Thursday, January 16, 2014

பதினெட்டாவது படி!

பட உதவி - கூகிள்

ஒரு மனிதன் வாழ்க்கையில் பெற வேண்டிய பதினாறு வகை பேறுகள், தாய் தந்தையோடு சேர்த்து பதினெட்டு படிகளாகின்றனபதினாறு வகை பேறுகளாவன… அறிவு, நெல், அழகு, கல்வி, நுகர்ச்சி (குறிப்பறிந்து நடத்தல்), இளமை, துணிவு, பெருமை, நோயின்மை, வலிமை, வெற்றி, பொன், புகழ், நல்லூழ் (நல்ல விதியமைப்பு), நன்மக்கள், நீண்ட ஆயுள் ஆகியவையாகும்இவற்றில் ஒன்றை பெறாவிட்டாலும் கஷ்டம் தான்.. இந்த பதினெட்டு படிகளையும் கடப்பது என்பது நமது மூதாதையர்கள் செய்த நல்ல காரியங்களை பொறுத்து தான் அமையும்பட உதவி - கூகிள்

இப்படித் தான் தன்னுடைய பதினெட்டாவது படி நாவலில்ஒவ்வொரு பகுதியிலும் நாம் பெறும் பேறுகளைப் பற்றி விரிவாகச் சொல்லி கதையை தொடர்கிறார் இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள்சமீபத்தில் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன்பக்கத்து வீட்டில் தந்தார்கள்.. அவர்களிடமிருந்து தான் இந்திரா செளந்தர்ராஜன் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். அமானுஷ்யங்கள், அவற்றுக்கான பண்டைய செப்பேடுகளில் உள்ள சான்றுகள், என பகுதிக்கு பகுதி விறுவிறுப்புஒரு நாளில் முடித்து விட்டேன்..

பதினெட்டாவது படி என்ற கதையில் பிரசாத் மிகப்பெரிய கம்பெனியில் நல்ல பதவியில் இருந்தும் வாழ்க்கையை குறித்து விரக்தியில் இருந்தான். தன்னுடைய வேலையையும் ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறான். ஆனால் அவனுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், திடுக்கிட்டு மானேஜர் பஞ்சாட்சரத்திடம் தெரிவிக்கின்றனர். அவர் பிரசாத்தை தனிப்பட்ட முறையில் அழைத்து விசாரிக்கிறார்பிரசாத்துக்கு இருக்கும் ஒரே குறை திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை என்பது தான்.. போகாத கோயிலும் இல்லை, செய்யாத பரிகாரமும் இல்லை…. சமீபத்தில் வந்துள்ள மெடிக்கல் ரிப்போர்ட்டில் பிரசாத்துக்கு உயிர் அணுக்களுக்கான வாய்ப்பே இல்லையென்று வந்துள்ளதாக மானேஜரிடம் தெரிவிக்கிறான்..

அவரோ உன்னுடைய ஜாதகத்தை பார்த்தால் தெரிந்து விடும் என்றும், பிறந்த தேதி, கல்யாண தேதி, ஊர் என எல்லா தகவல்களையும் சேகரித்துக் கொண்டு, தன்னுடைய குருவான கல்யாண சித்தரைமனமார பிரார்த்திக்கிறார்அவரும் பிரத்யட்சமாகி பிரசாத்துக்கு குழந்தை உண்டுஅதற்கு முன்பு அவன் முன்னோர்கள் செய்த பாவங்களை இவன் கழித்து விட்டால் சரியாகிவிடும்.. அதற்கு கொல்லி மலையில் கரடிப்பள்ளம்என்ற இடத்திற்கு மனைவியுடன் வந்தால் பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.. அதிலேயே அவனுடைய பாவங்கள் கழிந்து விடும் என்று சொல்கிறார்

பிரசாத் தன் மனைவியிடம் இதைச் சொல்ல, இருவருக்கும் சண்டையாகி வீட்டை விட்டே வெளியேறுகிறான்.. எதேச்சையாக நான்கு சாதுக்களுடன் கரடிப்பள்ளம் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.. அங்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றனபிரசாத்தின் மனைவி அவன் உடன் வந்தாளா? அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைத்ததா? சித்தர்களின் வரலாறு என்ன? அவர்களுக்கு உள்ள வலிமை என்ன? போன்ற உங்களுடைய கேள்விகளுக்கான விடை புத்தகத்தில்….இக்கதையின் முடிவு நான் சற்றும் எதிர்பாராதது

