின் வாசலிலும் மாணவிகள் தட்டில் சந்தனம், குங்குமம், கற்கண்டு
போன்றவற்றைத் தந்து வரவேற்பு செய்தனர்.
தமிழ்த்
துறையில் சங்ககால மலர்களின் பெயர்களை படங்களுடன் ஓலைச்
சுவடி போல் தயாரித்திருந்தனர். அதே போல் முத்தமிழான இயல் இசை நாடகம் ஆகிய மூன்றுமே வைகுண்ட
ஏகாதசியில் கடைபிடிக்கப்படுவதை பற்றி ஒரு மாணவர் விளக்கினார். தஞ்சை பெரிய கோவிலை
தெர்மக்கோலினால் பிரம்மாண்டமாக செய்திருந்தனர். ஆழ்வார்களால் போற்றப்படும்
திருவரங்கம், சீதையின்
வனவாசம் என்று பல்வேறு தலைப்புகளில் மாணாக்கர்களின் தனித்திறமை வெளிப்பட்டது.
இதே
போல் ஆங்கிலம், கணிதம், சமூக
அறிவியல், வணிகவியல், சமஸ்கிருதம், கணினியின்
செயல்பாடுகள், மாணாக்கர்களின்
ஓவியங்கள், வேதியியல், இசை
என்று வரிசையாக
ஒவ்வொரு அறையிலும் சிறப்பாக செய்திருந்தனர். பார்வையிட்ட பின் அங்கே உள்ள கையேட்டில்
நமது கருத்துக்களை பதியும் படியும், நம்மை கவர்ந்தது எது
என்றும் கேட்டிருந்தது.
என்னை
கவர்ந்த விஷயங்களாவன…. நெகிழியை
தவிர்த்தலை பற்றிய விஷயங்கள், சாக்பீஸில்
செய்த கலைப்பொருட்கள், தேவையில்லாத
பொருட்களைக் கொண்டு செய்த கைவினைப் பொருட்கள், மூலிகைச்
செடிகள், வேதியியல்
அமிலங்களைக் கொண்டு செய்து காட்டிய கெமிக்கல் அபிஷேகம்
போன்றவை. மறுசுழற்சி, தண்ணீர்
சிக்கனம், மின்சார
உற்பத்தி, உணவு பிரமிடுகள், குப்பையில்லாத
நாட்டை உருவாக்குதல் என்று பல….
எதிர்பாராத
விதமாக வீட்டில் தீ பற்றினால் வினிகரை ஒரு பாட்டிலில் விட்டுக்
கொண்டு, அந்த
பாட்டிலின் வாய்புறத்தில் சின்ன ட்ஷ்யூ பேப்பரை வைத்து அதன்
மேல் சிறிது சமையல் சோடாவை போட்டு பாட்டிலை மூடி, மூடியில் சின்ன துளை
போட்டுக் கொண்டு
குலுக்கினால் நுரை போன்று திரவம் வெளிவந்து தீயை அணைக்கிறது. அதேபோல் ஒரு மாணவி வீட்டிலேயே
செடி வளர்க்க மண்ணிற்கு பதிலாக தேங்காய் நாரையும் காபித்தூளையும் போட்டு பாட்டில்களில்
நிரப்பி வளர்த்திருந்தாள்.
இசைத்துறையில்
போட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஒரு அட்டையில் ராகங்களும்
அதற்கேற்ற திரையிசைப் பாடல்களும் எழுதப்பட்டிருந்தன. இருபது நொடிகளுக்குள் அவற்றை
பார்த்துக் கொண்டு விட்டு, அதன்
பின்பு அவர்கள் கேட்கும் போது சரியாக சொல்ல வேண்டும். மகள் “அம்மா
சீக்கிரம் பார்த்துக்கோ” என்றதும், ஆண்ட்டி
20, 19,
18 என்று அந்த மாணவி கூறியதும்
தான் மனதில் ஏறிக் கொண்டிருந்தாலும், ஏதோ கொஞ்சம் மனதில்
பதிந்து அந்த
மாணவி கேட்ட சிலவற்றுக்கு சரியான பதிலைச் சொன்னதற்காக சிறிய பரிசு ஒன்று
தரப்பட்டது.
இதே
போல் கணினித் துறையிலும் சில விளையாட்டுகள். ரோபோவை தெர்மக்கோலில்
செய்து, அதே
போல் காற்றாலையை பேட்டரியுடன் இணைத்து இயக்கி காட்டினார்கள். காய்கறிகளில்
கார்விங் செய்து அழகுபடுத்தியிருந்தார்கள். இன்னும் நிறைய செயல்பாடுகள் என்று
பள்ளியே களைகட்டியிருந்தது.
இப்படி
மாணாக்கர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் திறமையை வெளிப்படுத்திய
பள்ளி நிர்வாகத்தினருக்கும், கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய மாணாக்கர்களுக்கும்
பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். அன்றைய நாளை சிறப்பாக செலவழித்த எண்ணத்துடன்
வெளிவந்தவுடன் மகள் “அம்மா
ஐஸ்கிரீம் பார்லர் கிட்டக்கத்தான் இருக்கு” என்று ஆரம்பித்தாள்.
சரியென்று ஆளுக்கொரு ஸ்ட்ராபெர்ரி கப் வாங்கி ருசித்து விட்டு வீட்டுக்கு
வந்து சேர்ந்தோம்.
மீண்டும்
சந்திப்போம்,
ஆதி
வெங்கட்
திருவரங்கம்.
வினிகரின் பயனை அறிந்தேன்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.
Deleteகுழந்தைகளின் புத்துருவாக்கங்கள் வியப்பை தருகின்றன.
ReplyDeleteஆமாம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.
வணக்கம்
ReplyDeleteஎல்லாம் அறிவு பூர்வமான கண்காட்சி... நிகழ்வை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.
Deleteபாராட்டுதலுக்குரிய நிகழ்ச்சி...........கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் முயற்சிக்க வேண்டும்..........
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அனுராதா.
Deleteஅருமையான கண்காட்சிக்கு எங்களையும் கூடவே கூட்டிப்போனதுக்கு நன்றிப்பா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
Deleteசுவாரஸ்யமாகக் கழிந்த நாள் என்று சொல்லுங்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteநல்ல அருமையானக் கண்காட்சி எவ்ன்றுப் புரிகிறது. அறிவுப் பசிக்கு இதைப் போன்ற உணவு மிகவும் ஆரோக்கியமானதே. உங்களுடன் வந்தது போன்றே இருந்தது நீங்கள் கண்காட்சியை விவரித்திருந்தது ஆதி. நன்றி
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்.
Deleteமாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் இதுமாதிரி நிகழ்வுகள் வரவேற்கத்தக்கன! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.
Delete