Thursday, June 19, 2014

எல்லாம் நன்மைக்கே!எல்லோருக்கும் வணக்கம். நண்பர்கள் அனைவரும் நலம் என்று நினைக்கிறேன். சில பல காரணங்களால் மூன்று மாதங்களாக வலையுலகம் பக்கம் வராமல் இருந்து விட்டேன். மார்ச் மாதத்திலேயே கொஞ்சம் சலிப்பு வரத் துவங்கி விட்டாலும், அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். மகளின் தேர்வுகள் துவங்கியவுடன் கணினியை விட்டு மொத்தமாக விலகினேன். பின்பு விடுமுறை. அவளுடனேயே என் பொழுதுகளை கழிக்கத் துவங்கினேன். கைவேலைப்பாடுகள் சிலவற்றை என் உதவியுடன் செய்தாள். தொலைக்காட்சியில் நேரங்களை கழித்தோம்.

மே மாத துவக்கத்தில் ரோஷ்ணியின் அப்பா இங்கு வந்து விட மூவருமாக தெனாலிராமன் திரைப்படத்திற்கு சென்று வந்தோம். திருச்சியை அடுத்துள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாளை திவ்யமாக தரிசனம் செய்தோம். அடுத்து ஒரு மலை வாசஸ்தலத்திற்கு ஒருநாள் பயணமாக சென்று வந்தோம். அது என்ன இடம் என்பது சஸ்பென்ஸ்! என்னவரின் அடுத்த பயணத்தொடராக இருக்கலாம். ஒரு நாளை அருமையாக என்ஜாய் செய்தோம். இவையெல்லாமே ரோஷ்ணி அப்பா இங்கு வந்தவுடனேயே அடுத்தடுத்து சென்று வந்த இடங்கள். அதன் பிறகும் நிறைய திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால் கடவுள் என்ன நினைக்கிறாரோ அதானே நிகழும்…..:)

திடீரென்று என்னுடைய உடல்நிலை தகராறு செய்ய ஆரம்பிக்க எல்லா திட்டங்களும் ரத்து… தில்லியில் ஆரம்பித்த இந்த பிரச்சனை, நான் இங்கு வந்த காரணமும் அதுவே. இங்கு வந்த பிறகு வேறுவிதமாக இருந்தது. அருகிலுள்ள பெண் மருத்துவரிடம் காண்பித்து கொண்டிருந்தேன். தற்காலிக நிவாரணத்திற்காக தொடர்ந்து ஹார்மோன் மருந்துகளை பரிந்துரை செய்து வந்தார். அவரே தொடர்ந்து இதை நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லவே, ஆயுர்வேதம், சித்தா என்று மாறி பார்த்தும் உடனடி பலனில்லை.. இப்படியே வேறு மருத்துவரிடம் பார்க்கலாமா? என்று யோசித்தே இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்போது மீண்டும் தில்லியில் இருந்தது போலவே பிரச்சனை துவங்க, விடுமுறை முடிந்து என்னவரும் கிளம்பிவிட, ஒரு சுபவேளையில் என் தோழிகள் சிலரின் பரிந்துரையில் குறிப்பிட்ட வேறு மருத்துவரை பார்க்க, நாம் சொல்லும் விஷயங்களை நிதானமாக காது கொடுத்து கேட்கிறார். எந்த சிடுசிடுப்பும் இல்லை. இதுவே எனக்கு மிகுந்த மகிழ்வளித்தது. பரிசோதனைகள் முடிந்து பிரச்சனையின் ஆணி வேரை கண்டறிந்து, அதை தீர்ப்பதற்கான வழியையும் சொல்லி, ஒருவழியாக எல்லா வேலையும் முடிந்து விட்டது. இனி மருத்துவர் சொல்லியுள்ள உணவு முறைகளையும், நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் கடைபிடிக்க வேண்டும். பலவித மன உளைச்சலுக்கு ஆளானாலும் ஒரு தீர்வை கண்டறிந்து அதை தீர்த்ததில் மனது லேசான உணர்வு.

சமீபத்தில் பேசிய தில்லி தோழி கூட “தில்லியிலிருந்து வந்ததிற்கான காரணத்திற்கு இப்போது தான் தீர்வு கண்டுள்ளாய்” என்றார். நேரம் தான். அல்லல்பட வேண்டும் என்று இருந்திருக்கிறது.

இனி நடப்பவை எல்லாம் நன்மைக்கே….

