Wednesday, July 2, 2014

பத்துக்கு பத்து!சமீபத்தில் வலையுலகில் தொடர்பதிவொன்று பதிவர்களிடையே வலம் வந்து கொண்டிருந்தது. ஆமாங்க! பத்து கேள்விகள், அதற்கான நம் பதில்கள் என்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. நாம் எழுதுவதோடு மட்டுமல்லாமல் பத்து பேரை கோர்த்து விடணுமாம். கீதமஞ்சரி மற்றும் தமிழ்முகில் பிரகாசம் ஆகிய இருவரும் இந்த கேள்வி-பதில் பதிவுக்கு அழைப்பு விடுக்க, நானும் மாட்டிக் கொண்டு விட்டேன். வாங்க! நானும் என்ன தான் சொல்லப் போறேன் என்று பாருங்க….:)

1) உங்களுடைய நூறாவது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

இன்றைய காலகட்டத்தில் நோய்நொடி இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதே பெரிய விஷயம். இருந்தும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து நான் நூறு வயது வரை இருந்தால், என் பிறந்தநாளன்று ஏதேனும் நல்ல காரியங்கள் செய்ய நிச்சயம் முற்படுவேன்.

2) என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

சென்ற வருடம் இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்டேன். வண்டி இதுவரை வாங்கவில்லை என்றாலும், ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்கு பெருமிதம். அது போல் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் மனதில் உள்ளது. முடிந்தால் நிச்சயம் அதையும் கற்றுக் கொண்டு விட வேண்டும்.

3) கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது, எதற்காக?

என் மகளின் குழந்தைத்தனமான பேச்சிலும், தொலைக்காட்சியிலும் அவ்வப்போது சிரிப்பில் ஆழ்ந்து போவது உண்டு. நேற்று கூட ஒரு சமையல் குறிப்பிற்காக பால்பவுடர் தேவைப்படுவதாக சொல்லிக் கொண்டிருக்க, “அம்மா அதுக்கு நாம ராஜ்தானி ட்ரெயின்ல தான் போகணும். அப்போ தான் கொடுப்பாங்கஎன்று சொல்ல, அவளது அப்பாவித்தனமான பேச்சில் மனது விட்டு சிரித்தேன்.

4) 24 மணிநேரம் பவர்கட்டானால் நீங்கள் செய்வது என்ன?

சென்ற வருடங்களில் திருச்சியில் ஒரு நாளில் பாதி நேரம் மின்சாரம் இல்லாமல் தான் இருந்திருக்கிறோம். 24 மணிநேரமும் பவர்கட்டானால் முடிந்த அளவு அன்றாட வேலைகளைச் செய்வேன். முடியவில்லையென்றால் படுத்து தூங்க வேண்டியது தான்….:)

5) உங்கள் குழந்தைகளின் திருமண நாளன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் சுகமே உள்ளது. அதனால் அவர்களை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள அறிவுறுத்துவேன்.

6) உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியுமானால், எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்?

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தீர்க்க முயல்வேன். பாலியல் வன்முறையை முற்றிலும் களைய முற்படுவேன். பச்சிளம் சிசுக்களைக் கூட இந்த மிருகங்கள் விட்டு வைப்பதில்லையே……:(

7) உங்களுக்கு ஒரு பிரச்சனை, அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?

நிச்சயமாக, சந்தேகமே இல்லாமல் என் கணவரிடத்தில் தான் அட்வைஸ் கேட்பேன்.

8) உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார், அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

தவறான செய்தி பரப்புபவரிடம் என்னை புரிய வைக்க முயற்சி செய்வேன். மீறி அதே தவறை அவர் செய்தால் என் மனதை தேற்றிக் கொண்டு, கண்டுகொள்ளாமல் இருக்க பழகுவேன்.

9) உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

துணையின் இழப்பு என்பது அவ்வளவு சீக்கிரம் தேற்றக் கூடிய விஷயமல்ல. அதனால் அவரைத் தனிமையில் விட்டு, கொஞ்சம் போனதும் துணையின் நினைவுகளை அசை போடச் சொல்வேன். அது அவரின் மனதில் ஏற்பட்ட வடுவை ஆற்ற உதவி செய்யும்.

10) உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில், மனதிற்கு இதமான இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டும், புத்தகங்களை படித்துக் கொண்டும் இருப்பேன்.

