Wednesday, March 12, 2014

வைரல் ஜூரம் பரவும் காலமிது!!!


இப்போ சீசன் போலிருக்கு, எங்கும் வைரல் ஜூரம் பரவிக் கொண்டு வருகிறது. இங்கே எங்கள் குடியிருப்பிலேயே சிலருக்கு ஜூரம், ஜூரம் என்று கேள்விப்பட்டு கொண்டிருந்தோம். கடைசியில்.....

வேறென்ன! எங்களுக்கும் வந்தே விட்டது....:(( முதலில் ரோஷ்ணிக்கு ஆரம்பித்தது. உடம்பு வலி, தொண்டையில் எரிச்சல், கொஞ்சம் கொஞ்சமாக ஜூரத்தின் வேகமும் அதிகரிக்க, மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். வைரல் ஜூரம், நான்கு நாளைக்கு இப்படித் தான் இருக்கும். பயப்பட வேண்டாம். என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என கேட்கவே, ஜூரத்திற்கு CALPOL SYPUPம் , ஜலதோஷத்துக்கு T-MINIC SYRUPம் கொடுக்கிறேன் எனச் சொல்லவே, அதையே கொடுங்கோ.. டோஸேஜ் மட்டும் அதிகமாக்கி கொடுக்கவும். பாலில் மஞ்சள் பொடி, மிளகு பொடி போட்டு கொடுங்கோ. வென்னீரில் உப்பு போட்டு கொப்பளிக்க சொல்லுங்கள் எனச் சொன்னார். 

இதெல்லாம் தான் நமக்கே தெரியுமே என்று அசட்டையாக போகாமல் இருந்தால் அப்புறம் ஏன் அழைத்து வரவில்லை என திட்டு விழும் எனவே டாக்டர் ஃபீஸ், போக வர ஆட்டோ என்று அதெல்லாம் யோசிக்க கூடாது.... :)

ஒருவழியாக நான்காம் நாள் ரோஷ்ணிக்கு ஜூரம் விட்டு விட, அன்று இரவே எனக்கு வந்து விட்டது. ஜூரம், தலைவலி, கால்வலி என வேதனை தான். செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட்டு படுக்கை தான். பிடிவாதமாக என்னுடனேயிருந்து மீண்டும் ரோஷ்ணிக்கு ஜுரம் எட்டிப் பார்க்க பாடுப்பட்டு கட்டுபடுத்தி வைத்துள்ளேன். பரீட்சை நேரமாச்சே....

ஐய்யோ! உடம்புக்கு முடியலைன்னாலே வேதனை தான்....:(( மருந்து, கஞ்சி எல்லாம் குடித்து இன்று தான் கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் ஜலதோஷமும், இருமலும் எங்களை விடுவதாக இல்லை...:) சுத்தமாக எழுந்து கூட நிற்க முடியாமல் போனதால் ஒருநாள் மாமியார் உணவும், கஞ்சியும் தந்தார்கள். அவர்களுக்கு சிரமம் தர வேண்டாம் என இன்று முதல் நானே செய்து கொள்ள ஆரம்பித்து விட்டேன்....:)

பட உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

12 comments:

 1. ஓய்வுதான் முக்கியம். ரெஸ்ட் எடுங்கள். உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். சித்தரத்தைக் கஷாயம், புழுங்கலரிசிக் கஞ்சி, சமஹன் கூட உபயோகிக்கலாம்.

  ReplyDelete
 2. குழந்தைக்கு பரீட்சை நேரம் மிகவும் சிரமம் தான்...

  நீங்களும் இரண்டு நாட்களுக்கு முக்கியமான வேலைகளை மட்டும் செய்யுங்கள்... விரைவில் நலம் பெறுவீர்கள்... தைரியமாக இருங்கள்...

  ReplyDelete
 3. உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் ஆதி.

  ReplyDelete
 4. ஜுரம் வந்தால் வேதனைதான்.. விரைல் நலம் பெற பிரார்த்தனைகள்..!

  ReplyDelete
 5. இப்ப நீங்க இருப்பது ஸ்ரீரங்கமா? தில்லியா ?

  பனி விட்டு போய் வெய்யில் வரும் வேளையில் தான்
  வைரஸ் களுக்கு கொண்டாட்டம்.

  முதல்லே பனி கொட்டும். அப்பறம் மூக்கு கொட்டும்.
  தொண்டை கர கர இருக்கும். வறட்டு இருமல் வரும்.
  லேசா ஜுரம் அடிக்கும்.
  வெறும் ஜலதோஷம் மட்டும் இருக்கலாம்.
  லேசா ஜுரம் அடிக்கும்.
  செற்றிசின் அரை மாத்திரை இரவு சாப்ப்பிடவும்.
  ஜுரம் 101 க்கு மேல் இருந்தால் பாரசடமால் சாப்பிடவும்.
  பரசெடமால் 650 பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 6 மணிக்கு ஒரு தரம் சாப்பிடலாம். குழந்தைகள் பாரசெடமால் பாதி மாத்திரை அதாவது 325 எம்.ஜி. ஆறு மணி க்கு ஒரு தடவை சாப்பிடலாம்.
  ஏதாவது, மினிமம் பிஸ்கட் 2 சாப்பிட்டுவிட்டு மாத்திரை சாப்பிடவும்.

  நிறைய தண்ணீர் குடிக்கவும்.
  நல்ல சாதம் சாப்பிடலாம். வயிற்ரை காயப்போடாதீர்கள். you can take plain rice , not necessary that you should take only kanji .

  நெஞ்சில் கபம் இருந்து இருமலுடன் சளிக்கட்டு ஒரு பச்சை கலர் இருந்தது என்றால் அசிரத்தையாக இருக்கவேண்டாம். டாக்டரிடம் பார்க்கவும்.ஐ மீன் அல்லோபதிக் டாக்டர்.  மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ச்சியாக இருந்தால்,
  டாக்டரிடம் சென்று ப்ளட் டெஸ்ட் செய்து கொள்ளவும்.

  சுப்பு தாத்தா.
  ReplyDelete
 6. Take care!! Get well soon!!

  ReplyDelete
 7. உடலுக்குத் தேவையான ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள் சகோதரி .
  நிறையத் தண்ணீர் குடிப்பதும் ஈரத் துணியால் ஒத்தடம் கொடுத்து
  உடம்பில் உள்ள வெப்பத்தைக் குறைப்பதும் விரைவில் காச்சல் குறைய
  வழி வகுக்கும் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி .

  ReplyDelete
 8. விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. இப்போ எங்கும் காய்ச்சல்தான் போலும்... எங்க வீட்டில் விஷாலுக்கு டைபாயிடு காய்ச்சல் வந்து இப்போ பரவாயில்லை...

  இங்கும் சீதோஷ்ண நிலை சரியில்லை... ஜலதோஷம் இருமல் என கொன்று எடுக்கிறது...

  இருவரும் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. தற்சமயம் இருவருக்கும் பரவாயில்லை... ஜலதோஷம் தான் பிடிவாதம் பிடிக்கிறது.. மருந்துகள் சாப்பிட்டு வருகிறோம். அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

  ReplyDelete
 11. இந்தப் பதிவு எப்படி மிஸ்ஸானது ! ரொம்ப நாளாகவே காணோமேன்னு வந்தேன். இப்போது பரவாயில்லை என்பது மறுமொழியின் மூலம் தெரியுது. பாப்பாவையும் கவனமா பாத்துக்கோங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…