Sunday, August 10, 2014

ஐந்தாவது ஆண்டில்!!

என்னுடைய வலைப்பூ ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவுற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இது என்னுடைய 250வது பதிவும் கூட…. நான்கு வருடங்களில் 250 என்பது மிகவும் குறைவு என்றாலும், மனதுக்கு திருப்தியாக, என் மனதின் வெளிப்பாடாக, நட்புகளிடம் மனம் விட்டு பேசியது போன்ற உணர்வுடன் அமைந்த பதிவுகள் அவை.

2010 ஆகஸ்டு 10ந்தேதி என்னவர் எனக்கு வலைப்பூவை துவக்கி கொடுத்து முதல் பதிவை அவரே டைப் பண்ணித் தந்து உதவினார். அது முதல் அவ்வப்போது பதிவுகளை எழுதி வருகிறேன். முதலில் சில மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் டைப் பண்ணி கற்றுக் கொண்டேன். சமையல் குறிப்புகள், பயணத்தொடர்கள், அனுபவங்கள், நினைவுகள், திருவரங்கத்து உற்சவங்கள், பண்டிகைகள், புத்தக அறிமுகங்கள் என சில பிரிவுகளில் எழுதி வந்திருக்கிறேன்.

இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை பெற்றுள்ளேன். நட்புகள் பலரால் நிறைய முறை வலைச்சரத்தில் அறிமுகமும் ஆகியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவுலகில் உலா வருவேன்.

என் வலைப்பூவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த உங்களுக்கு இனிப்பில்லாமலா! ஸ்வீட் எடுங்க…. நட்புகளே. இது நானே செய்த இனிப்பு தான். அதனால் தாரளமாக எடுத்துக்கோங்க…

திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களின் குறிப்புடன் கொஞ்சம் மாறுதல்களோடு செய்த மைசூர் பாகு….. குறிப்பு இதோ..


மைசூர் பாகு!

தேவையான பொருட்கள்:-

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – ½ கப்
நெய் – 1½ கப்

செய்முறை –

கடலை மாவை வெறும் வாணலியில் சற்று வறுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் சர்க்கரையும், தண்ணீரையும் சேர்த்து சூடாக்கவும். அருகில் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கவும். சர்க்கரை உருகி கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும். கொதிக்க ஆரம்பித்த பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் பாகு உருட்ட வர வேண்டும். இப்போ கடலைமாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும். பாகுடன் மாவு சேர்ந்து வந்ததும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளற வேண்டும். நெய் முழுமையாக உறிஞ்சப்பட்டு வாணலியில் ஓரங்களில் நுரை போல பூத்து வரும். இப்போ அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடவும்.

வாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் தயார்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


35 comments:

 1. வணக்கம்
  அம்மா.

  தங்களின் வலைப்பூவில் பலவகைப்பட்ட பதிவுகள் பல வாசக உள்ளங்களை சென்றடைந்துள்ளது என்பது உறுதி அதில் நானும் ஒருவன் 5வது ஆண்டில் காலடிவைக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் தெடர் வாழ்த்துக்கள் எப்போதும் மகிழ்விக்கும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி...
  ஐந்தாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
 3. வாழ்த்துகள்....சுவையான மைசூர்பாக்கு.............

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ஆதி...

  ReplyDelete
 5. மைசூர்பாகு செம டேஸ்ட்... எண்ணிக்கை முக்கியமில்லைங்க... எழுதினது எல்லாமே உங்களுக்கு திருப்தியா இருக்கணும். அதான் முக்கியம். இன்னும் இன்னும் தொடர்ந்து நீங்க நிறைய எழுதிக் குவிக்க மனம் நிறைய மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 6. ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும்
  வலைப்பூவுக்கு இனிப்பான வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  தொடர்ச்சியாக எழுதுவதும், எழுதும் பதிவு ஒவ்வொன்றும் நல்ல தரமான பதிவாக அமைவதும்தான் முக்கியம். எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல என்றாலும் எண்ணிக்கையின்படியும் இருநூற்றைம்பது பதிவுகளை எட்டியிருப்பது ஒரு சாதனைதான். நான் எழுத ஆரம்பித்து மூன்றரை வருடங்களாகியும் இன்னும் இருநூறைக் கூட தொடவில்லை என்பது செய்தி.

  மைசூர்பாக் எடுத்துக்கொண்டேன். நன்றி.என் மனங்கனிந்த வாழ்த்துக்கள் ஆதி. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 8. 250வது பதிவுக்கும், 5வது பிறந்த நாளுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. மைசூர் பாக் இனிப்போ இனிப்பு. மகிழ்ச்சி.

  ReplyDelete
 10. வாழ்த்துகள்; ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதா? அதுவும் 250 பதிவுகள்!! பிரமாதம்!! தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்..
  மைசூர்பாகு அருமை.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் மேடம்! தொடர்ந்து சிறப்பாக எழுதி வலையுலகை கலக்க வாழ்த்துக்கள்! இனிப்பு அருமை! நன்றி!