தொடர்ந்து சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


21 comments:

 1. //பலவித மன உளைச்சலுக்கு ஆளானாலும் ஒரு தீர்வை கண்டறிந்து அதை தீர்த்ததில் மனது லேசான உணர்வு.// //இனி நடப்பவை எல்லாம் நன்மைக்கே….//

  கேட்கவே சந்தோஷமாக உள்ளது. வாழ்க !.

  ReplyDelete
 2. நல்லது மட்டுமே இனி தொடர
  நிச்சயம் அந்த ரங்கநாதன் அருள்வாள்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 3. உடல்நிலை விரைவில் குணமாகட்டும்....

  ReplyDelete
 4. இனி நடப்பவை எல்லாம் நன்மைக்கே….

  நலமாக நடக்கட்டும்..!

  ReplyDelete
 5. Glad to see you back! Take care of your health!

  ReplyDelete
 6. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 7. நலம் பெற வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்

  ReplyDelete
 8. துன்பங்கள் துயரங்கள் மறையட்டும்
  சுகமான காலங்கள் தொடரட்டும்
  இன்பத்தை வாழ் நாட்கள் உணரட்டும்
  இனிதான பொழுது என்றுமே உனதாகட்டும்...


  வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
 9. உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஆதி. மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்தையும் தவறாமல் மேற்கொள்ளுங்கள். விரைவில் பூரண நலம் பெற்று பழையபடி வலையில் வலம் வர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஆதி,

  உங்களை மீண்டும் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி. விடுமுறைக் கொண்டாட்டத்தினால்தான் பதிவுகள் எழுதவில்லையோயென நினைத்தேன்.

  இனி நல்லதே நடக்கும்.

  ReplyDelete
 11. வலைப்பக்கம் வருகை இல்லாமல் இருந்ததும் என்ன காரணமோ என எண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு தங்களின் பதிவு தெளிவு படுத்திவிட்டது. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்! நன்றி!

  ReplyDelete
 12. அன்பு ஆதி,நீங்கள் சிரமப்பட்டது வருத்தத்தைக் கொடுத்தாலும் அதற்குத் தீர்வும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். இனி எந்தத் துன்பமும் அண்டாமல் இறைவன் உங்களைக் காக்கட்டும். மகிழ்வுடன் இருங்கள்.பத்திரமாக இருங்கள்.

  ReplyDelete
 13. பிரிய ஆதி ஆசிகள் நெடுநாளைய தேடுதல். இன்று பார்த்து ஓரளவு மன நிம்மதி. வழக்கமாய் அன்பு பாராட்டுபவர்கள் தேடுதல் இயற்கைதான். காரணம் புரிய இவ்வளவு நாள் வேண்டியிருந்தது. உடல் நலம் பெற்று சீரும்,சிறப்புமாக வாழ கடவுளை வேண்டுகிறேன். உங்கள் யாவருக்கும் என் நல்லாசிகள். அன்புடன்

  ReplyDelete
 14. அன்புள்ள ஆதி, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். உடல்நிலை நன்றாக இருந்து நேரமும் அமைந்தால் தொடரவும். நன்றி.
  http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

  ReplyDelete
 15. நானும் தேடினேன் உன்னை. இன்று பார்த்து மனது காரணம் அறிந்தது. உடல்நலம் முக்கியம். நன்றாகக் கவனித்துக் கொள். உங்கள் யாவருக்கும் என் மனப்பூர்வ ஆசிகள். அன்புடன்

  ReplyDelete
 16. ஓ இதான் காரணமோ , அப்ப அப்ப நினைபப்துண்டு , என் பக்கம் சில நேரம் வருவீர்கள் . கூடிய விரைவில் பூரண குணமடைந்து உற்சாகமாய் வலைபக்கம் வர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. ஆதி நலமா? உடல் நிலைக்கு தீர்வு கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி.
  மருத்துவர் ஆலோசனைபடி நடைபயிற்சி, உடற்பயிற்சி இவற்றை கடைபிடித்து நலமாக இருங்கள் மகிழ்ச்சியாக.. வாழ்த்துக்கள்..
  இன்றுதான் ஊரிலிருந்து வந்தேன். ரோஷ்ணி நலமா?

  ReplyDelete
 18. ஆறுதலான வார்த்தைகள் கூறி நலம் வசாரித்து வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 19. எல்லாம் நன்மைக்கே! உடல் நலம் பேணவும்!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…