விஞ்ஞான
வளர்ச்சியினால் பல நன்மைகள் இருக்க சில தொல்லைகளும் இருக்கின்றன. என்ன
இப்படிச் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? அதைச் சொல்லத் தானே
இப்பதிவு!
இன்று அதிகாலையில்
எனக்கேற்பட்ட அனுபவத்தினை வைத்துதான் தொல்லைகளும் இருக்கின்றன என்று சொல்கிறேன்.
அதிகாலை
5 மணி
இருக்கும், வாசலில்
அழைப்பு மணியின் அலறல். (இங்கு அலறல் என்று சொல்வதன் காரணத்தை
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காயத்ரி மந்திரத்தை அதிகபட்ச ஒலியுடன் ஒரு
பத்து நிமிடங்களுக்கும் குறையாமல் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அழைப்பு மணி! அது
முடியும் வரை வாசலில் வந்திருப்பவர்கள் என்ன சொன்னாலும் காதிலேயே விழாது)
தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டபடியே பால் சீக்கிரம் வந்து விட்டதோ! என்று மரக்கதவை
திறந்த பின் பையில் கிடக்கும் பாலை எடுக்க க்ரில் கேட்டை திறக்க சாவியை
எடுக்கையில் sorry
for disturbing you என்று ஒரு குரல். யாரது இந்நேரத்தில்?
ஒரு
பெயரைச் சொல்லி அவர்கள் எந்த ப்ளாக் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? என்று
கேட்கிறார் 60 வயது
மதிக்கத்தக்க ஒருவர். D ப்ளாக்
என்று நினைக்கிறேன் என்றார். இது C ப்ளாக்
என்றேன். அப்படியானால் வேறொருவர் பெயரைச் சொல்லி அவர்களைத் தெரியுமா என்றார். அவர்
A ப்ளாக்கில்
இருக்கிறார். அது அந்த பக்கம் உள்ளது என்றேன். மீண்டும் சாரி சொல்லி விட்டு
இறங்கி விட்டார். அவர் D ப்ளாக்குக்கு
போனாரோ, A ப்ளாக்குக்கு
போனாரோ தெரியவில்லை. ஆனால் என் தூக்கத்தில் பெரிய கல்லை
போட்டு விட்டார்….:((
இந்த
அனுபவம் இன்று மட்டுமல்ல! பல நாட்கள்
இப்படித்தான்! இங்கு அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கோவிலுக்கு
செல்பவர்களும், ரயிலுக்கு
செல்பவர்களும் உண்டு. அப்போது தானே ஆனந்தமான தூக்கம்
வரும் நேரம். மேல் மாடியிலிருந்து அதிகாலையில் கீழே இறங்குபவர்கள்
வெளிச்சத்திற்காக விளக்கை
போடுவதற்கு பதில் எங்கள் வீட்டு அழைப்பு மணியில் தான் கையை வைப்பார்கள். மேல் வீட்டிற்கு
வருபவர்களும் தவறிப் போய் எங்கள் வீட்டு அழைப்பு மணியையும், எங்கே
திறக்காமல் போய்விடுவேனோ என்று படபடவென கதவையும் தட்ட ஆரம்பிப்பார்கள். தூக்க கலக்கத்தில்
நான் வந்து கதவைத் திறந்தவுடன் அசடு வழிந்து கொண்டு சாரி….. மேல்
வீடா…. சரி
என்று போவார்கள். இப்படி பக்கத்து ப்ளாக், எதிர் ப்ளாக் என்று
எங்கு வருபவர்களானாலும் ஏனோ எங்கள் வீட்டு அழைப்பு மணி பிசாசின்
மேல் தான் கையை வைப்பார்கள்……:(
சென்ற
வாரத்தில் ஒருநாள் எதிர்வீட்டுக்கு மருந்துகள் கொண்டு வந்து தரும் பையன், எங்கள்
வீட்டு அழைப்பு மணியை அடித்து விட்டு எதிர் வீட்டில் போய் நிற்கிறான். யாருப்பா என்றால்
இவங்க வீட்டுக்கு மருந்து கொடுக்க வந்தேன் என்கிறான். அப்போ எதுக்குப்பா எங்கள் வீட்டு
மணியை அடித்த? என்றால்
பதிலில்லை….. இதை
என்னவென்று சொல்வது???
