Saturday, February 1, 2014

ஆழிமழைக்கண்ணா! பரந்தாமா! (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் – 4)சொர்க்க வாசல் படி மிதித்த பின் அடுத்து அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபம் என்று சொல்லப்படுகிற திருமாமணி மண்டபம் நோக்கி சென்றோம்போகும் வழியில் தான் மணல்வெளிஇங்கு கோவில் மடப்பள்ளியின் பிரசாத கடைகள், வைகுண்ட ஏகாதசிக்காக இங்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலும் அமைக்கப்பட்டிருந்தனமக்கள் வெள்ளம் அலையென இங்கும் காணப்பட்டது


திருமாமணி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் ரங்கன் அருள்புரிந்து கொண்டிருந்தான்இங்கும் அருகில் சென்று தரிசிக்க வடக்கு வாசல் வழியே இருந்தே வரிசை காணப்பட்டது.. வருடத்தில் ஒருமுறை தான் இந்த ரத்னாங்கி சேவைஇந்த ரத்னங்களுக்கு வியாதிகளை குணப்படுத்தக் கூடிய குணமுள்ளதாம்.. இந்த வரிசையில் நின்று தரிசனம் செய்ய இரண்டு மணிநேரமாவது ஆகலாம்ஆனால் ஒரு தடுப்பின் அப்பால் இருந்து பார்த்தாலே அருமையான தரிசனம் தந்தான் ரங்கன்ஆகவே அங்கேயே வேண்டும் அளவு நின்று பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்

என்னுடன் வந்தவர்கள் பிரசாதங்கள் வாங்கிச் செல்லலாம் எனச் சொல்ல நானும் புளியோதரையும், கேசரியும் வாங்கிக் கொண்டேன்ஒரு கரண்டி அளவு 10 ரூபாய்…. அவர்கள் என்னடாவென்றால் சின்ன பேப்பர் ப்ளேட்டில் போட்டு தந்து விட்டார்கள்..இந்த மக்கள் அலையில் இதை வீடு வரை எடுத்து செல்வதே பெரியப் பாடாகி விடும்இடித்து கீழே தள்ளி விட்டால் வீணாகி விடும் என்று அங்கேயே மணல்வெளியில் அமர்ந்து ரோஷ்ணிக்கும் ஊட்டி விட்டு நானும் சாப்பிட்டு விட்டு, கொண்டு சென்றிருந்த தண்ணீரில் கைகளை கழுவிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினோம்….

வீட்டுக்கு வந்த பின் தான் எங்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் சிலர் மூலம் தெரியவந்த விஷயம் என்னவென்றால் உள்ளூர்க்காரர்களுக்கு வெள்ளை கோபுரத்தின் வழியாக சென்று சொர்க்க வாசல் படி மிதிக்க அனுமதியிருந்ததாகவும்.. அவர்கள் அவ்வழியாக சென்று 20 நிமிடத்தில் படி மிதித்து விட்டதாகவும் சொன்னார்கள்..:)) நாங்கள் மூன்றரை மணி நேரம் வரிசையில் நின்றது??? என்னுடன் வந்தவர்கள் கவலையோடு தெரிவிக்க, நான் சொன்னது இது தான்…..”சிரமப்பட்டு பார்த்தால் தான் புண்ணியம் என்றுஎன்ன நான் சொன்னது சரி தானே??

மதியம் அம்மாவும் மகளும் நல்ல தூக்கம்…..:))) மாலையில் வைகுண்ட ஏகாதசிக்காக ஏற்பாடு செய்திருந்த கடைத்தெருவை சுற்றக் கிளம்பினோம்மேற்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, கிழக்கு உத்திர வீதி என ஒரு ரவுண்ட் வந்து வீடுகளில் போட்டிருந்த கோலங்களையும், கடைகளையும் பார்வையிட்டோம்… காமிரா இப்போதும் எடுத்துச் செல்லவில்லை....:) ரோஷ்ணிக்கு காதுக்கு , கழுத்துக்கு என்று வேண்டியவற்றை வாங்கித் தந்தேன்


அடுத்த நாள் துவாதசிக்கு 21 விதமான காய்கள் போட்டு குழம்பு செய்யத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள்.. கால் கிலோ 10 ரூபாய்இரண்டு இடத்தில் வாங்கிக் கொண்டேன்ஒன்று அவியலுக்கு, ஒன்று பொங்கல் அன்று செய்யும் குழம்புக்கு….:) கடைத்தெருவில் வழியில் பார்த்த சிலர் கைகளில் செடிகளின் நாற்றுகளை எடுத்துச் செல்வதை கவனித்தேன்விசாரித்ததில் ஒருவர் வருகின்றவர்களுக்கெல்லாம் துளசி, கற்றாழை, கற்பூரவல்லி போன்றவற்றின் நாற்றுக்களை வழங்கினாராம்நல்ல விஷயம்…. பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்..

