Monday, January 27, 2014

மகளின் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள்!

சென்ற வெள்ளியன்று மகளின் பள்ளியில் ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பரிசுக்குரியவளாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள்… ஒவ்வொரு வகுப்பிலும் அந்த ஆண்டில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மூவருக்கு சான்றிதழும், புத்தகமும் பரிசாக தரப்படும்.. இம்முறையும் இரண்டாவது பரிசுக்கு தேர்வாகியிருந்தாள்..

விழா மாலை 4.30 மணியளவில் தான் ஆரம்பிப்பதாக அழைப்பிதழில் இருந்தது.. ஆனால் பரிசுக்குரியவர்களுக்கு எண்கள் தரப்பட்டு வரிசைப்படி அமரவைப்பதற்காக 3.30 மணிக்கே பள்ளியில் இருக்குமாறு சொல்லியிருக்கவும்… நானும் அவளுக்காக 3.30 மணிக்கே பள்ளிக்கு சென்று அமர்ந்திருந்தேன்… பெற்றோர் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கவே, மகளின் வகுப்பில் உள்ள ஒரு பெண்ணின் அம்மாவிடம் அறிமுகம் செய்து கொண்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்…

நிகழ்ச்சி ஒருவழியாக 5 மணியளவில் ஆரம்பித்தது… கடவுள் வாழ்த்து, வரவேற்புரை, பள்ளி நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர் ஆகியோரின் உரைகள்…. பள்ளி முதல்வரின் ஆண்டு அறிக்கை வாசிப்பு ஆகியவற்றுக்கு பின் வகுப்புவாரியாக பரிசுகள் வாசிக்கப்பட்டு சிறப்பு விருந்தினர் அவர்களின் கைகளால் வழங்கப்பட்டன… பள்ளியிலேயே நியமிக்கப்பட்ட புகைப்பட கலைஞரால் பரிசு வாங்கிய குழந்தைகள் படமெடுக்கப்பட்டார்கள்.. பெற்றோர் புகைப்படமெடுக்க வேண்டாம் என்று அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டார்கள்…..:)) நான் காமிராவை எடுத்துச் செல்லவே மறந்தும் விட்டேன்….:))

என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி பரிசுகளாக தந்த புத்தகங்களை பார்த்து விட்டு, “ ஏங்க இந்த புத்தகமெல்லாம் தருவதற்கு பதில் ஒரு எவர்சில்வர் தட்டு மாதிரி ஏதாவது தந்தா நல்லா இருக்கும்ல” என்றார்…..:) அவர்களின் அறியாமையை நினைத்து ஒரு புறம் கோபம், ஒருபுறம் சிரிப்புடன் “குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தத்தான் இந்த மாதிரி புத்தகங்களை தராங்க… தட்டுகள் நம்ம வீட்டில் இல்லாததா?” என்றேன்…. உடனே அவர் “ பாடப்புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை, இதுல எங்கேயிருந்து இதெல்லாம் படிக்கப் போறாங்க?” என்றார்…. சரி! இவரிடம் பேசி புண்ணியமில்லை….. என்று விட்டுவிட்டேன்…:)))

பெற்றோர் படித்தவர்களோ, படிக்காதவர்களோ தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்ப்பதற்காகத் தானே பள்ளியில் சேர்க்கிறார்கள். வெறும் பள்ளிப்படிப்பு மட்டும் ஒரு குழந்தைக்கு போதுமா? புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை பெற்றோர் தான் வளர்க்க வேண்டும்….


அடுத்து நடன நிகழ்ச்சி துவங்கியது…. தங்கள் குழந்தைகள் பரிசு வாங்கியதற்கு கூட கரவொலி எழுப்பாத பெற்றோர்கள்… சின்ன சின்ன மாண்டசோரி குழந்தைகளின் லுங்கி டான்ஸ், வெஜிடபிள் டான்ஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காசு பணம் துட்டு மணி மணி போன்ற பாடல்களின் நடனங்களுக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு கரவொலி எழுப்பினார்கள்……:))))

சமீபத்தில் இயற்கை எய்திய பள்ளியின் தாளாளர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வில்லு பாட்டு மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் நிகழ்த்தி காட்டினார்கள்… இது சிறப்பாகவே இருந்தது.. டான்ஸ் அகாடமி குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது…

சென்ற ஆண்டே கவனித்த விஷயம் இது… நிகழ்ச்சி ஆரம்பித்தவுடனேயே மக்கள் தின்பண்டங்களை கொறிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்… என் முன்னாடி அமர்ந்திருந்த ஒரு குட்டி பையனின் அம்மா தன் மகனுக்கும் தந்து விட்டு தானும் முறுக்கு, சிப்ஸ், பிஸ்கெட்டுகள் என்று வரிசையாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்… காலியான கவர்களையும் கசக்கி தன் காலடியிலேயே போட்டுக் கொண்டு….:( இன்னொரு புறம் வீட்டிலிருந்து கொண்டு வந்த டீயை தன் குடும்பத்துக்கும் தந்து விட்டு தானும் குடித்துக் கொண்டிருந்தார் ஒருவர்…

