சென்ற மாதம் சக பதிவர் உஷா அன்பரசு அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல்
வந்திருந்தது. அவர் ”தங்க மங்கை” குடும்ப நல மாத இதழுக்காக கருத்துக்களம் ஒன்றினை திரட்டுவதாகவும்,
“கணவன், மனைவி உறவுகள் மகிழ்ச்சியாக இருக்க புரிதல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில் எனது கருத்துகளை அனுப்புமாறும் கேட்டிருந்தார்.
நான் அனுப்பிய கருத்துகள் இந்த மாதம், அதாவது ஃபிப்ரவரி மாத ”தங்கமங்கை” இதழில் வெளிவந்திருக்கிறது. தங்க மங்கை நாளிதழ் நடத்துபவர்களுக்கும்,
வேலூர் உஷா அன்பரசு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் அனுப்பிய கருத்துகள்
கீழே. தங்கமங்கை ஃபிப்ரவரி மாத இதழ்
படிக்க இங்கே க்ளிக்கவும்!
இருவரிடையேயும் எந்த ஒளிவு மறைவும் வைத்திருக்கக் கூடாது. அது பின்னாளில் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடும். வாழ்க்கையே நரகமாக போய்விடும். அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டாலே, அதுவே நல்லதோர் உறவு அமைய காரணமாக அமைந்து விடும். இருவருமே கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களை மனதில் சுமந்து கொண்டிராமல் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டுமே மனதில் அசை போடுகின்ற மனோபாவம் இருப்பது அவசியம். நம்பிக்கை வைத்திருத்தல் என்பது இருவருக்கும் இருந்து விட்டால், மூன்றாவது ஒரு நபரால் நம்மை என்ன செய்து விடமுடியும். அவ்வப்போது சிறு சிறு ஊடல் நட்பின் மூலமோ, உறவுகள் மூலமோ ஏற்படக்கூடும். அதை கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வதே சிறந்த வழியாகும்.இருவருமே வளர்ந்த சூழ்நிலைகளும், பாரம்பரியமும் வேறாக இருக்கும். அப்படியிருக்கையில் அவர்களிடத்தில் எந்த வித எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொண்டிராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு புரியத் துவங்குவது தான் சிறந்த வழி. எதிர்பார்ப்பு என்பதை யாரிடத்திலும் எந்த காலத்திலும், எதற்காகவும் வைக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றங்களை தவிர்க்கும். பணம் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர அதுவே வாழ்க்கையல்ல. நம்மை வாழ்க்கையில் உயர்த்த உதவும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம். அது கணவன் மனைவி இடையுள்ள அன்பை எந்நாளும் வலுப்படுத்த உதவாது. ஆடம்பரம் அழிவைத் தான் கொடுக்கும். எந்த ஒரு முடிவையும் இருவரும் இணைந்தே எடுத்தல் நலம். யாரிடத்தும் இருவரும் ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் விட்டு கொடுத்து பேசக்கூடாது. இது தான் பெரும்பாலான குடும்பங்களில் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. குடும்பத்துக்கான வேலைகளை கடமையாக செய்யாமல் தன்னுடைய பங்களிப்பாக செய்தால் சந்தோஷம் நிலைத்திருக்கும்.இதையெல்லாம் விட கணவனும், மனைவியும் இந்த சமுதாயத்தில் ஒருவர் மற்றவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை எந்நாளும் பெற்றுத் தர வேண்டியது நமது கடமை. எந்த ஒரு விஷயத்திலும் ஒருவர் வார்த்தையை மீறி அடுத்தவர் செயல்படக்கூடாது. இதையெல்லாம் மனதிற்கொண்டு செயல்பட்டாலே மகிழ்ச்சி ஓங்கும். உறவும் நிலைத்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.
இதே இதழில் கோவை எழில் அவர்களுடைய கட்டுரையும்
இடம் பெற்றிருக்கிறது.
என்ன நண்பர்களே, பதிவினை ரசித்தீர்களா?
மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும்
வரை...
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...
அருமையான கருத்துகள் ஆதி.
ReplyDeleteவாழ்த்துகள்.
கருத்துக்கள் சரி . பிரச்னையே அதை Implement பண்றதுதான் யாருன்னு ..........ஹி.......ஹி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆதி. உங்கள் கருத்துக்கள் அத்தனையும் கோடி பெறும். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்....தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி!!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி... நல்ல கருத்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
அனைத்தையும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கு வாய்ப்பளித்த தங்க மங்கையான எங்கள் ‘உஷா டீச்சர்’ அவர்களுக்கும் என் நன்றிகள். ;)
தங்கமான கருத்துகள்...வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteதங்க மங்கையில் தங்கள் பதிவை படித்தேன்.. கருத்துக்கள் அருமையா சொல்லியிருகீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா! அருமையான கருத்துக்கள். (என் துணைவியாரும் அதே! அதே! சபாபதே! என்று சொல்லிவிட்டார்கள்).
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கருத்துகள்
நூற்றுக்கு நூறு தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்! இல்லறம் சிறக்க, நல்லறம் தழைக்க இப் பதிவு உதவும்
ReplyDeleteஅருமையான வெளிப்படையான
ReplyDeleteஅனைவரும் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய
விஷயத்தைச் சொல்லிப்போனது அருமை
வாழ்த்துக்கள்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நல்லக் கருத்துகள்
ReplyDeleteஹை சூப்பர்ப்பா...வாழ்த்துக்கள்..
