Sunday, February 2, 2014

ரசித்த காட்சி – புகைப்படக்கலைஞர்!இன்று நான் ரசித்த ஒரு காட்சியை உங்க எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. சாதாரண விஷயம் தான்... ஆனால் அதை இப்படியும் சொல்லிப் பார்க்கலாமா!... என்று நினைத்தேன்...:)) பிடிச்சிருக்கா? இது மாதிரி குட்டி குட்டியான விஷயங்களைப் பகிரலாமா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...:) 

சமீபத்தில் ஒருநாள் கோவிலுக்கு சென்றிருந்த போது, அங்கு ஒரு குடும்பம் வந்திருந்தது….. கணவர் தூண் தூணாக சிற்பங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, மனைவியும் மகளும் சற்றுத் தள்ளி ஒரு இடத்தில் நின்று கொண்டு, அடுத்து எங்கு செல்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்…:)

உள்ளூராக இருந்தாலாவது கோவிலை சுற்றிக் கொண்டிருக்கலாம்… இவர்கள் ஊருக்கு புதிது என நினைக்கிறேன்… கணவர் வரும் வரை அங்கேயே நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர்… அவரோ ஒன்றைக் கூட தவற விடக்கூடாது என்று வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்….:))

பாருங்க! அழகான புகைப்படங்களுக்கு பின்னே இப்படியும் ஒரு கதை இருக்கு….:)))டிஸ்கி:-

என்னுடைய நேற்றைய பதிவான ஆழிமழைக்கண்ணா! பரந்தாமா! (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் – 4) என்னுடைய நட்புகளின் டேஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை…..:(( சிலநேரம் இப்படித்தான் ஆகிறது…. காரணம் புரியவில்லை… இதுவரை படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்….

இப்போதெல்லாம் பதிவுகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவே குறைந்து விட்டது… அப்படியிருக்க அப்டேட்டும் ஆகாத காரணத்தால் பார்வையிட்டோர் மிகச்சிலரே….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

34 comments:

 1. குட்டி குட்டியான விசயங்கள் தான் சுவாரஸ்யமே ... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  அனைவரும் தளங்களை வாசிக்க READER-யை தேர்ந்தெடுக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 2. .
  அழகான புகைபடங்களுக்கு பின் கதை இருப்பது ரசிக்க வைத்த காட்சி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 3. வணக்கம்

  மனதுக்கு இதமான படங்கள்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

   Delete
 4. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் விருப்பம். குடும்பத்தினர் ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு சங்கடப்படாமல் அவரது ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கலாம்.

  குட்டிகுட்டியா, நச்சுன்னு இருக்கற பதிவுகள் ரொம்பவே பிடிக்கும். நீங்க தாராளமா எழுதுங்க. ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் வந்தேன். மெதுவே வைகுண்டத்தை எட்டிப்பார்த்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. குடும்பத்தினர் அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பது தான் சரி...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..

   Delete
 5. கணவர் தூண் தூணாக சிற்பங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, மனைவியும் மகளும் சற்றுத் தள்ளி ஒரு இடத்தில் நின்று கொண்டு, அடுத்து எங்கு செல்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்…:)

  wanRaakaஅநன்றாகத்தான் கவனித்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..

  நாங்களும் இப்படித்தான் .. நான் தூண் தூணாக சிற்பங்களைப்பார்வையிட்டு அது சொல்லும் கதைகளை விளக்கிக்கொண்டிருப்பேன் ...

  பிள்ளைகள் இனி அம்மா கூடன்னா நாங்கள் வரமாட்டோம் என்று அப்பாவிடம் பரிதாபமாக முறையிட்டுக்கொண்டிருப்பார்கள்..

  என்னை தனியே விட்டுச்செல்லவும் மனமிருக்காது அவர்களுக்கு..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அனுபவம் அருமை...எங்கள் வீட்டில் தலைகீழ்.... நானும் மகளும் கணவரை அதை எடுங்கள் இதை படம்பிடியுங்கள் என்று பரிந்துரைத்து கொண்டிருப்போம்...நான் பார்த்த காட்சி வித்தியாசமாக இருந்ததால் தான் பகிர்ந்தேன்..:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 6. சின்ன சின்ன விசயங்களில் தான் கோட்டை விடுகிறோம்! தயங்காமல் பகிருங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சுரேஷ் சார்..

   Delete
 7. வலைப் பதிவில் எதைப்பற்றி எழுதினாலும் சுவாரஸ்யம்தான் முக்கியம். எழுதுங்கள்.

  சமீபகாலமாகவே எனக்கும் டேஷ்போர்டில் ஏதோ பிரச்சினை. சிலசமயம் ஒரே கமெண்ட்டை இரண்டு மூன்றுதடவை மெயில் செய்ய வேண்டியுள்ளது. கூகிளில் ஏதோ செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்.இளங்கோ ஐயா..

   Delete
 8. மனிதர்களை வாசிப்பதும் அதை நேர்த்தியாக எழுத்தால் வெளிப்படுத்துவதும் சிறப்பானதொரு முயற்சி. தொடருங்கள் ஆதி.