நம் மக்கள் எங்கு சென்றாலும் கையில் நொறுக்குத் தீனி இல்லாமல் செல்வதில்லை… அதுவும் நான் ஸ்டாப்பாக உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள்… ரயிலில் செல்லும் போதும் இந்த அனுபவங்கள் நிறைய ஏற்பட்டதுண்டு… சாப்பிட்டு விட்டு அதன் குப்பைகளை காலடியிலேயே போட்டு விடுவது… எப்போதேனும் ஒரு மாதிரியாகத் தோன்றினால் சாப்பிட்டால் ஒன்றுமில்லை… இடைவிடாது விற்பவைகளையெல்லாம் உள்ளே தள்ளிக் கொண்டேயிருந்தால்….. அளவில்லாத நொறுக்குத் தீனி உடல்நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும்…. குழந்தைகளை சொல்லிப் பிரயோஜனமில்லை… பெற்றோரே இப்படியிருந்தால்???

இதெல்லாம் பார்த்த காரணத்தால் மகளுக்காக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும், தண்ணீரும் மட்டும் எடுத்து சென்றிருந்தேன்… 7 மணி வாக்கில் அதை சாப்பிட கொடுத்து, தண்ணீரும் தந்து, காலியான கவரை என் கைப்பையிலேயே போட்டு எடுத்து வந்து வீட்டில் குப்பை கூடையில் போட்டேன்…..:))

நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன… மணி 9 ஐ தாண்டி விடவே மகளிடம் எடுத்துச் சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டேன்… ஆட்டோ பிடித்து வீடு செல்ல வேண்டுமே…. மகளுக்கு கிளம்ப மனமில்லை… ஆனால் தலைவலி வேறு எனக்கு மண்டையை பிளக்கிறது.. அதிகப்படியான சத்தம், அருகிலிருந்த ஒருவர் போட்டிருந்த நறுமணத்தின் நெடி, அருகில் யாரோ ஒருவரிடமிருந்து குடி போதை வாடை எல்லாம் சேர்ந்து எனக்கு தலைவலி பயங்கரமாகியிருந்தது… நிகழ்ச்சி 11 மணி வரை நடைபெற்றதாம்…..:)

வீடு வந்து தோசை வார்க்கக் கூட முடியாததால் இட்லி வைத்து சாப்பிட்டு விட்டு படுத்தவள் தான் மறுநாள் காலை 7 மணிக்கே எழுந்தோம்…:))

குளு குளு டிஸ்கி:-

பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியதற்காக “YOUNG ACHIEVER’S AWARD” என்று IBACO ஐஸ்கிரீம் கூப்பன்கள் வழங்கியிருக்கிறார்கள்.. IBACO parlour திருச்சி மெயினில் இருக்கிறதாம்… ஒருநாள் சென்று வர வேண்டும்..

படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

47 comments:

 1. பள்ளி விழாக்களில் குத்துப் பாட்டுகளுக்குப் பிள்ளைகளை ஆடச் சொல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. இங்கேயும் அப்படித்தான் நடக்கிறது. :-( நீங்க சொன்ன மாதிரி அதுக்குத்தான் கைதட்டலும் அதிகம். :-(

  குப்பை (போடும்) விஷயமும் அப்படித்தான். இங்கேயும் இந்தியப் பள்ளிகளில் அப்படித்தான் இருக்கிறது. காணாததற்கு, அரங்கின் ஓரத்திலேயே ஒரு சிறு தற்காலிக கேண்டீன் வைத்துவிடுகிறார்கள், காசு பார்க்க!!

  பெற்றோர்கள் படம் எடுத்துட்டாங்கன்னா, பள்ளி சார்பா நிகழ்ச்சி ஃபோட்டோக்களை அதிக விலை வைத்து விற்க முடியாதே!!

  அப்புறம்... சரி விடுங்க, நான் மொத்தமா ஒவ்வொரு வரிக்கும் “சேம் ப்ளட்” போட்டுக்குறேன்! :-)

  ரோஷிணி பரிசு வாங்கினதுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சேம் ப்ளட்டாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஹுசைனம்மா...

   Delete
 2. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்! ரொம்ப ரொம்ப கவனமாக எடிட் செய்து பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா...