வாண்டுகள்
சில அவ்வப்போது வந்து அழைப்பு மணியை அழுத்தியும், தடதடவென கதவையும் தட்டுவார்கள்.
கதவைத் திறந்தால் ஒன்றுமே சொல்லாமல் வந்து இருக்கையில் அமர்ந்து ஓரிரு நிமிடம்
சென்ற பின் கிளம்பிப் போவார்கள். சிலநேரம் ரோஷ்ணியை கேட்பார்கள். அவள் பள்ளிக்கு சென்றதைச்
சொல்லி மாலையில் விளையாட வருவாள் என்பேன். சரி என்று சென்று விட்டு அரைமணி கழித்து
வந்து அழைப்பு மணியை அழுத்தி ரோஷ்ணி என்பார்கள்…..:)) அதன் இணைப்பை
துண்டித்து விடலாம்
என்று பலமுறை தோன்றியதுண்டு….. ஆனாலும் ஏனோ இதுவரை செய்யவில்லை……:(
இது
தான் என்றில்லை… அலைபேசியிலும்
இதே கதை தான். யாருக்கோ அழைக்க வேண்டியவர்கள் இங்கு
அழைத்து அதிகாரத்துடன் குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்வார்கள். அவர்கள் இல்லை நீங்கள்
தவறான எண்ணுக்கு அழைத்திருக்கிறீர்கள் என்றால் “நீ ஆரு பேசறது அவங்கள
கூப்புடு” என்பார்கள்.
சிலமுறை புரிய வைத்திருக்கிறேன். சிலர் சாரி சொல்வார்கள். சிலர் அப்படியே மரியாதைக்கு
கூட தங்கள் தவறை உணராமல் கட் பண்ணி விடுவார்கள்….:)
இதே
போலத் தான் எனக்கு தெரிந்த சிலரின் வீட்டு குழந்தைகள் அலைபேசியை வைத்து விளையாடிக்
கொண்டிருக்கும் போது ALPHABETல்
முதல் எழுத்தாக போய் விட்ட காரணத்தால் என்னை அழைக்கும்
படியாகி விடுகிறது. விடாமல் தொடர்ந்து கால்கள். நாம் கூப்பிட்டு அவர்களின் அம்மாவிடம்
சொல்லலாம் என்றால் குழந்தைகளே கட் பண்ணியும் விடுகிறது…..:)) அதோடு BLANK MESSAGEம்……..:)) இன்று
காலை கூட எனக்கு வண்டி ஓட்ட கற்றுத் தந்த பயிற்சியாளர் வீட்டுக்
குழந்தை….:) என்னுடைய
ரிங் டோனை இளையராஜா பாடல்களில் ஒன்றாக வைத்திருப்பதால் அதை
கேட்டபடியே ரசிக்க பழகிக்கொண்டேன்…..:)
நள்ளிரவில்
கால் செய்யும் நபர்களும் உண்டு. சென்ற வருடம் இதே போல் தான் நள்ளிரவில் மிஸ்டு
கால்கள். அல்லது எடுத்த பின் சத்தமே இல்லாமல் இருப்பார்கள். தொடர்ந்து தொந்தரவு செய்து
கொண்டிருக்கவே ஒரு முறை போலீஸில் புகார் கொடுத்து விடுவேன் என்று சொன்ன பின்னர் தான்
அடங்கினார்கள்…..:((
இப்பச்
சொல்லுங்க விஞ்ஞானத்தால் தொல்லைகளும் உண்டு என்று நான் சொன்னது உண்மை தானே?
