Thursday, March 20, 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்!



சமீபத்தில் ஒரு திருமண விஷயத்திற்காக, ஒரு குறிப்பிட்ட MATRIMONY தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அழைத்திருந்தேன். அழைப்பை ஏற்ற ஒரு பெண்மணியிடம், நான் என்னை அறிமுகம் செய்து கொள்ள, “என்ன விஷயம்? எதற்கு அழைத்தீர்கள் என வெடுக்கென கேட்க…..” நானும் அவர்கள் வீட்டு பெண்ணின் பெயரை குறிப்பிட….. அப்படியெல்லாம் யாரும் இங்கு இல்லை என்று சொல்லி, நான் பதில் சொல்வதற்குள் படாரென கட் செய்து விட்டார். சரி! எண் தான் தவறு போலிருக்கிறது.. என்று மீண்டும் சரி பார்த்து விட்டு அழைக்க, ரிங் போனவுடன் கட் செய்து விட்டார்கள்…..:)

இத்தோடு நான் நிறுத்தி கொண்டிருக்கலாம். மீண்டும் நான் அழைக்க….. எடுத்தார் அந்த பெண்மணி. நான் பேச ஆரம்பிப்பதற்குள் “ஏன் சும்மா தொந்தரவு பண்றீங்க? என்று சொல்லவே, நான் அதிர்ந்தாலும், ஒருநிமிடம் சுதாரித்து கொண்டு, “குறிப்பிட்ட தளத்தை சொல்லி அங்கு உங்க வீட்டு பெண்ணின் எண்ணை பார்த்து தான் அழைத்தேன். இதையெல்லாம் கேட்பதற்குள்ளாகவே கட் பண்றீங்களேன்னு கேட்க, அப்படியெல்லாம் யாரும் இங்கு இல்லை. இனிமே கால் பண்ணாதீங்கன்னு கட் பண்ணி விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் தானே பதிவு செய்து எண்ணைத் தந்துள்ளார்கள். அப்படியிருக்க இப்படி வெடுக்கென பேசினால் என்ன அர்த்தம்? ஒரு வேளை அந்த பெண்ணிற்கு நிச்சயம் ஆகியிருந்தாலும் அதை சொல்லலாமல்லவா? கோபமாக வந்தது அந்த பெண்மணியின் மேல்….:) என்ன செய்ய?

இரண்டாவது விஷயம்!

இது பதிவுலகம் சம்பந்தபட்டது. சில மாதங்களுக்கு முன்னர் வலைச்சர ஆசிரிய பொறுப்புக்காக பல தளங்களை தேடி கொண்டிருந்ததில், ஒரு தளத்தில் என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொண்ட கோலம் ஒன்று காணப்பட்டது. எங்களுடைய குடியிருப்பில் பொங்கல் சமயத்தில் போட்டிருந்த கோலம் அது. நான் தான் புகைப்படமெடுத்து பகிர்ந்து கொண்டிருந்தேன். சந்தேகத்திற்காக நன்றாக பார்த்ததில், அதே கோலம் தான். அவர்களுக்கு பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். பல நாட்களுக்கு பதிலே இல்லை. பின்பு என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பியிருந்தார்கள். அதாவது தன்னுடைய தளத்தில் இது போல் தன்னுடையதும், மற்றவர்களுடையதும் என எல்லாமே பகிர்வதாகவும். அது உங்களுடையதாக இருந்தால் நன்றி! என்றும் குறிப்பிட்டிருந்தார்…..:)

நானும் ”யாருடைய தளத்தில் இருந்து எடுத்திருந்தாலும் அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் தளத்தின் சுட்டியாவது தந்திருக்க வேண்டும்” என்றும் பதிலனுப்பினேன். அதற்கும் பல நாட்கள் கழித்து ”உங்களுடையது எது என்று குறிப்பிடுங்கள், வேண்டுமானால் அதை நீக்கி விடுகிறேன்” என்று பதில் அனுப்ப… புரிய வைக்க இயலாது என விட்டு விட்டேன்.

இப்போ மீண்டும் ஒரு நாள் பார்க்க இன்னும் சில கோலங்கள் என்னுடைய பதிவிலிருந்து எடுத்து போட்டுள்ளார்கள். அதே போல் நான் தந்த பின்னூட்டத்தையும் நீக்கி விட்டு, அதற்கு முன்னால் பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்….:) ”என் கைவண்ணம்” என்று இவர் வெளியிட்டுள்ள கோலங்களில் எது உண்மையாக இவர் போட்டது என்று நம்புவது?

