Friday, February 21, 2014

மகிழ்ச்சி மேம்பட....



நீ ஏழையானாலும் வேலையைச் செய்.

நீ பணக்காரனானாலும் தொடர்ந்து வேலையைச் செய்.

நீ மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலையைச் செய்.

வேலையற்று இருந்தால், பயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கும். ஆகவே வேலையைச் செய்.

நீ சங்கடம் அடைந்தாலும் வேலையைச் செய்.

தாங்கிக் கொள்ளா துயரம் வந்தாலும் வேலையைச் செய்.

தங்களின் அன்பானவர்கள் உண்மையாய் இல்லாவிட்டாலும் வேலையைச் செய்.

எது நிகழ்ந்தாலும், நடந்தாலும் வேலையைச் செய்.

வேலையே உடலுக்கும் மூளைக்கும் நிகழ்கின்ற குழப்பங்களை தீர்த்து மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது!

சமீபத்தில் ஒரு புதுத்துணி சுற்றி வந்த அட்டையில் வாசித்தது....:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

16 comments:

  1. அருமை... அயராத தளராத உழைப்பு என்றும் மேன்மையைத் தரும்...

    ReplyDelete
  2. அருமையான வரிகள்...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. துணி சுற்றி வந்த அட்டையாக இருந்தாலும் உபயோகமான பொன்மொழியை சொல்லியிருக்கிறது! நீங்களும் அதை வீசியெறியாமல் படித்தும் பகிர்ந்து கொண்டதும் சிறப்பு! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. மகிழ்ச்சி மேம்பட..புதுத்துணியோடு புத்துணர்ச்சி தரும் துணிவான வரிகள்..

    ReplyDelete
  5. வேலையே உடலுக்கும் மூளைக்கும் நிகழ்கின்ற குழப்பங்களை தீர்த்து மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது!

    வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டால் மனம் பேதலித்து தறிகெட்டு போகும். நல்ல அறிவுரை !

    ReplyDelete
  6. நல்ல விசயங்கள். ஆனால் நாம் பின்பற்றாதது

    ReplyDelete
  7. எங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைத்தாலும் சரிதான். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு ஆதி. உண்மையில் வேலை இல்லாத உடலும் மனமும் துன்பத்தில் வீழும்,இன்னும் கருத்துகளை ப் படிக்கக் காத்திருக்கிறேன்.நன்றி. ஆதி.

    ReplyDelete
  9. அருமையான வரிகள், பகிர்வுக்கு நன்றி ஆதி..

    ReplyDelete
  10. வேலை இருந்தால் தேவையில்லாத வேறு பிரச்சினைகள் கிட்டே வராது என்பது உண்மைதான்.

    'எங்களின் மகிழ்ச்சியும் மேம்பட' இவற்றை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.

    ReplyDelete
  11. சிந்தனைத் துளியில் விழுந்த எண்ணங்கள் அருமை

    ReplyDelete
  12. இரும்பும் மனிதனும் ஒன்று என்பார்கள். சும்மா கிடந்தால் துருப் பிடித்து அழியுமாம்.

    ReplyDelete
  13. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. இயக்கமே எப்போதும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது உண்மை...

    ReplyDelete
  15. எழில் - மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  16. வணக்கம்

    தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரி இதோ-http://blogintamil.blogspot.com/2014/08/5.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…