Saturday, March 8, 2014

மங்கையராய் பிறக்க மாதவம்!

மாலை வேளை என் மகளின் டிவி நேரம். அதில் அவள் ஒரு மழலைகளின் தொடரை பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் தேநீரை பருகிக் கொண்டே அவளுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் ஒரு காட்சி....  இந்த வருடத்தின் விடுமுறை வேலையாக ஆசிரியர் என்ன தரப் போகிறார் என வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆசிரியர் இந்த முறை வித்தியாசமாக அவரவர் வீட்டில் இல்லாமல் சக நண்பரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ளச் சொல்கிறார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வது போல் செய்கின்றனர். மற்றவரின் வீட்டு விதிமுறைப்படி இருக்க முடியாமல் திணறிப் போகின்றனர். இதை நகைச்சுவையாக காட்டியிருந்தனர்.

இதை பார்த்த பின்பு எனக்கு வேறு ஒன்று தோன்றியது. இதைப் பற்றி எவ்வளவோ பேர் பேசியும் எழுதியும் உள்ளனர். ஆனால் எனக்கு இந்த சிந்தனை தோன்றிய சந்தர்ப்பம் வேறு என்பதால் இங்குஎழுதுகின்றேன். அது என்னவென்றால் வேறு ஒருத்தரின் வீட்டில் இரண்டு நாட்களுக்கே ஒன்றிப் போக முடியாமல் திணறிப் போகிற போது, பெண் என்பவள் திருமணம் என்ற ஒன்று ஆனவுடன் இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்ல நேருகிறது.

அப்படிச் செல்லும்போது அங்கு உள்ள உறவுகளை தன்னுடைய உறவுகளாக நினைத்து,  அவர்களைப் புரிந்து கொண்டு அங்கு உள்ள பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறாள். கணவர் அவருடைய உறவுகளை எப்படி அழைக்கிறாரோ அதே மாதிரி தானும் அம்மா, அப்பா, அத்தை, மாமா என்று உரிமையோடு அழைத்து அந்த குடும்பத்தோடு ஒன்றாகிப் போகிறாள்ஆண்களால் இப்படி இருக்க முடிவதில்லை. மனைவியின் உறவுகளோடு ஒன்றிப் போக முடிவதில்லை. மாமனாரைசார்என்று அழைக்கும் மாப்பிள்ளைகளும் இருக்கின்றனர்.

ஒரு பத்திரிகையில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. பெண்ணானவள் பிறந்த வீட்டிற்கு சென்றாலும் கணவனைப் பற்றியும் வீட்டை பற்றியுமே எண்ணுகிறாள். ஆண்கள் பிரயாணம் செல்வதானாலும் நினைத்த போது கிளம்பிவிடுகின்றனர். ஆனால் ஒரு பெண் பிரயாணம் செய்யும் போது ஆமை ஓட்டை சுமப்பது போல் பெண் வீட்டைச் சுமக்கிறாள்இது எவ்வளவு உண்மை!!.

இன்னமும் கூட நம் கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தாலே பாவம் என்று பலபேர் நினைக்கின்றனர். பெண் சிசுவதை என்பது இன்னமும் பல மாநிலங்களில் நடந்து கொண்டு இருக்கிறதுஇவர்களிடமிருந்து தப்பித்து வந்த பின்பும், பெண்களுக்கு எதிராய் தினம் தினம் எதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறதுஎன்றாலும்மங்கையராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும் அம்மாஎன்ற  கவிஞனின் பாடல் போல, நான் பெண்ணாய் பிறந்ததற்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்ததற்கும் எனக்குப் பெருமையே.

அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!

மீண்டும் சந்திப்போம்….


ஆதி வெங்கட்,
திருவரங்கம்.

டிஸ்கி:- மார்ச் 8ம் தேதியான இன்று எங்களுடைய வாழ்விலும் சிறப்பான ஒரு நாள். நாங்கள் முதன்முதலாக சந்தித்துக் கொண்டதும் இந்த நாளில் தான்....:))

16 comments:

 1. பெண் சிசுவதை முன்பை விட இன்றைக்கு எவ்வளவோ குறைந்து உள்ளது... வரும் நாட்களில் முழுவதும் மறைந்து விடும்.... மறைய வேண்டும்...

  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

  ReplyDelete
 2. ஒரு பெண் பிரயாணம் செய்யும் போது ஆமை ஓட்டை சுமப்பது போல் பெண் வீட்டைச் சுமக்கிறாள்!
  அனுபவப்பூர்வமான உண்மை..

  இனிய நாளின் மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்கு அன்பான பாராட்டுக்கள்.. நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மகளிர் தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மகளிர்தின வாழ்த்துக்கள்!! தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. எல்லோருக்கும் மகளிர் தினம் என்றால், தங்களுக்கு மட்டும் கூடுதல் சந்தோஷத்தை தரும் நாளாகி விட்டதா. மகிழ்ச்சி சகோதரி.
  ஆனால் உங்களவரிடம் தான் கேட்க வேண்டும் இது மகிழ்ச்சியான நாளா என்று???
  (சும்மா கலாய்த்தேன். தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம்)

  ReplyDelete
 7. //மாமனாரை “சார்” என்று அழைக்கும் மாப்பிள்ளைகளும் இருக்கின்றனர்.//

  எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படித்தான்... ஏன் என்று கேட்டால் அதுதான் மரியாதை, இந்த அளவு விலகி இருப்பதே நல்லது என்கிறார்....

  //மார்ச் 8ம் தேதியான இன்று எங்களுடைய வாழ்விலும் சிறப்பான ஒரு நாள். நாங்கள் முதன்முதலாக சந்தித்துக் கொண்டதும் இந்த நாளில் தான்....:))//

  ம்ம்ம்... முதல் சந்திப்பு மறக்க முடியாதது தான்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 8. நல்ல பகிர்தல்.... உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. டபுள் வாழ்த்துக்கள்!
  த.ம - 5

  ReplyDelete
 10. அருமையான பகிர்வு தோழி!
  அப்புறம் நேத்து டபுள் celebration னு சொல்லுங்க !!
  அதற்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் + நல்வாழ்த்துக்கள்.


  ReplyDelete
 12. பதிவும் சூப்பர், டிஸ்கியும் சூப்பரோ சூப்பருங்க.

  மகளிர்தின வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 13. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…