இந்த பதிவை எழுத வாய்ப்பளித்த கீதமஞ்சரி அவர்களுக்கும், தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த தொடர்பதிவு சங்கிலியில் நான் தான் கடைசி என்று நினைக்கிறேன். அதனால் நான் யாரையும் குறிப்பாக அழைக்கப் போவதில்லை. விருப்பமுள்ளவர்கள் இதை தொடரலாம்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


30 comments:

 1. Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 2. என் அழைப்பினை ஏற்று தொடர் பதிவில் கலந்து கொண்டு பதிலளித்தமைக்கு நன்றிகள் சகோதரி.

  தங்களது அனைத்து பதில்களையும் மிகவும் ரசித்தேன்.

  குறிப்பாக,

  நூறாவது பிறந்த நாளில் செய்ய விரும்புவது, மனம்விட்டு சிரித்தமைக்கான காரணம், தனியாக இருக்கும் வேளைகளில் செய்வது, அட்வைஸ் கேட்க விரும்பும் நபர் இவற்றிற்கான பதில்கள் மிகவும் பிடித்திருந்தன.

  மீண்டும் என் நன்றிகளை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பளித்த தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 3. அருமையான பதில்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 4. அனைத்து பதில்களும் ரசனை.... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 5. வணக்கம்

  கேள்விகளுக்கு வித்தியாசமான முறையில் பதில் சொல்லியுள்ளிரு்கள் வாழ்த்துக்கள்
  என்பக்கம் கவிதையாக
  நீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்
  http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/07/blog-post.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.

   Delete
 6. பத்துக்குப் பத்து பதில்கள் அனைத்தும் அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க குமார்.

   Delete
 7. அழகாக பொறுப்பாக பதில்களை அளித்துள்ளீர்கள். நன்றி ஆதி. விரைவில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள என் வாழ்த்துக்கள். ரோஷ்ணியின் பேச்சு என்னையும் சிரிக்கவைத்தது. குழந்தைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 8. யதார்த்தமான பதில்கள்
  மனம் கவர்ந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 9. உங்கள் பதிவுகளில் என்னவர் எனச் சொல்வதை
  நான் அதிகம் ரசிப்பேன்
  கணவர் என்பதை விட அது அருமையானச் சொல்
  என்பது என் கருத்து
  இதில் கூட அப்படிச் சொல்லி இருக்கலாமோ ?

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் கூட ”என்னவர்” என்று சொல்லிக் கொள்வது தான் மிகவும் பிடிக்கும்.....:)) இருந்தும் ஒரு மாறுதலுக்காக இந்தப் பதிவில் கணவர் என்று எழுதினேன்....:))

   தங்களின் ஆலோசனைக்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி சார். இனி என்னவர் என்றே குறிப்பிடுகிறேன்....:))

   Delete
 10. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 11. அனைத்து பதில்களும் சூப்பராக உள்ளன. ஹும், பவர்கட் ஆனால் தூக்கம் வருமா !

  உங்கள் விருப்பப்படியே சீக்கிரமே கார் ஓட்டி அசத்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கொசுக்கடியால் தான் என்னால் தூங்க முடியாது....:)) மற்றபடி காற்று இல்லாவிட்டாலும் தூங்கி விடுவேன்...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.

   Delete
 12. அழகான பதில்கள். எல்லா பதில்களுமே ரசிக்க வைத்தன. எனக்கும் உடன்பாடானவைதான். ஆனால் 8ம் கேள்விக்கான பதில்தான் எனக்கு ஒத்துவராதது. அப்படி ஆசாமிகளிடம் எப்படி மனசைத் தேத்திகிட்டு பழக முடியும்,,,? நான் அவ்வளவு நல்லவன் இல்லீங்கோ...!

  ReplyDelete
  Replies
  1. மனசை தேத்திகிட்டு அவர்களிடம் பழகுவேன் என்று சொல்லவில்லை சார். மனசை மாற்றிக் கொள்ள பழகுவேன் என்பதை தான் அப்படி குறிப்பிட்டிருந்தேன். நானும் அவ்வளவு நல்லவ இல்லை தான்...:)))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்.

   Delete
 13. Interesting & appreciable answers.

  BTWay. ..
  "Men may come !
  Man may go !!
  But, 'chain-posts' go on for ever !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் சார்.

   Delete
 14. சிறப்பான பதில்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete
 15. அருமையான பதில்கள்,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…