ReplyDeleteதங்க நங்கை நல்லாளின் கருத்துக்கள் "தங்க மங்கையில் " இடம் பெற்றது சாலச் சிறந்தது என்றால் மிகையாகாதது. மிகவும் அருமை, ஒவ்வொரு கருத்துக்கும் கோடி பொன் கொடுக்கலாம். எனது தாய் மாமன் மனைவியார், கணவன் வீட்டிற்கு செல்லும் பெண்ணிடம் இவ்வாறு கூறுவார்கள், "புகுந்தவீட்டில் நடந்ததை பிறந்த வீட்டிலும் , பிறந்தவீட்டில் நடந்தை புகுந்த வீட்டிலும் சொல்லாமல் இருத்தல் நலம் என்றும், புகுந்தவீட்டில் கணவர்தம் உறவுகளோடு அனுசரித்து செல்லவேண்டும், மற்றும் அங்கு ரசம் சோறு உண்டாலும் அதை புகுந்தவீட்டில் காட்டிக்கொடுக்காமலும் இருந்தால் அது ஒரு நல்ல எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்கிடும்" என்றும் சொல்வார்கள். இவைகளையும் சேர்த்துக்கொண்டு பூவையர்கள் எல்லாவளங்களும் பெற்றுய்ய, சித்தி, சித்தப்பாவின் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்க மங்கை ஆதிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கருத்துக்கள் சொன்னீர்கள்.
பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
முத்தான கருத்துக்கள். வாழ்த்துக்கள் தங்க மங்கையே ....
ReplyDeleteமிகவும் சிறப்பான கருத்துக்கள் ஆதி. தங்க மங்கை இதழில் வெளிவந்தமைக்கு சிறப்புப் பாராட்டுகள்.
ReplyDeleteவெவ்வேறு இடங்களில் இருந்து யோசித்தாலும் ஓரளவிற்கு ஒன்று போலவே எண்ணங்கள் இருக்கிறது காரணம் கணவன் மனைவி உறவு மேம்பட இவைதானே காரணங்களாய் இருக்க முடியும் வாழ்த்துக்கள் தோழி...
ReplyDeletevaalthukal aathi
ReplyDeleteCongrats. Good Article.
ReplyDeleteமிகவும் அருமையான கருத்துக்கள்! பகிர்விற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் ஆதி!! சிறப்பான கருத்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்களுடன் உங்களைப் பார்த்த சந்தோஷமும் !!
ReplyDeleteதங்க மங்கையில் உங்கள் கருத்துக்கள் வெளிவந்ததற்கு பாராட்டுக்கள். பார்க்க மிகவும் மென்மையாக இருக்கும் உங்களிடமிருந்து வந்திருக்கும் கருத்துக்கள் அழுத்தமாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள். அருமையான கருத்துகள் பகிர்வுக்கும் நன்றி. மேலும் தொடர்ந்து பல பத்திரிகைகளிலும் உங்கள் எழுத்து வரவும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்க நங்கை/மங்கை அப்படினு ஒரு புத்தகம் வருவதே இன்னிக்குத் தான் தெரியும். சுட்டி கொடுத்தமைக்கும் நன்றி.
ReplyDeletevungal karuththukkal thangamangail veli vandhamaikku paaraatukkal.
ReplyDeleteதங்க மங்கை பத்திரிக்கை இதுவரை எனக்குத் தெரியாது. நன்றி. தங்க நங்கையாக யோசனைகள் ,சொன்ன விதம் அனுபவத்துளிகள். வாழ்க்கையின் வழி முறைகள். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாக மாறும் விதம். பெண்ணே நல்ல வழிமுறைகள். படம் பார்த்து மனது நிறைந்து விட்டது. நல்ல வளர்ப்பு. ஸந்தோஷமாக இருந்தது. என் கற்பனைப் பெண் ஆதி அப்படியே இருக்கிராய்.
ReplyDeleteஅன்புடன்
மேம்பட்டதொரு மனைவியாக தங்களின் கருத்து தங்க ஜொலிப்பு! வாழ்த்துக்கள் ஆதி! வரமாய் வாய்த்திருக்கிறீர்கள்!!
ReplyDeleteஆழமான கருத்துக்களை அழகாக வழங்கியிருக்கீங்க. மிகப் பயனுள்ளவையும் கூட. மகிழ்வான என் நல்வாழ்த்துகள்! அதுசரி... தங்கமங்கை இதழ்ல பெண்கள் மட்டும்தான் பங்கு பெறலாமா? உஸா மேடம் எங்கட்டல்லாம் கருத்தே கேக்கலியே? (வாங்கிப் படிக்கறதுக்கு மட்டும்தான் ஆண்களுக்கு உரிமையுண்டோ?)
ReplyDeleteதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html
அருமையான கருத்துக்கள் அதி மேடம்!
ReplyDeleteதங்க மங்கையில் கட்டுரை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் !
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteசூப்பர்,நல்வாழ்த்துக்கள். மிக அழகான புரிதலுடன் கூடிய பகிர்வு,தாமதமான வருகைக்கு பொறுத்துக் கொள்ளவும் ஆதி.
ReplyDeleteஆசியா உமர் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
ReplyDelete