  கணவர் செயலில் அவர் குடும்பத்தார்க்கு நாட்டமில்லாவிடினும் பின்னாளில் அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது சில இனிய நினைவுகள் மீண்டும் மனத்தில் தோன்றாமலா போகும்?

  சுற்றுலாத் தளங்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. குழந்தைகளுக்குப் பிடிப்பது பெரியவர்களுக்கு ரசிக்காது. சிலருக்கு கோவில்கள், சிலருக்கு இயற்கை காட்சிகள் இன்னும் சிலருக்குப் பொழுதுபோக்குத் தளங்கள். இது போன்று குடும்பமாகவோ, குழுவாகவோ வரும் சமயங்களில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதுதான் மன அமைதியைத் தரும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். தாங்கள் சொல்வது சரி தான்... ஒருவருக்கொருவர் ரசனைகள் வித்தியாசப்படும்... புரிந்து நடப்பது தான் சரி..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி..

   Delete
 9. ரசனைகளை நாமே ஏற்படுத்திக் கொள்ளவேண்டியதுதான் ஆதி. எங்கவீட்டில் சிங்கம் உளி சுத்தி எடுத்தால் நான் மறைந்துவிடுவேன். வெளியே போனால் வண்டியிலேயே இருப்பார்:)))))) நீ போய் வேலையை முடிச்சுட்டு வந்துடும்மா.. அதுபோலத்தான் ஃபோட்டோக்ராபர்களின் மனைவிகளும் செய்யணுமோ என்னமோ.}}}}

  ReplyDelete
  Replies
  1. ரசனைகளை புரிந்து நடந்து கொள்வது தான் சரி..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 10. சிறியதோ பெரிதோ சுவாரசியமான பதிவுகளுக்கு என்றுமே வரவேற்பு உண்டு!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்..

   Delete
 11. கீதா மேடம் சொல்வதை தான் நானும் யோசித்தேன். மாணவி அவ்வளவு பயந்த சுவபமோ என்னவோ!
  இன்றைய சுழலில் நமக்கான வெளிகளை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். என்றாலும் உங்க கோணம் வித்தியாசமா இருக்கே !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி மேடம்.

   Delete
 12. ரசித்தக் காட்சியும், அதை எழுதிய விதமும் அருமை ஆதி! தொடருந்து எழுதுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 13. //...எங்கள் வீட்டில் தலைகீழ்.... நானும் மகளும் கணவரை அதை எடுங்கள் இதை படம்பிடியுங்கள் என்று பரிந்துரைத்து கொண்டிருப்போம்...//

  நல்லவேளை! தெளிவு படுத்தினீர்கள். சொந்தக் கதையோ, சோகக் கதையோன்னு நினைத்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்..

   Delete
 14. சில விஷயங்கள் அருமை தெரியாது. பின்னர் படிப்படியாகப் புரியும். நாமும் தெரிந்து கொண்டு இருக்கலாமே என்று கூடத் தோன்றும். நல்லப திவு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

   Delete
 15. வெங்கட் சார் செவ்வாய் அன்று எங்கள் இல்லத்துக்கு வந்திருந்து எங்களோடு அவரது மதிப்புமிக்க நிமிடங்களை செலவிட்டது மகிழ்வளித்தது. ஆனால் பாருங்கள் ஒரு புகைப்படம் எடுக்க மறந்துவிட்டோம் .. உங்கள் பதிவை பார்த்ததும் அது நினைவுக்கு வந்துவிட்டது .. புகைப்படம் என்பதே நினைவுகளின் நிழல் பதிவுதானே ... உங்கள் பதிவும் புகைப்படமும் பலருக்கும் பல நினைவுகளையும் கிளரியிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் இருவரையும் சந்தித்தது குறித்து என்னிடமும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.. மிக்க மகிழ்ச்சி. அடுத்த முறை நாங்களும் வர முயற்சிக்கிறோம்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார் சார்.

   Delete
 16. எல்லாருக்கும் ஒரே மாதிரி ரசனை அமைவது கஷ்டம். அந்தக் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்க அவருக்கு ஆலோசனைகள் அல்லது உதவி செய்திருக்கலாமோ? மற்றபடி பலருக்கும் குட்டிக் குட்டிப் பதிவுகளே அதிகம் பிடிக்கின்றன. நிறையப் பேர் என்னை ஏன் இவ்வளவு நீளப் பதிவு போடுகிறாய்னு கேட்பார்கள். :)))) நாம தான் ஒரு வளவளாவாச்சே! :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   Delete
 17. ஒருவேளை இதுதான் நீங்க சொன்ன வைகுண்ட ஏகாதசி சிறப்போ????

  ReplyDelete
  Replies
  1. அது வேடுபரி பற்றி மாமி.. எழுதணும்னு நினைச்சு இன்னும் முடியலை... அடுத்த வைகுண்ட ஏகாதசிக்குள்ளாவது எழுதணும்....:)))

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…