எது
எப்படியோ! ஒருவகையில் நான் அவர்களுக்கு நன்றி சொல்லித் தான் ஆகணும். ஏனென்றா கேட்கிறீர்கள்? மூன்று
மாத காலத்துக்கும் மேலாக பதிவுலகை விட்டு விலகி புத்தகங்களோடு ஒன்றிப்
போயிருந்த என்னை இவர்கள் தானே திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள்…..:))
மீண்டும்
சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
ஹா ஹா... அழைப்பு மணி பிரச்சனை எங்கள் பிளாட்டிலும் உண்டு... மீண்டும் வருக...
ReplyDeleteவாசிப்பு நல்லது. வலைப்பதிவு அதனினும் நல்லது ஆதி!
ReplyDeleteஅழைப்பு மணி பிரச்சினை எல்லா வீட்டிலும் உண்டு...
ReplyDeleteஹா... ஹா...
மீண்டும் பதிவுலகம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
welcome :) ஆதி :) அழைப்பு மணி உங்களை அழைத்து வந்து விட்டதிங்கு :)
ReplyDeleteஎங்க வீட்ல நாங்க கழட்டி வச்சிட்டோம் ..நீங்க சொல்ற போன் தொல்லை இங்கயும் இருக்கு ..நடு ராத்திரி கால் பண்ணுவாங்க யார் பேரையோ கேட்டு சில நேரம் பேசாம வைச்சும் இருப்பாங்க ..சிலர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆட்கள் இந்த வேலைகளை செய்ய்வதுண்டாம் ....தொடர்ந்து எழுதுங்கள்
எரிச்சலூட்டும் அனுபவங்கள்தான். இதிலேயே ஒரு திகில் அனுபவத்தை நானும் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு, பெயர் சொல்லா, யாரென்று தெரியாத அழைப்பு எனக்கும் இருந்தது. அது ஒரு லேண்ட் லைன் காலம்! எழுந்து வந்து அட்டெண்ட் செய்யும் கடுப்பு வேறு! மருந்துப் பையன் செய்ததுதான் அநியாயம்.
ReplyDeleteமூன்று மாத காலத்துக்கும் மேலாக பதிவுலகை விட்டு விலகி புத்தகங்களோடு ஒன்றிப் போயிருந்த என்னை இவர்கள் தானே திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள்…..:))//
ReplyDeleteநன்றி சொல்வோம் அவர்களுக்கு.
மீண்டும் வருகைக்கு வாழ்த்துக்கள்.
ஒருவேளை உங்க ஏரியா சிறுவர்களோடு சிறுவனாக நானும் இருந்திருந்தால் அந்தக் கூட்டத்தை வலி நடத்தும் பொறுப்பு எனக்குக் கிடைத்திருக்கலாம். ஏன்னா எங்க தெருவில காலிங்பெல்ல யார் அடிச்சாலும் நோட்டிஸ் எங்க வீட்டுக்குத்தான் வரும் :-)
ReplyDeleteஎது எப்படியோ! ஒருவகையில் நான் அவர்களுக்கு நன்றி சொல்லித் தான் ஆகணும். ஏனென்றா கேட்கிறீர்கள்? மூன்று மாத காலத்துக்கும் மேலாக பதிவுலகை விட்டு விலகி புத்தகங்களோடு ஒன்றிப் போயிருந்த என்னை இவர்கள் தானே திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள்…..:))
ReplyDeleteமீண்டும் வருகைக்கு வாழ்த்துகள்.!
அழைப்புமணி பிரச்சனை அனைவருக்கும் பொது போல இருக்கே! இந்த ராங்க் தொல்லையும் ரொம்ப இம்சைதான்!
ReplyDeleteஅழைப்பு மணி பதிவுலகத்திலிருந்தா?
ReplyDeletesuper ..எப்படியெல்லாம் பிரச்சனைகள்..
ReplyDeleteநட்புகள் அனைவருக்கும் நன்றிகள் பல..
ReplyDelete