Saturday, March 1, 2014

“நண்பேன்டா” திரைப்படம் – சில அனுபவங்கள்!நடிகை நயன்தாராவும்உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ”நண்பேன்டா” திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய முன்தினம் மாலை எங்கள் வீட்டருகில் தான் நடைபெற்றதுமஹா சிவராத்திரியான அன்று அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு பாலை கொடுத்து விட்டு வரலாம் என்று நானும் ரோஷ்ணியும் கிளம்பினோம்குடியிருப்பை விட்டு வெளியே வந்தால் ஒரே கும்பல்விசாரித்ததில் மேலே குறிப்பிடப்பட்ட படத்தின் ஒரு சில காட்சிகள் இரண்டு நாட்களாக திருவரங்கத்தில் எடுப்பதாகச் சொல்லவேசரிசென்று பார்க்கலாம் என்று போனோம்.

கதாநாயகனை காணவில்லைகதாநாயகி நயன்தாராவை ஒரு ரவுடி கும்பல் துரத்துவது போன்ற காட்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று டேக்குகள்மீண்டும் மீண்டும் ஓடுவதாக… பார்த்து விட்டு கோவிலுக்கு சென்று வந்தோம்சிவபெருமான் கோபிச்சுக்காமல் இருந்தா சரி…:))

ஒரு சில மாதங்கள் முன்பு தான் புது முகங்கள் நடிக்கும் ”நான் சிவா” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மேலச் சித்திரை வீதியில் படமாக்கப்பட்டதுஒரு வீட்டின் மேற்கூரையில் கிரேன் உதவியுடன் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் டூப்புகள் கீழிலிருந்து மேல்மாடிக்கு போய் குதிப்பது போல் படமாக்கப்பட்டதுபாட்டு கிளாஸிலிருந்து வரும் போது சிறிது நேரம் நல்ல வெய்யிலில் நின்று பார்த்து வீடு வந்தடைந்தோம்.

அதே போல் அந்நியன்” படத்தில், திருவையாறில் குதிரை வண்டியில் விக்ரமும்சதாவும் செல்லும் காட்சிகள் திருவரங்கத்தின் மேல உத்திர வீதியில் தான் படமாக்கப்பட்டதுவிஷாலின் மலைக்கோட்டைபாண்டிய நாடு ஆகியவையும் இங்கே தான் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டனதிருவரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சென்ட்டிமென்ட்டாக ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


இதே போல் தான் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் மாதவன்மீரா ஜாஸ்மின் நடித்துள்ள ”ரன்” படத்தின் ஆரம்ப காட்சிகள் உத்திர வீதியில் ஒரு வீட்டின் முன்பு தான் படமாக்கப்பட்டதுவருடங்களைக் கூட எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்கன்னு நினைக்கறீங்க இல்லையா?  காரணமில்லாமலா! ஆமாங்கஎங்கள் திருமணம் முடிந்த இரண்டாம் நாள் நான் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டேன்வந்த மறுநாளே என்னவர் என்னை கல்லணைக்கு அழைத்து சென்றார்போகும் வழியில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்ததுமாதவனை வெகு அருகில் கடந்து தான் நாங்கள் சென்றோம்நின்று படப்பிடிப்பை பார்க்கக் கூடத் தோன்றவில்லை…:)) ஏன்னா கேட்டீங்க! என்னருகில் தான் ஒரு ஹீரோ இருக்காரே! இது கூடவாத் தெரியாது உங்களுக்கு!

அதன் பின் அந்த திரைப்படம் வெளியாகியிருந்த சமயம் நாங்கள் தில்லியிலிருந்து திருச்சிக்கு வந்திருந்த போதுதியேட்டருக்கு சென்று பார்த்தோம்.  நாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படமும், தமிழ்நாட்டில் நாங்கள் பார்த்த ஒரே படமும் அதுவே….:)) 


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

16 comments:

 1. ஆக பல நட்சத்திரங்களை பார்த்துள்ளீர்கள்...

  அதெப்படி தோன்றும்...? - பக்கத்தில் ஹீரோ இருக்கும் போது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. நல்ல நினைவுகள்... சுவாரஸ்ய பொழுதுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 3. அழகான நாட்கள்...வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 4. //ஏன்னா கேட்டீங்க! என்னருகில் தான் ஒரு ஹீரோ இருக்காரே! இது கூடவாத் தெரியாது உங்களுக்கு!// அட அட அட...! சார் கேக்குதா :-)

  ReplyDelete
  Replies
  1. சாருக்கு கேட்டு ஜலதோஷமே பிடித்து விட்டதாம்.....:)))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சீனு.

   Delete
 5. அதானே ஹீரோ பக்கத்தில் இருக்கும் போது மத்த ஹீரோவை எதுக்குப் பார்க்கணும்...
  இருந்தாலும் கதிர்வேலனின் காதலியைப் பார்த்திருக்கீங்க... கதிர்வேலனைப் பார்க்கலையே....

  ReplyDelete
  Replies
  1. கதிர்வேலனை பார்க்க முடியவில்லை... என்ன செய்ய?

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.

   Delete
 6. எனக்கு போட்டியா திரைப்பட அனுபவங்களை எழுத ஆரம்பித்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.

  "//ஏன்னா கேட்டீங்க! என்னருகில் தான் ஒரு ஹீரோ இருக்காரே! //" - அட, சாருக்கு இப்படி வேற பில்ட்டப்பா.....

  ReplyDelete
  Replies
  1. வேற யாரு கொடுப்பாங்க? அதான்.....:))))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சொக்கன் சார்.

   Delete
 7. திரை நட்சத்திரங்கள் மின்னும் பூமி திருவரங்கமோ! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அப்படித் தான் இருக்கு....:))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete
 8. // என்னருகில் தான் ஒரு ஹீரோ இருக்காரே! இது கூடவாத் தெரியாது உங்களுக்கு!//
  சூப்பர் சிஸ்டர் ,அசத்துங்க!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மைதிலி மேடம்.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…