Thursday, February 27, 2014

சட்டுபுட்டு மிக்சர்!!!



தீபாவளி சமயத்தில் மிக்சர் செய்ய வாங்கியிருந்த வறுக்காத கார்ன்ப்ளேக்ஸ், அப்போ செஞ்சது போக கொஞ்சம் பாக்கி இருந்தது. ரொம்ப நாளா அதை எடுக்கறதும், நேரம் இல்லாம வைக்கிறதுமா இருந்தேன். சென்ற வாரத்தில் மாலை வேளையில் ரோஷ்ணி பள்ளியிலிருந்து வரும் சமயம், அதை வறுத்து போட்டு கொஞ்சம் காரசாரமா மிக்சர் செய்து கொடுத்தேன். கார்ன்ப்ளேக்ஸ் மட்டும் போட்டா மிக்சர் வந்துடுமா? வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

வறுக்காத கார்ன்ப்ளேக்ஸ் – 1 கப்
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
பொட்டுக்கடலை – அரை கப்
அவல் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ½  தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

விருப்பப்பட்டால் – பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்ற உலர்பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.



செய்முறை:-

முதலில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் கொஞ்சம் வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கிக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கார்ன்ப்ளேக்ஸ், அவல் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் அல்லது தாம்பாளத்தில் வறுத்த கார்ன்ப்ளேக்ஸ், அவல், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, திராட்சை போன்ற உலர் பழங்கள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போடவும். சின்ன வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில், இரண்டு தேக்கரண்டியளவு எண்ணெய் வைத்து சூடானதும், பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய்த்தூள் சேர்த்து உடனே தாம்பாளத்தில் உள்ள மிக்சரில் கொட்டி நன்றாக கலந்து விடவும். நன்கு ஆறியவுடன் காற்று புகா டப்பாவில், அல்லது பாட்டிலில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.

இந்த மிக்சரை அரை மணி நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்து விடலாம். நம் கையால் செய்ததால் சுகாதாரமாகவும் இருக்கும். செலவும் ஜாஸ்தி ஆகாது. தேவைப்பட்டால் இதனுடன் பூந்தி, ஓமப்பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏன் நமக்கே மாலை வேளையில் காபி, டீயுடன் இந்த காரசாரமான மிக்சர் ஏற்ற ஜோடியாக இருக்கும். உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே….:)



பின் குறிப்பு:-

கார்ன்ப்ளேக்ஸ், அவல் போன்றவற்றை ஸ்டீல் வடிகட்டி பெரிய அளவில் உள்ளதில் போட்டு எண்ணெய்க்குள் வைத்தால் பொரிந்து விடும். எடுக்கவும் எளிது.

அளவு உங்கள் விருப்பம் தான். எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

34 comments:

  1. அருமையான எளிமையான மிக்ஸர்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  2. மிக்சர் நமக்கும் பிடிக்கும்... அங்கங்கே பூந்தி இருந்தால் சுவை அதிகம்...

    ReplyDelete
    Replies
    1. பூந்தி வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். எல்லாம் விருப்பம் தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. சூப்பர், பகிர்வு,பின்குறிப்பு அருமை. படங்கள் மிகத் தெளிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

      Delete
  4. ஆஹா! கடையில் வாங்குற மிக்சர் செவ செவன்னு இருக்கும். எந்த எண்ணெய்ல செய்யுறாங்களோன்னு இன்னொரு கவலை. இனி கவலை தீர்ந்தது. பகிர்வுக்கு நன்றிங்க ஆதி!

    ReplyDelete
    Replies
    1. நம்ப செஞ்சா சுகாதாரம் தானே... இது மிகவும் எளிது..

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராஜி.

      Delete
  5. பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு. ட்ரை செய்துடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாருங்க. மிகவும் எளிது.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அமுதா கிருஷ்ணா.

      Delete
  6. வணக்கம்

    செய்து பார்த்திடலாம்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.

      Delete
  7. பார்க்கவே சுவையா இருக்கு செய்து அசத்திடலாம் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க எழில்.

      Delete
  8. I used to stir fry all the things u mentioned! :) nice n quick tea time snack!

    ReplyDelete
  9. பார்க்கும் போதே இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு..எனக்கு 1/4 கிலோ பார்சல் அனுப்பிடுங்க அதி.

    ReplyDelete
    Replies
    1. கால் கிலோ தானே அனுப்பிட்டா போச்சு...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மேனகா.

      Delete
  10. மிக்ஸர‌ 'சட்டுபுட்டு'ன்னு செஞ்சு முடிக்கிறதால இந்தப் பேரா ! பார்க்கவே ஒரு கை அள்ளிக்கொள்ளலாம் போல இருக்குங்க‌ ஆதி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. சட்டுனு செஞ்சதால் இந்த பெயரை வைத்தேன்...:) தாரளமா அள்ளிக்கோங்க..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.

      Delete
  11. Visit : http://asiyaomar.blogspot.in/2014/02/16-guest-post-paneer-parota.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
    2. சட்டு புட்டு மிக்சர் சூப்பரா இருக்கு.எனக்கும் சட்டு புட்டுன்னு ஒரு பார்சல் அனுப்புங்க!!

      Delete
    3. அனுப்பிட்டேனே! இன்னும் கிடைக்கலையா?

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சாரதா மேடம்.

      Delete
  12. சூப்பர் மிக்சராக இருக்கிறதே! செய்முறை கற்றுத்தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

      Delete
  13. பார்க்வே சூப்பரா இருக்கு!
    டிப்ஸ் அதைவிட யூஸ்புல் !
    செஞ்சிட்டா போச்சு !

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள். மிகவும் எளிது..

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மைதிலி மேடம்.

      Delete
  14. படமும் கலர்ஃபுல்லாக மொறுமொறுன்னு காரமா பார்க்கவே அழகா இருக்குப்பா..

    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மஞ்சு மேடம்.

      Delete
  15. எளிதான செயல்முறை.. முயற்சித்துப் பார்க்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க தியானா.

      Delete
  16. paarkave crispya nalla irukku athi :)

    ReplyDelete
  17. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ஷமீ...

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…