நினைத்திருந்தால் என்னுடைய பதிவில் போட்டிருந்த கோலங்களை நான் போட்டதாகக் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் எங்கள் குடியிருப்பில் உள்ள பெண்கள் பல மணிநேரங்களை செலவழித்து போட்ட கோலங்களை எப்படி நான் என்னுடையதாக சொல்வது? மனசாட்சி உறுத்தாதா? அடுத்தவர்களின் உழைப்பில் பெருமை தேடிக் கொள்ளும் இவர்களைப் போன்றவர்களை என்ன செய்வது?

இதையெல்லாம் என்னவரிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டால், “எத்தனை பேரைத் தான் உன்னால் திருத்த முடியும்?” விட்டுத் தள்ளு… இந்த உலகமே இப்படித் தான் என்கிறார்…:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

பட உதவி - கூகிள்

28 comments:

  1. முதலாவது ஒரு டென்ஷன் பார்ட்டி... விடுங்க...

    இரண்டாவதில் உங்களவர் சொன்னது தான் மிகச்சரி... மறந்தே விடுங்கள் சகோதரி...

    ReplyDelete
  2. 1) அந்தப்பெண் எலோப் ஆகியிருக்கலாம்! :)))

    2) இந்தத் திருட்டுகள் சகஜம். சமீபத்தில் இதேபோல கூகிள் செய்து கொண்டிருந்தபோது தினமணி கதிரில் வந்த என் தந்தையின் சிறுகதை அப்படியே எடுத்து அவர்கள் எழுதியிருந்தமாதிரி வெளியிட்டிருந்தார்கள். நானும் அங்கே பின்னூட்டமிட்டு அலுத்து விட்டேன்... என்ன செய்ய!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார், நானும் அதைத்தான் நினைத்தேன்.. இல்லாட்டா அவ்வளவு கோபமா பேச மாட்டாங்க..!

      Delete
  3. ஆதி, வெங்கட் சொல்வது சரிதான்.
    நாம் சில விஷயங்களை பொருட்ப்படத்தாமல் இருப்பது நல்லது தான்.

    ReplyDelete
  4. சகோதரர் வெங்கட் சொன்னது தான் சரி தோழி இவர்களைத் திருத்தவே
    முடியாது .பலவகையான மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் ஒரு
    சிலரே நல்லவராய் இருப்பதும் விதி விலக்கு .எப்போதும் பிறரால் வரும்
    இது போன்ற இனல்களை மறப்பதே நன்று .வாழ்த்துக்கள் சகோதரி
    மேலும் சந்தோசங்கள் நிறைந்திட .த .ம.1

    ReplyDelete
  5. ஆஹா இங்கயும் ஒரு கதையா. என் படங்கள் பல காணாமலேயே போய்விட்டன ஆதி. சிலசமயங்களில் மனிதமனங்களைப் புரிந்து கொள்வதே கடினமாகிவிடுகிறது. அந்த அம்மாவுக்கு என்ன கோபமோ . நிச்சயமாகி நின்றதோ.ஏதாவது காரணம் இருக்கும். அதற்காகப் போன் பேசுகிறவர்களைக் கடிக்கவேண்டாம்....

    ReplyDelete
  6. இந்தக் குறிப்பிட்ட MATRIMONY தளத்திற்கு, "உங்கள் தளத்தில் தந்த விளம்பரத்திலுள்ள இலக்கத்துக்கு அழைத்த போது, அழைப்பை எடுத்த பெண் "நாய் போல்" வள்ளென, என்ன எது என்று கேட்காமலே குலைத்தார்.
    இப்படிப்பட்ட அடிப்படைப் பண்போ, நாகரீகமோ அற்ற இதுகளில் , விளம்பரங்களைத் தயவு செய்து இட்டு எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம்". என ஒரு அறிவிப்பு, நாய் போல்;இதுகள் போன்றதை அடிக்கோடிட்டு, அனுப்பவும்.யாரவது இதுகளைத் திருத்த வேண்டும்.

    இணையப் பதிவுத் திருட்டுக்கள்- பரவலாக உள்ளது. அவர்களாகத் திருந்தினாலொழிய , மாற வாய்ப்பேயில்லை. இங்கும் அடிப்படைக் கோளாறு.
    "சொல்லியும் செய்யார் கயவர்" என அப்போதே இவர்கள் பற்றிக் கூறிவிட்டார்கள்.