இப்படியாக வைகுண்ட ஏகாதசி சிறப்பான முறையில் இருந்தது.. சென்ற வருடமே ஏக்கமாக இருந்த விஷயங்கள்…. முத்தங்கி சேவையும், சொர்க்க வாசல்படி மிதிப்பதும்இந்த வருடம் சிரமப்பட்டாவது பார்த்தது மனதுக்கு ஒரு திருப்தியை தந்தது…. உள்ளூரிலேயே இருந்து கொண்டு பார்க்காவிட்டால் எப்படி…:)) ஆனால் இந்த மக்கள் வெள்ளத்தில் முட்டி மோதுவதை நினைத்தால்… சொர்க்க வாசல் படி மிதித்து சொர்க்கமே செல்ல வேண்டாம் என்று தோன்றி விட்டது…..:))) பார்க்கலாம் இந்த வைராக்கியம் அடுத்த வருடம் என்னவாகிறது என்று…..:)))

அடுத்த பகிர்வில் ராப்பத்து உற்சவத்தில் ஒரு சிறப்பம்சம்….. ஸ்ரீரங்கமே அங்கு தான் குழுமியிருந்தது…. அது என்னவென்று பார்க்கலாமா??

படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

12 comments:

 1. எங்களுக்கும் மனதுக்கு ஒரு திருப்தியை தந்தது... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அடுத்த வருடமும் எங்களை உங்களோடு கூட்டிப் போங்க!

  ReplyDelete
 3. வைகுண்ட ஏகாதசி சிறப்பான முறையில் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. அடுத்த வருடம் உள்ளூர்காரர்களுக்கு கொடுக்கும் சலுகையைப் பயன்படுத்தி எங்களையும் கூடவே கூட்டிட்டுப்போங்க.

  ReplyDelete
 5. அனுபவப் பகிர்வு அருமை. நன்றி ஆதி.

  உள்ளூர்க்காரர்களுக்கு சிறப்பு சலுகையா? ம்.... கொடுத்துவைத்தவர்கள்தான்.

  ReplyDelete
 6. கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 7. வைகுண்ட ஏகாதசி தர்சனம் கிடைக்கப்பெற்றோ. நன்றி.

  ReplyDelete
 8. இந்த வருஷம் வைகுண்ட ஏகாதசி வீட்டில் இருந்து தான். கூட்டம்னு மட்டும் இல்லை. பொங்கலுக்கு விருந்தினர் வருகை. :)))) நாலு நாளும் வெளியே கிளம்ப முடியலை. :))))) போன வருஷ அனுபவத்தை நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம்.

  ReplyDelete
 9. //அடுத்த பகிர்வில் ராப்பத்து உற்சவத்தில் ஒரு சிறப்பம்சம்….. ஸ்ரீரங்கமே அங்கு தான் குழுமியிருந்தது…. அது என்னவென்று பார்க்கலாமா??//

  இது என்னனு விபரம் போட்டுட்டீங்களானு தெரியலை. தேடினேன், கிடைக்கலை. :(

  ReplyDelete
 10. மாதேவி - மிக்க நன்றி

  கீதா மாமி - மிக்க நன்றி. ராப்பத்தின் சிறப்பம்சம் - வேடுபரி! இன்னும் எழுதலை...:(

  ReplyDelete
 11. நல்லதொரு அருமையான பகிர்வு.

  //இந்த மக்கள் வெள்ளத்தில் முட்டி மோதுவதை நினைத்தால்… சொர்க்க வாசல் படி மிதித்து சொர்க்கமே செல்ல வேண்டாம் என்று தோன்றி விட்டது…..:))) //

  அதே அதே ..... ! ;)

  ReplyDelete
 12. வை.கோ சார் - மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…