Sunday, January 26, 2014

65வது இந்திய குடியரசு தின விழா



நட்புகள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இனி நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம்… பெண்மையை போற்றுவோம்.. அடுத்த தலைமுறைக்கும் நல்லவைகளை சொல்லிக் கொடுத்து வழிநடத்துவோம்…


நேற்று இரவே ரோஷ்ணி படுக்கும் முன் அம்மா காலையில் எழுந்து நாம் குடியரசு தின விழா அணிவகுப்பை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள்… தில்லியில் நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்ப்பதில் ரோஷ்ணிக்கு அவள் அப்பாவையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு…..:) ஆதலால் காலையில் எழுப்பி விட்டவுடனேயே எழுந்து விட்டாள்… குளித்து விட்டு இருவரும் காலை உணவை உண்டபடியே குடியரசு தின விழா அணிவகுப்பை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தோம்..

பிரதம மந்திரி அமர் ஜவான்க்கு வந்து மரியாதை செலுத்துவது முதல் ஒவ்வொன்றாக பார்த்தோம்… ராணுவங்களின் அணிவகுப்பு, மாநிலங்கள், அமைச்சகங்கள் போன்றவற்றின் அணிவகுப்பு, பள்ளிச் சிறார்களின் நடனம், பைக்குகளில் வந்த ராணுவத்தினரின் சாகசங்கள், விமானப்படையின் சாகசங்கள் என்று வருடந்தோறும் பார்த்தாலும் அலுக்காதவை…


தில்லியில் இருந்த வரை இந்த அணிவகுப்பை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசையிருந்தது… ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பேனா, செல்போன், தின்பண்டங்கள், போன்ற எதையும் கையில் கொண்டு செல்லக் கூடாது, அது போக அதிகாலையிலேயே அங்கு சென்று விட வேண்டும்…. நடுங்கும் குளிரில் குழந்தையையும் வைத்துக் கொண்டு இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் இதுவரை செல்ல முடிந்ததில்லை…


நேரில் சென்றிருந்தாலும் சாகசங்கள் அனைத்தும் முக்கிய பிரமுகர்கள் இருக்கும் இடத்தில் தான் செய்து காண்பிப்பார்கள்… அதை விட தொலைக்காட்சியில் தான் எல்லா பக்கமிருந்தும் தெளிவாக காண்பிக்கிறார்களே என தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்த்து விடுவதுண்டு…..:)) ராணுவத்தினரின் அணிவகுப்பையும், சாகசங்களையும் பார்க்கும் போதெல்லாம் நாமும் ஏதாவது ஒரு பிரிவில் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாமோ எனத் தோன்றும் எனக்கு……:))


அடுத்து 29ந் தேதி மாலை ராணுவத்தினருக்கு மரியாதை செய்து வழியனுப்பும் வகையில் BEATING RETREAT நடைபெறும்.. தவறாமல் பாருங்கள்…




படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

12 comments:

  1. குடியரசு தின நல் வாழ்த்துக்கள். படங்கள் , பதிவு அருமை.

    தில்லியில் நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்ப்பதில் ரோஷ்ணிக்கு அவள் அப்பாவையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு…..:)
    குழந்தை அப்பாவை எவ்வளவு தேடுகிறாள்! உணர்வு மிக அருமை.

    ReplyDelete
  2. படங்கள் மிகவும் அருமை...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தில்லியில் நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்ப்பதில் ரோஷ்ணிக்கு அவள் அப்பாவையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு…..:)

    ரோஷ்ணியின் உணர்வுகளைப்புரிந்துகொள்ள முடிகிறது..

    குதூகல குடியரசு தின வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. வணக்கம்

    பகிர்வு சிறப்பு படங்களும் அழகு..

    இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. 29 .01.14 kandippaga TV paarkkanum. Roshini kudiyarasu nigazhchigalai paarkka asai paduvadhu sandhosham.

    ReplyDelete
  6. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  7. அற்புதமான புகைப்படங்களுடன்
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நாங்களும் யூ டியூபில் லைவ்காஸ்ட் பார்த்தோம். 'BEATING RETREAT' தகவலுக்கு நன்றிங்க. முடிந்தால் பார்க்கிறேன். இந்த‌ 'வீராங்கணை' எண்ணம் எல்லோருக்குமே வந்து போகும்போல் தெரிகிறதே.

    உங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வுங்க... நன்றிங்க.

    ReplyDelete
  10. அருமையான படங்களுடன் சிறப்பான பதிவு!

    ReplyDelete
  11. கருத்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி....

    நாளை மாலை தான் BEATING RETREAT....

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…