Monday, January 13, 2014

போகிப் பண்டிகை ஸ்பெஷல்!மார்கழியின் கடைசி நாளான போகிப் பண்டிகையான இன்று ”பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற வாக்கை மெய்ப்பிக்க தேவையில்லாத  பொருட்களை தீயிலிட்டு காற்றை மாசுபடுத்தாமல், மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை தூக்கியெறிந்து நல்ல எண்ணங்களை ஏற்றுக் கொள்வோமே...

வாங்க! இன்று எங்கள் வீட்டு ஸ்பெஷல்...

போகியன்று போளி, வடை, பாயசம் ஆகியவைகளை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்வோம்... போளி என்னவருக்கு மிகவும் பிடிக்கும்... ஆதலால் அவர் இங்கு வரும் போது செய்து தரலாம் என்று நினைத்து இன்று பாயசமும், வடையும் மட்டும் செய்தேன்...

இதோ காரட் பாயசமும், கொண்டக்கடலை வடையும்... 

இந்த குறிப்புகளை ”விஜயலட்சுமி தர்மராஜ்” அவர்களின் ”விருந்து உண்ண வாங்க” தளத்தில் பார்த்தேன்.. சரி! இன்று செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்...

இந்த குறிப்புகளை பகிர்ந்த விஜயலட்சுமி தர்மராஜ் அவர்களுக்கு என் நன்றிகள்...


காரட் பாயசம்:-

அரை லிட்டர் பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்... 

1 காரட்டை தோல்சீவி வட்டமாக நறுக்கி, 1/4 தம்ளர் தண்ணீரில் வேகப் போடவும்... வெந்ததும் ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்...  

2 மேஜைக்கரண்டி சேமியாவை நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.. 

பாலில் சேமியாவை போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு, அரைத்த காரட்டை சேர்க்கவும்..

இனிப்புக்கு தகுந்தாற் போல் சர்க்கரை,  2 ஏலக்காய், சேர்க்கவும்..

கண்டென்ஸ்டு மில்க் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.. நான் கொஞ்சம் சேர்த்தேன்..

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்... 

முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா இவற்றால் உங்கள் விருப்பம் போல் அலங்கரிக்கலாம்...

காரட் சேர்ப்பதால் எப்படியிருக்குமோ! ரோஷ்ணி சாப்பிடுவாளோ என்று நினைத்தேன்... காரட்டால் கலரும் அழகாக மாறி சுவையும் அருமையாக இருந்தது... ரோஷ்ணியும் விரும்பிச் சாப்பிட்டாள்...:))

வெள்ளை கொண்டக்கடலை வடை:-

முதல் நாள் இரவே கொண்டக்கடலையை ஊறவைத்துக் கொள்ளவும்...

மிக்சியில் காரத்துக்கு தகுந்த அளவு வரமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கொஞ்சம் சீரகம், பெருங்காயம், துளி இஞ்சி சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்..

பின்பு கொண்டக்கடலையை சேர்த்து விட்டு விட்டு அரைத்து எடுக்கவும்...

உப்பு சேர்த்து பிசைந்து கொண்டு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்...

உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெங்காயம், பூண்டு இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்..... 

நான் பண்டிகை நாளானதால் வெங்காயம் சேர்க்கவில்லை...:)

கொண்டக்கடலையில் செய்ததால் நீண்ட நேரம் மொறுமொறுப்புடனேயே இருந்தது... எண்ணெயும் குடிக்கவில்லை...:)

கடலைப்பருப்புக்கு பதிலாக சுவையான இந்த வடையை இனி எப்போதுமே செய்யலாம் என்று நினைத்துள்ளேன்... 

உங்கள் வீட்டிலும் இவைகளை செய்து பார்த்து ருசியுங்கள்...எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்..22 comments:

 1. போகியன்று செய்த சுவையான சமையலுக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 2. வடை பாயஸத்துடன் ருசியான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. காரட்டை தோல்சீவி வட்டமாக நறுக்கி, 1/4 தம்ளர் தண்ணீரில் வேகப் போடவும்
  >>
  சதுரமா, பொடிப்பொடியா, நீளமா நறுக்கினா கேரட் வேகாதா!? டவுட்டு

  ReplyDelete
 4. சுவையான பகிர்வுக்கு நன்றி...

  தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. எங்க வீட்டிலும் இதே மெனு தான்.
  கொண்டைக்கடலை போதவில்லை என்பதால் சிறிது
  காராமணியும் சேர்த்து புதினாவும் போட்டு அரைத்து செய்தேன்.
  சூப்பர்ப்.

  ReplyDelete
 6. வடை, பாயசத்துடன் அருமையாக போகியைக்கொண்டாடி விட்டீர்கள்!
  பொங்கலையும் அதிக சிறப்புடன் கொண்டாட உங்களுக்கும் உங்கள் கண‌வர் வெங்கட்டிற்கும் குழந்தைக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆதி!!

  ReplyDelete
 7. அற்புதமான ரெஸிபி
  அற்புதமான படம் பசியைத் தூண்டிப்போகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்


  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. Happy Bogi and Pongal Wishes Adhi...:) Thanks for trying my recipes and very happy that your daughter love it much... Vadai and Payasam romba supera iruku... Arumaiyana vadai and payasam...:)

  ReplyDelete
 9. வணக்கம் சகோ..
  அருமையான நிகழ்வைப் பதிவாக பகிர்ந்த விதம் ரசிக்க வைக்கிறது. சாப்பாடு நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும் தங்களுக்கே..
  ------
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. போகிப் பண்டிகை விருந்து அருமை. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஆதி!

  ReplyDelete
 11. அருமை...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. சுவை நிறைந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் மனம் மகிழும்
  தைப் பொங்கல் -புத்தாண்டு வாழ்த்துக்களும் தோழி .
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இவ்வாண்டு மகிழ்வு தரும் ஆண்டாக மலரட்டும் !

  ReplyDelete
 13. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
  பொங்கலோ.. பொங்கல்!..
  அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 14. கொண்டைக் கடலை வடை. ருசி கூப்பிடுகிரது. செய்து ருசிக்கணும். பாயஸம்,வடை போகி களைகட்டிவிட்டது. இனிய பொங்கல் வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
 15. ஆகா மறுபடியும் வலையுலகில் கிச்சன் பதிவுகள் ஆரம்பிச்சிரும் போலியே :-)

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  த ம 7

  ReplyDelete
 17. வைகுண்ட ஏகாதசியன்று அடியேனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி . தாமததிற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 18. பொங்கல் பிசியில கருத்து சொல்ல முடியல. பதிவு அருமை. பாயாசம் எனக்கு அனுப்பவே இல்ல.சரி அண்ணா வரும்போது செய்யப் போற போலியையாவது எனக்கு அனுப்புங்க.

  ReplyDelete
 19. கருத்தளித்து, வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

  ReplyDelete
 20. சுவையான சத்தான வடை, அருமையானபாயஸம் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…