Monday, July 7, 2014

புயலடித்த இரவு!நான் எழுதிய நூல் அறிமுகப் பதிவுகள் ஒரு சிலதில் பி.வி.ஆர் என்ற எழுத்தாளரைப் பற்றி ”எங்கள் ப்ளாக்” ஸ்ரீராம் சார் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். சமீபத்தில் பழைய பேப்பர் எடுக்கும் கடை ஒன்றில் சில நாவல்களை பார்த்து வாங்கி வந்தோம். அதில் பி.வி.ஆர் அவர்கள் எழுதியது ஒன்று இருக்கவே, இதுவரை படிக்காத இவரது எழுத்துகளை வாங்கி படித்து பார்ப்போமே என்று வாங்கினேன்.

அந்த கதை தான்புயலடித்த இரவு”. கதை எழுதப்பட்ட காலகட்டம் 1978களில், அன்றைய மாலைமதியில் வெளிவந்திருக்கிறது. அப்போதைய விலையும் 80காசுகள் மட்டுமே…..:) சரி வாங்க! கதைக்குள் போவோம்.

ஊட்டியில் பிரபல மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரும், பங்குதாரருமான கோபிநாத். இளம் வயதிலேயே பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து நல்ல பெயர் எடுத்திருந்தான். இன்னும் பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடிக்க துடிப்புடன் இருந்தான். சிறுவயது முதலே மாமாவுடன் தான் வளர்ந்து வந்தான். தாய் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு போவாள். ஆனால் தாயின் நடத்தை பற்றிய சில கேள்விகள் சிறு வயது முதலே கோபிநாத்தின் மனதில் இருந்ததால் தாயோடு அவனால் ஒட்ட முடியவில்லை.

படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த கோபிநாத் பெண்கள் விஷயத்தில் மோசமானவனாக இருந்திருக்கிறான். இப்படியே காலங்கள் ஓட மருத்துவப் படிப்பையும் முடித்து, மாமாவிடம் அனுமதி பெற்று ஊட்டியில் விலைக்கு வந்த ஒரு மருத்துவமனையை வாங்கி தன் நண்பன் முரளி மற்றும் ரம்யாவுடன் கூட்டு சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தான்.

ஒருநாள் அதிகாலை அவனுக்கு ஒரு வித்தியாசமான கனவு வருகிறது. அதில் மலைச்சரிவில் கோபிநாத் சைக்கிளில் செல்வதாகவும், அங்கிருந்து பள்ளத்தாக்கில் விழும் நிலையில், ப்ரேக் பிடிக்க கைகள் வேலை செய்யவில்லை. மரத்து போனது போலிருந்தது. பள்ளதாக்கிலிருந்து தன்னை போலவே ஒருவன் வந்து, இனி கோபிநாத்தின் கைகள் வேலை செய்யாது எனவும், நேற்று தான் அவனுடைய கடைசி ரணசிகிச்சை முடிவுற்றதாகவும் சொல்லி விட்டு, இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூற கனவு கலைகிறது. இதை கோபிநாத் கேலியோடு தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

அன்று சிவபாதம் என்பவருக்கு வயிற்றின் குடலில் ஏற்பட்ட புண்ணை குணமாக்க செயற்கை குழாய் பொருத்த தயாராக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைகிறான். செவிலியர் எல்லாம் தயாராக வைக்க, கைகளில் க்ளவுஸை மாட்ட எத்தனிக்க, வலதுகையை தூக்க முடியவில்லை…..

கனவு பலித்து விட்டது. என்றோ யாருக்கோ செய்த துரோகம் தான் இன்றைய நிலைக்கு காரணம் என நண்பன் கூற…. சாருமதி! கல்லூரிப்பருவத்தில் பம்பாய் வாழ்க்கையில் சாருமதிக்கு தான் செய்த துரோகத்தை எண்ணி, இன்று ஒரு பெண் குழந்தையுடன் தவிக்கும் சாருமதியை திருமணம் செய்து உடன் அதற்கான பரிகாரத்தை செய்கிறான். ஆனாலும் கைகள் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றவுடன் வேலை செய்வதில்லை. 