  ReplyDelete
 13. ஐதாவது பிறந்த நாளுக்கும், 250வது பதிவிற்கும் எனது இனிய வாழ்த்துக்கள் ஆதி.
  மைஸூர் பாக் எடுத்துக் கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்!! மைசூர் பாகு மிக அருமையாக இருக்கு..

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்.
  இனிப்போடு தொடங்கிய தங்களின் ஐந்தாம் ஆண்டிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 16. ஐந்தாவது ஆண்டு நிறைவுக்கும் 250 ஆவது பதிவுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். எல்லா நலங்களும் பெற்றுத் தொடர்ந்து ஆயிரம் பதிவைக் காணவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்.250 பதிவுகள் சூப்பர்.மேலும் எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஐந்து வருடங்களில் 250 பதிவுகள் என்பது மிகவும் குறைவே.... இருந்தாலும் ஒய்வு நேரத்திற்காகத்தானே வலைப்பதிவெல்லாம்.... வாழ்த்துக்கள் சகோதரி....

  ReplyDelete
 19. பலே பலே! வாழ்த்துக்கள்! எழுதுறதுக்காக எழுதாமல் ஒரு நிறைவுக்காக எழுதுறப்ப்போ பத்தும் சரி ஆயிரமும் சரி.
  //சர்க்கரை உருகி கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும்..
  நெய்யை தண்னீரில் விடணுமா? வொய்?

  ReplyDelete
 20. 250வது பதிவுக்கும், 5வது பிறந்த நாளுக்கும் இனிய நல்வாழ்த்துகள். !

  ReplyDelete
 21. வாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் ! Enaku ?

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ஆதி !!

  ReplyDelete
 23. ஐந்தாவது வருஷ வலைப்பூவின் பிறந்த நாளுக்கு இனிய வாழ்த்துகள். மைசூர் பாகு ெடுத்துக் கொண்டேன். அருமை. அன்புடன்

  ReplyDelete
 24. தங்களின் வலைப்பூவின் ஐந்தாவது பிறந்த நாளுக்கு என் மனம் க‌னிந்த நல்வாழ்த்துக்கள்!! இனிப்பு மிக அருமையாக‌ இருந்தது ஆதி!!

  ReplyDelete
 25. வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் தாமதமான என் நன்றிகள்.

  ReplyDelete
 26. அன்பு ஆதி, வெகு தாமதமாக வந்து வாழ்த்துகளைச் சொல்கிறேன்மா. இன்னும் நிறையப் பதிவுகளைத் தரவேண்டும். . நிறைய புத்தகங்கள் அறிமுகத்தையும் எதிர்பார்க்கிறேன்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. 250? பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 28. ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவிற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். மன்னிக்கவும்.
  மனதுக்கு நிறைவாக எழுதுவது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம், ஆதி. இதில் வெற்றி பெற்றிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த ஆசிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 29. ஐந்தாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஆதிக்கு(வலைப்பூவுக்கு) இனிய வாழ்த்துக்கள். நல்லவேளை, தாமதமாக வந்தாலும் கடைசியில் ஒரு மைசூர்பாகு இருந்ததோ தப்பித்தேன். அருமை.

  ReplyDelete
 30. அன்புடையீர் வணக்கம்! எனது ” திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! ” http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html என்ற பதிவினில் தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். தங்களது கருத்துரையையும் தங்களுக்குத் தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத திருச்சி மாவட்டத்து வலைப் பதிவர் பற்றியும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
 31. ஆதி ஆசிகள். உனக்கு அவார்டை பகிர்ந்திருக்கிறேன்.பெற்றுக் கொள்ளவும். நீயும் ஐவருக்குப் பகிர்ந்தளிக்கலாம். சொல்லுகிறேன்.வேர்ட்ப்ரஸ்காமில் பார்க்கவும்.அன்புடன்

  ReplyDelete
 32. எனக்குக் கிடைத்த விருதை உன்னுடன் பகிர்ந்து கொண்டு விவரம் தெரிவித்தேன். உனக்கு வந்து சேரவில்லைபோலத் தோன்றுகிறது. சொல்லுகிறேனில் விவரம் இருக்கிறது. பெற்றுக்கொண்டு, நீயும் பேருக்குக் கொடுத்து மகிழ்வுரலாம். அன்புடன்

  ReplyDelete
 33. அன்புள்ள திருமதி.ஆதி வெங்கட் அவர்களுக்கு,
  2010 ஆகஸ்டு 10ந்தேதி திரு.வெங்கட் ஆதி அவர்கள் தங்களுக்கு வலைப்பூவை துவக்கி கொடுத்து முதல் பதிவை அவரே டைப் பண்ணித் தந்து உதவினார். இந்தப் பதிவு 250 ஆவது பதிவில் மைசூர் பாகு….. செய்வதைச் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள். நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
 34. ஆதி,

  நலம்தானே ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 35. வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  நேரமின்மையால் சில மாதங்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. விரைவில் பதிவிடுவேன் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…