    ReplyDelete
  7. முதலாவது - சில நேரங்களில் சிலமனிதர்கள் தம் வீட்டு MATRIMONY - சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ‘ PP ‘ எண்களை கொடுத்து விடுவார்கள். தொலைபேசி உரிமையாளர் பல தொலைபேசிகளுக்கு பதிலளித்து பதிலளித்து நொந்து கந்தலான நேரத்தில் நம் தொலைபேசி சென்றிருக்கலாம்.

    இரண்டாவது - ஆஹா! நம்ம உழைப்பில் இன்னொருத்தர் உட்கார்ந்து சாப்பிடறாரேன்னும் சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். பனையேறுவது ஒருத்தன். நுங்கு தின்பது இன்னொருத்தனா என்று கேட்பது காதில் விழுகிறது.

    ReplyDelete
  8. என்னசொல்வது :(

    ReplyDelete
  9. உங்களவரின் கூற்றே மிகச் சரி
    பகிர்ந்து மனப்பாரம் குறைத்துக் கொண்டீர்கள்
    என நினைக்கிறேன்
    சில நேரங்களில் சில மனிதர்கள்
    தலைப்பு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அந்த நம்பரை கொடுங்கள்.நானும் கொஞ்சம் வாங்கி கட்டிக்கிறேன். ஆனால்,பதிலுக்கு டின் கட்டி விடுவேன். என்ன மனிதர்களோ???

    ReplyDelete
  11. நீங்கள் சொல்வது உண்மை தான். பார்த்தவுடன் கோபம் தான் வரும். அதற்கு மேல் என்ன செய்வது? உங்கள் கணவர் சொன்னபடி விட்டுத் தள்ளுங்கள். ஆனால் உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது.

    ReplyDelete
  12. தங்கள் கணவர் சொல்லுவது சரி தான். சில மனிதர்களை திருத்த முடியாது!

    ரைட் க்ளிக்கை டிசேபல் செய்தால், புகைப்படத் திருட்டைக் குறைக்கலாம். ஆனால் முழுவதுமாக தடுக்க முடியாது.

    விளம்பரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் . என் ஆங்கில ப்ளாகில் ரைட் க்ளிக் பற்றி எழுதியிருக்கிறேன்!முயற்சி செய்து பாருங்கள்!
    http://sparklingbuds.blogspot.com/2014/03/blogger-post-content-and-image.html

    ReplyDelete
  13. என் சிறுகதை ஒன்றுக்கும் இதே கதி நேர்ந்தது.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்..

    ReplyDelete
  14. ஒருவேளை அந்த திருமணப் பெண்ணின் மேல் கோபமோ ! எது எப்படியோ அழைப்பு வேண்டாம் என்பவர்கள் பதிவை நீக்கியிருக்க வேண்டும். விடுங்க, அது அவர்களது தவறு.

    இந்த இரண்டாவது விஷயம் இருக்கே ...... அப்பப்பா .....ஆறுதல் சொன்ன நீங்களே இப்படி கவலைப்படலாமா ! படங்களின் மேலேயே வெள்ளை நிறத்தினாலான எழுத்துக்களை எழுதிடுங்க. ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ....... !! விட்டுத்தள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  15. Ithe pOla, en pathivikulalil vazhakkamaai naan pOdum thalaippai pottavarkkum pinnoottathil theriviththEn, maatrik kollavillai. enakku ezhutham aasaiye pOi vittathu!! :-((

    ReplyDelete
  16. முகனூலில் இது சகஜம்.. அடுத்தவர் எழுதியதை காப்பி பேஸ்ட் செய்து போட்டுக் கொள்வார்கள். அதற்கு அவர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பராட்டு சொன்னால் அதையும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.. இது இன்னொருவர் எழுதியது என்று சொல்லக் கூட மாட்டார்கள். அப்படி ஒருவர் என்னுடையதை வரிசையாக எடுத்துப் போட.. 'ரொம்ப நன்றி.. என் பெயர் போடாமல் என் பதிவுகளைப் போட்டுக் கொள்வதற்கு' என்று கமெண்ட் போட்டேன். அதற்கும் அசரவில்லை !

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.