இந்திய வனங்கள் உலக வனங்களில் இருந்து வேறுபட்டவை.. ஐவகை பருவநிலையை கொண்டவை.. மரங்கள் மிகுந்த மலைப்பகுதியின் காற்றுக்கும், தரைப்பகுதியில் நிலவும் காற்றுக்கும் ஏராளமான வித்யாசம் உண்டுமலைக்காற்றில் ஜீவ வாயுக்கள் ஏராளமாக உள்ளன..ஒரு மனிதன் பிறந்த நேரத்தில் நிலவும் நட்சத்திரத்தை அறிந்து அதற்கு ஏற்ற மரம் ஒன்றை அவன் பிறந்த அதே நாளில் நட்டு வளர்த்தால், அவனுக்கு ஏற்படும் நன்மை தீமையாவும் அந்த மரத்தில் எதிரொலிக்கும்இப்படித்தான் சேர்வராயன் மலையில் ஒரு மரம் உள்ளது. அது தான் மஞ்சக் கடம்பை….

இப்படி தொடங்கும் தங்கப்பறவை கதையில்….வரதன் ஒரு தூக்கு தண்டனை கைதிதங்க கடத்தலில் பிடிபட்ட அவனுக்கு எவ்வளவோ சித்திரவதைகள் செய்தும், அவனிடமிருந்து தங்க புதையலை பெற முடியவில்லைஅதற்கு காரணமும் இருந்ததுஇறுதியில் தூக்கிலிட்ட பின் அவன் உடலை அவன் சகோதரியிடம் ஒப்படைத்தனர். வாய்க்கரிசி போட வந்தவள், வரதனின் வாயில் பிளாஸ்டிக் கவரில் காகிதமொன்று வைக்கப்பட்டிருப்பது தெரிந்து, அதைப் படிக்கிறாள்தங்க புதையலின் ரகசியம் அதில் இருந்தது….

இது சேர்வராயன் மலையில் உள்ள கோவிலின் சொத்து என்றும் அதை தான் மீண்டும் கோவிலில் சேர்க்கும் போது தான் மாட்டிக் கொண்டதாகவும், தன் சகோதரி அந்த வேலையை முடிக்க வேண்டும் என்றும், அதுவரை தான் ஆவியாக அந்த சொத்தை பாதுகாக்கிறேன். என்றும் எழுதியிருந்தான்போலீஸும், கடத்தல்காரனும் துரத்துவதாகவும் அவர்களிடம் சிக்காமல் அதை கோவிலில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தான்புதையல் கிடைத்ததா? போலீஸிடம் சிக்கியதா? வரதனின் ஆவி என்ன செய்தது? என்று உங்கள் கேள்விகளுக்கான விடை புத்தகத்தில்..

இந்த அருமையான புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருவரசு புத்தக நிலையம்
23, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை – 600017.
புத்தகத்தின் விலைரூ 70
மொத்த பக்கங்கள் – 210
நான் வாசித்த பதிப்பு – 2005 உடையது..

டிஸ்கி:- திருச்சி வந்த ஒன்றரை வருடங்களில் இங்கு நான் வாசித்த புத்தகங்களின் பெயர்களையும், அதன் எழுத்தாளரின் பெயரையும் விளையாட்டாக எழுதி வைக்கத் தொடங்கினேன்பின்பு அதையே வாசித்தவை என்ற தலைப்பில் ஒரு ஃபோல்டராகவும் போட்டு பதியத் துவங்கினேன்.. இந்த புத்தகத்தோடு திருச்சி வந்த இந்தவருடங்களில் அதில் உள்ள நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 101…..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்


திருவரங்கம்.

41 comments:

 1. நல்லதொரு நூல் விமர்சனம்... நன்றி... 101 மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 2. ;))))) பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 3. படிப்பதில் சதமடிச்சுட்டிங்க ஸ்ரீரங்கம் போய்...! வாழ்த்துக்கள் முதல்ல...! இந்த பதினெட்டாம் படி கதையோட முடிவை உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்காததோட, அதை வேறு விதமா மாத்தியிருக்கலாமேன்னு இ.சௌ.ராஜன் கிட்ட வாதம் பண்ணினேன். அவரும் பொறுமையா, ஏன் அந்த முடிவை வெச்சேன்னு விளக்கம் தந்தார் எனக்கு. (அரை மணி நேரம் பேசினதுல போன் பில்தான்... அவ்வ்வ்வ்வ!) அந்த விளக்கத்தை பின்னொரு சமயம் ஸ்ரீரங்கம் வருகையில் உங்களுக்குச் சொல்கிறேன். சரியா...!

  ReplyDelete
  Replies
  1. ஓ! அப்படியா! நானும் சற்று ஏமாந்து தான் போனேன்... அந்த விளக்கத்தை சீக்கிரம் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவல்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்...