   Delete
 3. அந்த பெண்மணி உட்பட கரவொலி எழுப்பினவர்களின் ஆர்வம் எதிலுள்ளது பாருங்கள்... ம்... மாற வேண்டியது முதலில் பெற்றோர்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதலில் பெற்றோர் தான் மாற வேண்டும்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 4. Super Bhabi. All the best to your baby.
  Vijay/Delhi

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்...

   Delete
 5. இந்த புத்தகமெல்லாம் தருவதற்கு பதில் ஒரு எவர்சில்வர் தட்டு மாதிரி ஏதாவது தந்தா நல்லா இருக்கும்ல”
  >>
  நல்ல அம்மா!

  ReplyDelete
  Replies
  1. அன்று எனக்கு அவர்கள் மேல் மிகுந்த கோபம்...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி..

   Delete
 6. பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியதற்காக “YOUNG ACHIEVER’S AWARD” என்று IBACO ஐஸ்கிரீம் கூப்பன்கள் வழங்கியிருக்கிறார்கள்..

  ரோஷ்ணிக்கு இனிய மன நிறைவான வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!


  //காலியான கவரை என் கைப்பையிலேயே போட்டு எடுத்து வந்து வீட்டில் குப்பை கூடையில் போட்டேன்…..:)) //

  தங்களுக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

   Delete
 7. அருமையாக விவரித்தமை சிறப்பு! அறிவை வளர்த்துக்கொள்ளவும் வாசிப்பை அதிகப்படுத்தவும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றது. சிலர் இதை புரிந்து கொள்வதே இல்லைதான். அதே சமயம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஒரு கால வரையறை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பாலர் பள்ளியின் கலைநிகழ்ச்சிகள் இரவு 11 மணிவரை என்பது அதிகமாகத்தான் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்...

   Delete
 8. வாழ்த்துக்கள் . இபகோ ஐஸ்கிரீம் நன்றாக உள்ளது .
  மறக்காமல் சாப்பிடவும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! சாப்பிட்டு பார்த்துடணும்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அபயா மேடம்...

   Delete
 9. தொடர்ந்து நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டே இருப்பவர்களை பார்த்தால் எனக்கும் ஆச்சரியமாக இருக்கும். வாய் வலிக்காதா???

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அமுதா...

   Delete
 10. வணக்கம்
  சிறப்பாக எழுதியுள்ளிர்கள் அதிலும் சுற்றாடலை மாசு படுத்தக்கூடாது என்ற சிந்தனை மிகவு போற்றத்தக்கது.. இதைப்போன்ற சிந்தனை எல்லோருடைய மனசிலும் வருமாக இருந்தால் குப்பைகள் இல்லாத நாடாக வைத்திருக்க முடியும்...
  வகுப்பில் கூடுதலான மதிப்பெண்கள் வாங்கிய தங்களின் மகளுக்கு.. பாராட்டுக்கள்... தொடந்து கல்வியில் சிறந்து விளங்கட்டும். அதற்கு தங்களின் ஊக்க சக்தி எப்போதும் இருக்கட்டும்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

   Delete
 11. உங்கள் குழந்தையோடு நாங்களும் அந்த பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த உணர்வை உங்கள் எழுத்து ஏற்படுத்தி விட்டது. பொது இடத்திலும், வயிற்றிலும், மூளையிலும் குப்பை சேர்ப்பவர்களை என்ன செய்வது ?

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார் சார்...

   Delete
 12. ரோஷணி இரண்டாவது பரிசுக்கு தேர்வாகியிருப்பது அறிந்து மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள்.

  போட்டோவை பள்ளியில் இருந்து வாங்க வேண்டும் அப்படித்தானே?
  வாங்கினீர்களா ரோஷணி பரிசு பெறும் போது?
  ரோஷணியிடம் எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் தான் தருவார்கள் அம்மா...எல்லாக் குழந்தைகளும் கட்டாயமாக வாங்க வேண்டும்,..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் , வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 13. ரோஷிணிக்கு அன்பு வாழ்த்துக்கள்!

  பள்ளி விழா பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! பள்ளிகள், பொது இடங்களில் குத்துப்பாடல்களுக்கு குழந்தைகளை நடனமாட வைக்கும் பழக்கம் சில வருஷங்களுக்கு முன்னாலாயே ஆரம்பித்து விட்டது! அர்த்தம் தெரியாமல் அந்தக் குழந்தைகள் ஆடுவதைப்பார்க்கையில் பகீரென்று இருக்கும்!பெற்றோரே அதை ஆதரிக்கையில் பள்ளிகளை எப்படி குற்ற‌ம் சொல்வது?

  நல்ல பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோம்மா...