    கற்பனையை திருடி வெகு காலம் பிழைப்பை ஓட்ட முடியாது... மேலும் அடிப்படை நாகரிகம் தெரியாதவர்களை என்ன செய்ய முடியும்.விட்டுத் தள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. ரொம்பக் கோபமா இருக்கீங்க போல! :)))) முதல்லே பிறந்தநாள் வாழ்த்துகளையும், ஆசிகளையும் ஏத்துக்கோங்க. அப்புறமா உங்க மறுபாதி சொல்லி இருக்காப்போல் அவர் கொடுத்திருக்கும் உரிமைகளை வைச்சு இஷ்டத்துக்குப் பரிசுகளை வாங்கித் தள்ளுங்க. :))))

    ReplyDelete
  19. இந்த ஜாதகம் கேட்டு அதுவும் பெண்களின் வீடுகளுக்கு, பெண்ணின் பெற்றோர், உறவினருக்கு ஜாதகம் கேட்டுத் தொலைபேசுகிறவர்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் வாங்கித் தான் கட்டிக்கணும். எங்களுக்கெல்லாம் மரத்துப் போச்சு! :)))))

    ReplyDelete
  20. இந்த காப்பி,பேஸ்ட் ரொம்ப சகஜமாப் போச்சு. என்னோட, "சிதம்பர ரகசியம்" சிதம்பரம் குறித்த தகவல்களைத் தேடித் தேடி உழைத்து எடுத்து எழுதிய தொடரை இளவரசி ஜான்சன் என்பவர் அப்படியே காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறார். பலமுறை பதில் போட்டு அலுத்துப் போச்சு. :( இதே போல் கர்ணன் குறித்து நான் எழுதியவை, பிள்ளையார் குறித்து எழுதியவை எல்லாமும் இப்படித் தான் வேறு சில தளங்களில் அப்படியே காப்பி, பேஸ்ட் செய்திருக்காங்க. இதிலே பிள்ளையார் குறித்து எழுதினதில் மட்டும் என்னோட பெயரைப் போட்டிருக்கிறதாலே சரினு விட்டுட்டேன். :))))) இம்மாதிரி நிறைய அனுபவம்!

    ReplyDelete
  21. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மனம் நிறைந்த நல்லாசிகள்.

    ReplyDelete
  22. சுவாரஸ்யமான தொடர் பதிவு ஆரம்பம்...

    அழைப்பவர் : சகோதரி தென்றல் சசிகலா அவர்கள்

    விவரங்களுக்கு : இணைப்பு : வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

    ReplyDelete
  23. பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆதி..

    மேட்ரிமோனியல் தளத்தில் தன் விவரங்களை பதிந்து தொலைபேசி எண்ணும் தந்ததால் தான் எல்லோரும் அழைக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர் இப்படி கடுப்பாக கட் பண்ணினதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு நினைக்கிறேன்பா ஆதி.. அதாவது அந்த வீட்டுக்குழந்தை ஒரு வேளை அம்மா அப்பாக்கு சொல்லாம தன் மனம் விரும்பியவருடன் திருமணம் முடிந்திருக்கலாம்.. அந்த கோபத்தில் அந்தம்மா இப்படி உங்களிடம் , அதே போல் அழைக்கும் அத்தனைப்பேரிடமும் அந்த கோபத்தை காட்டி இருக்கலாம். அப்படி அவர் செய்தது கண்டிப்பாக தவறு. தன் குழந்தை செய்த தவறுக்கு இப்படி தெரியாதவர்களிடம் கோபத்தை காட்டுவது தவறு... மன்னிப்போம்..

    அடுத்து உங்களுடைய கோலங்களை தன்னுடையதாக போட்டுக்கொண்டு என் கைவண்ணம் என்று போட்டுக்கொண்டு நீங்கள் போட்ட பின்னூட்டமும் அழித்து.... என்னத்த சொல்ல.. பிறர் உழைப்பில் பெருமையை தேடிக்கொள்ளும் இவர்களை மனிதர்களாகவே நினைப்பதில்லை நான்...

    த.ம.7

    ReplyDelete
  25. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி.

    பதிவின் தலைப்பை மிகச் சரியாகவே வைத்திருக்கிறீர்கள். வாழ்க்கைப் பாடத்தில் புதிய அனுபவங்கள்!

    ReplyDelete
  26. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதி சிஸ்டர் !
    //நினைத்திருந்தால் என்னுடைய பதிவில் போட்டிருந்த கோலங்களை நான் போட்டதாகக் கூட சொல்லியிருக்கலாம். //
    மனசாட்சி விழித்துகொண்டிருப்பவர்களால் இப்படி செய்யமுடியாதே . எழில் மேடம் சொல்வது போல் இதுபோன்றவர்களால் எத்தனை காலம் ஓட்டமுடியும்?

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…