   Delete
 4. எனக்கு புத்தகங்கள் படிக்க நிரம்பப் பிடிக்கும். ஒரு வருஷத்தில் 101 புத்தகம், செஞ்ஜுரி போட்டாச்சு.சபாஷ். உனது பொழுதுபோக்கு. கிட்டே இருந்தால் இரவல் கேட்கலாம். பரவாயில்லை. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 5. ஆஹா ! 101 புத்தகங்கள் ! அது தான் வலைப்பூ பக்கம் அதிகம் காணோமா? உருப்படியான பொழுது போக்கு..எழுதும் திறமை வளரும்.பாராட்டுக்கள் ஆதி. பதினாறு செல்வங்களை அழகாக குறிப்பிட்ட பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நானே என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.... வாசிப்பில் ஆழ்ந்து போனதால் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லையென்று...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்...

   Delete
 6. 100 books? In these days it is really great!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்..

   Delete
 7. இரண்டாவது புத்தகத்தின் வர்ணனையையும் முதலாவதொடு சேர்த்துக் குழப்பிக் கொண்டு விட்டேன்.

  இந்திரா சௌந்தரராஜன் கலெக்ஷன் தனியாக ஒன்று வாங்க வேண்டும். //"வாசிக்கும் போது நமக்குள்ளே ஒர் கண்டுபிடிப்பு நிகழுது. எதையோ நாம கண்டடையறோம். அது தான் வாசிப்பு மேலே உள்ள ஈர்ப்பு குறையாம இருக்கக் காரணம்.// என்று திரு அசோகமித்திரன் இன்று சொல்லியிருப்பதை திரு ஜீவி அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

  அது போல ஒரு பழைய நாவல் ஒன்று. பி வி ஆர் அல்லது வேறு யாரோ எழுதியது. இதே போலத்தான் இரு பார்ட்னர்கள். ஒருவருக்கு இதுமாதிரி ஏதோ கஷ்டம் வர, அதற்கு அவர் செய்த ஏதோ பாவம்தான் காரணம் என்று தெரியவர, ஒவ்வொரு பாவமாக நிவர்த்தி செய்துகொண்டே வருவார். எவ்வளவு பாவங்கள் என்பது ஒவ்வொரு சம்பவமாக கதையில் வரும். அது நினைவுக்கு வருகிறது. அதே சமயம் கதையின் பெயரை நான் நீண்ட நாட்களாக மறந்து தவிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இரண்டு புத்தகமல்ல .....ஒரே புத்தகத்தில் உள்ள இரண்டு கதைகள்...:) தாங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகம் பற்றி தெரிந்து கொண்டவுடன் எனக்கும் தகவல் தெரிவியுங்கள்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 8. ஸ்ரீராம் சொல்லி இருப்பது ஜாவரின் பணம், பெண், பாசம் நாவல்னு நினைக்கிறேன். கதாநாயகியின் அப்பா செய்த பாவங்களுக்காக மனைவி பைத்தியமாகவும், பெண் வீட்டை விட்டும் செல்வாள். பெண்ணே அப்பா செய்த பாவங்களுக்குப் பரிகாரங்கள் தேடுவாள். சாப்பிடக் கூட முடியாமல் இருந்த அவள் தந்தை சாப்பிடவும் ஆரம்பிப்பார். இது சென்னைத் தொலைக்காட்சியில் ஏவிஎம்மால் தொடராகவும் எடுக்கப்பட்டு வந்தது. ஏவிஎம் சரவணன் இல்லை. முருகனோ, குமரனோ! :))))) பானர் ஏவிஎம் பானர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete
 9. நானும் இந்திரா சௌந்திரராஜன் அவர்களின்
  தீவிர ரசிகன்.இந்த நாவல் எப்படியோ
  என்னிடமிருந்து தப்பித்துவிட்டது
  அவசியம் வாங்கிப் படித்து விடுகிறேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 10. பணம் பெண் பாசம் இல்லை கீதா மேடம். கதைக்களனே வேறு. தொழில்முறை பார்ட்னர்கள். அவர் இவருக்கே கொஞ்சம் பணம் ஏமாற்றியிருப்பார். ஒரு பெண்ணை ஏமாற்றியிருப்பார். ஒவ்வொன்றாய்ச் செய்தும் சரியாகாது. புனிதர் அல்லது பி வி ஆர் எழுதியது. 'டைவர்ஸ்' கதையெல்லாம் வெளி வந்த நேரத்தில் வந்த கதை.