மீண்டும் யோசித்ததில் ஜானகி தோன்றினாள். ஒரு டாக்டர் என்ற அகந்தையில் அவளிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணி கூசி, அவளிடம் சென்று பாவ மன்னிப்பை கேட்கிறான். அவளும் மனதார மன்னித்தாள். இருந்தும் கைகளுக்கு உணர்வே கிடைக்கவில்லையே…..

இதை விட பெரிய பாவமாக ஒரு புயலடித்த இரவில் பெற்ற தாய் மகனிடம் சிகிச்சை பெற வந்தும், விரட்டியடித்த மகனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் இது என்று உணர்ந்து, தாயிடம் ஓடிச் சென்று பாவ மன்னிப்பு கேட்டு முற்றிலும் புதிய மனிதனாக மாற கைகளும் புத்துணர்வு பெறுகிறது.

இப்படியாக பி.வி.ஆர் அவர்களின் புயலடித்த இரவை வாசித்து மகிழ்ந்தேன். வலையில் தேடியும் அப்புத்தகம் கிடைக்காததால் முழுக்கதையும் இங்கேயே வெளியிட்டு விட்டேன்….:) உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


22 comments:

 1. சுவாரஸ்யமாக உள்ளது... நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. தாங்கள் எழுதியுள்ளதில் இதைப் படித்ததிலேயே இவ்வளவு சுவாரஸ்யமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 3. பிவிஆர் எழுத்துகள் உயிரோட்டம் கொண்டவையாக இருக்கும். இது போன்ற கதைகளை நான் படித்ததில்லை ஆதி. மாத நாவல் எனும் கட்டங்களுக்குள் விரைவில் திணிக்கப்படும் நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிவிவிடும். அவருடைய செண்ட்ரல், மி லார்ட், இன்னும் நிறைய புத்தகங்கள் மிகவும் நன்றாக எழுதப் பட்டிருக்கும். அநேகமாகக் கேரளப் பின்னணியில் பலகதைகள் வந்திருக்கின்றன. இவ்வளவு கச்சிதமாகக் கதையை நீங்கள் சொல்லி இருப்பது அழகாக இருக்கிறது. சென்னையில் கிடைத்தால் வாங்கவேண்டும் .நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 4. பி,வி.ஆர் கதைகள் சிலவற்றை படித்துள்ளேன்! சுவாரஸ்யமாக எழுதுவார். கதை பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete
 5. அப்பாடி.... பழைய நினைவுகளைக் கீறி விட்டு விட்டீர்கள். எங்கள் வீட்டில் பைண்ட் செய்த புத்தகமே இருந்தது. இதுதான் நான் தேடிக் கொண்டிருப்பதாகச்ஜ் சொன்ன கதையோ என்று யோசித்தேன். இல்லை. இதே போல இன்னொரு கதையும் இருக்கிறது. பி வி ஆர் கதைகள் நன்றாயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கதையும் இல்லயா சார்!!!

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 6. கதைச்சுருக்கமே நன்றாக இருந்தது.பகிர்விற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி சார்.

   Delete
 7. அருமையான கதை குறித்து சொல்லியிருக்கிறீர்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க குமார்.

   Delete
 8. பிவிஆர் கதைகளை படித்ததில்லை. உங்களுடைய இந்த விமர்சனம் அவருடைய கதைகளை படிக்கத் தூண்டுகிறது. நன்றி.
  இங்கிருக்கும் நூலகங்களில் அவருடைய புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.

   Delete
 9. Nalla kadhai. Kadhai surukki velittadhu sirappaga irundhadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 10. அருமையான கதை சகோதரி!

  தங்கள் தொகுப்போ சுருக்கமோ எது எப்படியோ..
  கதையைத் தேடி வாசிக்கத் தூண்டும் விதமாக இருக்கிறது.
  மிக அருமை!

  பகிர்வினுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க இளமதி.

   Delete
 11. iவ்ட்த்தியாசமான் அக்தை, பகிர்வுககு பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரிம்மா.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…