வட இந்திய உணவுகளில் பனீருக்கு ஒரு சிறப்பான பங்கு இருக்கிறது. பாலை திரித்து தயாரிக்கப்படும் பனீரில் நம் உடலுக்கு தேவையான நல்ல பல சத்துகள் உள்ளன. பனீரை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் சப்ஜிகளில் பயன்படுத்துவார்கள். பிரபலமான பனீர் சப்ஜிகள் – பாலக் பனீர், மட்டர் பனீர், கடாய் பனீர், ஷாஹி பனீர் போன்றவை. ஆனால் அந்த பனீரை பயன்படுத்தி பராட்டா செய்வதை இன்று பார்க்கலாம். செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு – 2 கப்
துருவிய பனீர் – 1 கப்
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
சீரகத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
கோதுமை மாவை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவாக பிசைந்து மூடி வைக்கவும். பனீரை கேரட் துருவியில் துருவியோ, அல்லது உதிர்த்துக் கொண்டோ அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இது தான் பூரணம். இதை சப்பாத்திக்கு உள்ளே ஸ்டஃப் செய்ய வேண்டும்.
எலுமிச்சையளவு உருண்டைகளாக சப்பாத்தி மாவை உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து மாவைத் தொட்டுக் கொண்டு உள்ளங்கையளவு திரட்டி உள்ளே 1 தேக்கரண்டியளவு பனீர் கலவையை வைத்து மூடி மெலிதாக திரட்டிக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்.. பனீர் பராட்டா தயார்.
ஊறுகாய், மற்றும் தயிருடன் சுவையான பனீர் பராட்டா ஜோராக இருக்கும். இதே போல் சீஸ் பராட்டாவும் செய்யலாம்.
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
டிஸ்கி:- இந்த குறிப்பு சென்ற வாரம் ஆசியா உமர் அவர்களின் சமைத்து அசத்தலாம் வலைப்பூவின் சிறப்பு விருந்தினர் பகிர்வில் இடம்பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....:)
என்னுடைய பாலக் பனீர் சப்ஜி
டிஸ்கி:- இந்த குறிப்பு சென்ற வாரம் ஆசியா உமர் அவர்களின் சமைத்து அசத்தலாம் வலைப்பூவின் சிறப்பு விருந்தினர் பகிர்வில் இடம்பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....:)
என்னுடைய பாலக் பனீர் சப்ஜி
சுவையான ஜோரான சத்தான பன்னீர் பராத்தா பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteமிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி... செய்து பார்ப்போம்... நன்றி...
ReplyDeleteVaazhththukaL Adhi. Pennidam solkiREn.
ReplyDeleteஇனித்தான் செய்து பார்க்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇதுவரை அறியாதது,உண்ணாதது
ReplyDeleteவீட்டம்மாவிடம்பதிவைக் காட்டிக்
கோரிக்கைவைத்துள்ளேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteஆஹா... உடனே செய்து பார்க்கணும்...
ReplyDeleteநல்ல செய்முறை விளக்கம்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteகருத்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..
ReplyDelete