   Delete
 14. ///தங்கள் குழந்தைகள் பரிசு வாங்கியதற்கு கூட கரவொலி எழுப்பாத பெற்றோர்கள்… சின்ன சின்ன மாண்டசோரி குழந்தைகளின் லுங்கி டான்ஸ், வெஜிடபிள் டான்ஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காசு பணம் துட்டு மணி மணி போன்ற பாடல்களின் நடனங்களுக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு கரவொலி எழுப்பினார்கள்……:)))) ///

  இவர்கள் சென்றது தங்கள் குழந்தைககள் பரிசு வாங்குவதை பார்த்து சந்தோசப்பட அல்ல மாலை பொழுது போக்கிற்காகவே மட்டும்.

  பெற்றோர்களை குறை சொல்லும் நாம் இப்படி டான்ஸ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பள்ளி ஆசிரியர்களை குறை சொல்வதில்லையே அது ஏன்

  ReplyDelete
  Replies
  1. நியாயமான கேள்வி தான்...ஆசிரியர்களை நாம் என்ன சொல்வது...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மதுரைத் தமிழன்...

   Delete
 15. ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா...

   Delete
 16. ரோஷ்ணிக்கு எங்கள் வாழ்த்துகளும் ஆசிகளும்.!

  மாலை 5.00 மணிமுதல் இரவு 11.00 மணி வரை நிகழ்ச்சிகள். என்ன கொடுமை வெங்கட் இது. ஒருவேளை அனைத்து குழந்தைகளுக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல் எண்ணமாக இருக்கலாமோ!

  (அப்பாடா! டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்டு நிகழ்ச்சியில் இல்ல.)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்... எல்லா வகுப்பு குழந்தைகளையும் பங்கேற்க வைத்திருந்தார்கள்.. அது தான் நேரமாகி விட்டது,...அந்த பாட்டுக்கு நல்லவேளை ஆடலை....:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்...

   Delete
 17. jரோஷ்னிக்கு என் வாழ்த்துகள். பள்ளி விழாவைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். அதையும் பிக்னிக்ஸ்பாட்டா மாற்றி சாப்பிடவும்,டீ குடிக்கவும்,மாற்றியவர்களையும் மறக்காமல் எழுதியுள்ளீர்கள். காலம் இப்படிதான் இருக்கிரது. ரஸித்தேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. திருச்சியில் கோவில்களைத் தவிர வேறு இல்லையே .... அதனால் இருக்கலாம்....:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 18. ரோஷ்னிக்கு வாழ்த்துகள். பள்ளிக்கூட ஆண்டு விழா உண்மைத் தொகுப்பு.ரஸித்துப் படித்தேன்.அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா..

   Delete
 19. வெறும் பள்ளிப்படிப்பு மட்டும் ஒரு குழந்தைக்கு போதுமா? புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை பெற்றோர் தான் வளர்க்க வேண்டும்….

  சரியாகச் சொன்னீர்கள்! பெற்றோர் உணரவேண்டிய உண்மையான வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா..

   Delete
 20. மிக அருமையான அனுபவ பதிவு. ரோஷ்னிக்கு வாழ்த்துகக்ள்.

  நொருக்கு தீணி சாப்பிட்டால் அங்கு நடக்கும் நிகழ்சிகளை எப்படி கவனிப்பது?
  , சாப்பிட்டு விட்டு அதை அங்காங்கே போடுவது காலுக்கடியில் போடுவது இது போல் தான் பலரும் இருக்கின்றனர், அப்படி சாப்பிடுவதாக இருந்தால் ஒரு கவரில் போட்டு அதை உரிய இடத்தில் போட பிள்ளைகளுக்கு பழகி கொடுக்கனும். பல பெற்றோர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலாக்கா...

   Delete
 21. பரிசு பெற்ற உங்க பாப்பாவுக்கு எங்களின் வாழ்த்துக்களும்.

  சங்குவைத்து ஊதினாலும் திருந்தவேமாட்டோம் என்ற ஒருசில நெருடல்களையும் சேர்த்து ஒரு பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை அப்படியே கண்முன்னே கொண்டுவந்திட்டீங்க. தேவைக்கதிகமாக ஐஸ்க்ரீம் கூப்பன்கள் இருந்தால் ரெண்டை இங்கே அனுப்பிவிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. ஐஸ்க்ரீம் கூப்பன்கள் தானே.... அனுப்பிட்டா போச்சு....:)))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 22. என் மகனின் பள்ளி ஆண்டு விழாவும் இப்படித்தான், சென்ற வருடம் அவன் இரண்டாம் வகுப்பு என்பதால் அவன் சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் முடிந்தவுடன் கிளம்பிவிட்டோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஸ்.பை..

   Delete
 23. பரிசுபெற்ற தங்கள் குழந்தை செல்வி ரோஷ்ணிக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. வை.கோ சார் - மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…