  ReplyDelete
  Replies
  1. யாருக்காவது தெரிந்தால் சொல்கிறார்களா.. பார்ப்போம்...:)

   Delete
  2. பணம், பெண், பாசம் இல்லைனால் என்ன கதைனு தெரியலையே? டைவர்ஸ் குமுதத்தில் வந்தது. ஆகவே பிவிஆர் ஒரே சமயம் இரண்டு கதையைக் குமுதத்தில் எழுதி இருக்க மாட்டார். புனிதன் "இல்லாத பிள்ளைக்குக் கல்யாணம்" னு ஒண்ணு எழுதினார், ஒருவேளை அதுவோ?

   Delete
 11. 1½ வருடங்களில் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 101…..

  அருமையான சாதனை.. விறுவிறுப்பான விமர்சனம்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 12. படித்ததை நினைவு கூறும் வகையில் லிஸ்ட் போட்டு வைத்திருப்பது நல்லது. தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அமுதா கிருஷ்ணா...

   Delete
 13. அடியேனது "தமிழுக்கு ஏற்றம் தரும் விழா", "கருட சேவை" மற்றும் "வைகுண்ட ஏகாதசி" வலைப்பூக்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு அதுவும் வைகுண்ட ஏகாதசியன்று அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது சிறப்பான பதிவை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு நான் தான் நன்றி சொல்லணும்..நன்றி..

   Delete
 14. தாங்கள் படித்தது மட்டுமல்ல! படித்ததைச் சொல்லிப், பதிவைப் படித்தவர்களையும் படிக்குமாறு
  தூண்டி விட்டருப்பது, தங்கள் திறமைக்குச் சான்று! தங்கள் பணி தொடர்க! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா..

   Delete
 15. அருமையான விமர்சனம் ஆதி! இந்த ' பதினெட்டாம் ப‌டி' நாவலை நான் ப்டித்ததில்லை விரைவில் லைப்ரரியில் எடுத்து படித்து விட்டுச் சொல்கிறேன்! அன்பு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா...

   Delete
 16. ஒன்றரை வருடத்தில் 101 புத்தகங்களா !! .......வியப்பாக உள்ளது.

  அப்போதெல்லாம் கதைப் புத்தகமோ தினசரியோ எதுவானாலும் அதிலுள்ள விளம்பரங்களிலுள்ள எழுத்துக்களைக்கூட விடமாட்டேன். இப்போது எல்லாமே தலைகீழ். ஒருபக்கம், அரைப்பக்கம் போய், இப்போ 'கால்பக்க கதையா இருந்தா பரவாயில்லையே' என்று நினைக்கிறேன்.

  உங்களின் புத்தக விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது. இரண்டு புத்தக விமர்சனங்க‌ளுக்கும் இடையில் ஒரு கோடு போட்டுவிடுங்கள். முதலில் இரண்டும் ஒன்றென நினைத்துவிட்டேன். சான்ஸ் கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் குழப்பிக் கொண்டு விட்டீர்களா? அவை இரண்டும் ஓரே புத்தகத்திலிருந்த இரண்டு கதைகள்... நான் குறிப்பிட்டிருக்க வேண்டும்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 17. இந்திரா சௌந்தரின் அமானுஷ்ய கதைகள் என்னக்கும் பிடிக்கும்.
  நல்ல நூல் பகிர்வு.ஒன்றரை வருடத்தில் 101புத்தகம் நல்ல எண்ணிக்கை
  தொடரட்டும் தங்கள் வாசிப்பு தாகம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மைதிலி மேடம்..

   Delete
 18. நல்லதொரு பகிர்வு...101 புத்தகம் 1 1/2 வருடத்தில் படித்திருக்கீங்க என்றால் ஆச்சர்யம் தான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மேனகா..

   Delete
 19. மிக அருமையான விமர்சனம்.. வாழ்த்துக்கள், மிக ஆச்சரியமாக இருக்கு 101 புத்தகமா??

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலாக்கா...

   Delete
 20. வருடம் 70, 73ல் எல்லாம் உங்களை போல் தான் நூலகத்திலிருந்து எடுத்து வந்து கதைகள் படிப்பேன்.
  படித்த கதை, பெயர், எல்லாம் எழுதி வைப்பேன். அது ஒரு பொற்காலம். இப்போது மறுபடியும் நூலகம் போக ஆசை வந்து விட்டது. உங்கள் பதிவை படித்தவுடன்.
  101 புத்தகங்கள் படித்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் வாசிப்பு தொடர.

  ReplyDelete
  Replies
  1. அதில் இப்போது இன்னும் 5 அதிகமாகி விட்டது.... 101 + 5 .....:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…