Sunday, January 12, 2014

மெதுவடை! 45! 65!


பட உதவி - கூகிள்

விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் ஒரு மணியளவில் கனெக்‌ஷன் என்ற நிகழ்ச்சி வருகிறது பார்த்திருக்கிறீர்களாஜெகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.  சம்பந்தமேயில்லாத விஷயங்களாகத் தோன்றும் விஷயங்களை ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்படுத்தி பார்க்கிறது தான் இந்த நிகழ்ச்சியின் தாத்பர்யம்!! புகைப்படங்கள் சிலவற்றை காண்பிக்க, அதில் பொதுவாக இருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தினை கண்டுபிடிக்க வேண்டும். இந்நிகழ்ச்சியிலேயே ஜவ்வு மிட்டாய் என்று அடுத்தடுத்த தொடர்புடைய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும். கொஞ்சம் ஸ்வாரசியமாக இருப்பதால் நான் தொடர்ந்து பார்த்து வரும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று! இதுவரை பார்க்காதவர்கள் பாருங்களேன்

சரி! தலைப்பில் மெதுவடை, 45, 65 சொல்லியிருப்பது எதற்கு? மெதுவடை 45 சாப்பிடுவீங்களா, அப்படி சாப்பிட்டா 65 மெதுவடை இலவசமா கிடைக்குமா? இல்லை மெதுவடைக்கும் சம்பந்தமேயில்லாத 45, 65 எண்களுக்கும் என்ன கனெக்‌ஷன்? சும்மா அறுக்காம முதல்ல விஷயத்தை சொல்லுங்க! என்று ஆத்திரப்படும் நண்பர்களே. கொஞ்சம் பொறுமையாக இருங்க. எல்லாத்துக்கும் விளக்கம் சொல்றேன். சரியா! :)


பட உதவி - கூகிள்

சென்ற வாரம் திருவரங்கம் ராஜ கோபுரத்தின் அருகிலிருந்த ஒரு கடைக்கு சென்றிருந்தேன். எதை எடுத்தாலும் 8ரூ 10ரூ தான் என்று கூவிக் கூவி அழைக்கும் இந்த கடைகளில் உள்ளே சென்றவுடன் ஒரு வரிசையை காண்பித்து அதிலுள்ள பொருட்கள் மட்டுமே 8லிருந்து 10ரூபாய் என்பார்கள்..:)) ஒரு நாள் இக்கடையினுள் சும்மா ஒரு ரவுண்ட் பார்த்துக் கொண்டிருந்தேன். காய்கறி கட்டர்கள் இருந்த வரிசையில் திடீரென்று என் கையை பிடித்து இழுத்த ரோஷ்ணி அம்மா மெதுவடா மேக்கர்னு போட்டிருக்கு பாரேன்” என்றாள்! அப்போது தான் பார்த்தேன். அட! ஆமா! மெதுவடை மேக்கர். எடுத்துப் பார்த்து, வைத்து விட்டு வந்து விட்டேன்..

வீட்டுக்கு வந்து கூகிளில் தேடினால் மெதுவடா மேக்கரின் படங்களும் தகவல்களும் கிடைத்தன. செய்முறை காணொளியாகக் கூட உள்ளது. பாருங்களேன்!


தில்லிக்கு சென்ற புதிதில் உளுந்து வடைக்கு அரைக்கும்போது, நிறைய தண்ணீர் தெளித்து அரைத்து விட்டு,வடையில் ஓட்டையே வர மாட்டேங்குதே! என்று தனிமையில் புலம்பிக் கொண்டிருப்பேன். அது என்னவரின் காதுகளுக்கும் எட்டி, விஷப்பரீட்சையெல்லாம் எதுக்கு செய்யறே? நான் தான் உனக்கு கிடச்சேனா என்பார்! நானும் விடுவதாக இல்லை. அப்படி இப்படி ஏதோ செய்து பார்த்து, இப்போது கொஞ்சம் தேறி விட்டேன்…:)))

சரி! மீதி விஷயங்களுக்கு என்ன சம்பந்தம் என்று அவசரப்படாதீர்கள். சில வருடங்களுக்கு முன்பு சைனா பஜார் என்று பல இடங்களில் கடைகள் முளைத்திருந்தன. எதை எடுத்தாலும் 45ரூ, 65ரூபாய் என்று போட்டிருப்பார்கள். அதே போல் தான் இங்கும் ஒரு வரிசையில் உள்ளது மட்டுமே அந்த விலையில். இங்கு வீட்டுக்கு தேவையான நல்ல பல பொருட்களும் இருக்கும். நாங்களும் தில்லியில் வீட்டுக்கு தேவையான பல பொருட்களை வாங்கியிருக்கிறோம். இந்த மெதுவடை மேக்கர் எனக்கு மறந்து போயிருந்த சைனா பஜாரை நினைவூட்டியது..

மார்கழி என்றாலே கோவில்.. பிரசாதங்கள் நினைவுக்கு வரும்...பிரசாதத்தில் உள்ள வடை, மெதுவடா மேக்கரையும், 8, 10 கடையையும்45/- 65/- சைனா பஜாரையும் சம்பந்தப்படுத்தி விட்டது. என்ன தலைப்பு பத்திய உங்களோட டவுட் க்ளியர் ஆயிடுச்சா?

சொல்ல மறந்துட்டேனே! மெதுவடா மேக்கரை நானும் வாங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். பொங்கல் அன்று வடை செய்ய வேண்டுமே! :நீங்களும் பொங்கல்-வடை சாப்பிட வாங்களேன்!

பொங்கல் வடை சாப்பிட்டு “ஏவ்!” னு ஏப்பம் விட்ட படி எங்க கிளம்பிட்டீங்க? வலைச்சரத்தில் இன்னிக்கு யாருடைய பதிவுகள் அறிமுகம் செய்திருக்கிறேன்னு பார்க்கத்தானே?  உங்களுக்கு வசதியா இந்த பதிவிலேயே அங்க போறதுக்கு லிங்க் கொடுக்கறேன்! இதோ! 

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டிஸ்கி:- நேற்று சொர்க்க வாசல் படி மிதிக்கவும், ரத்னாங்கி சேவை காணவும் சென்று விட்டதால் மாலே மணிவண்ணா வைகுண்ட ஏகாதசி பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை... திங்கள் செவ்வாயில் எழுதி பதிவிடுகிறேன்..14 comments:

 1. இருப்பதிலேயே மெதுவடை டிசைன்தான் கஷ்டம். கடைசியா கத்துக்கிட்டது அதைத்தான். யூ டியூப் ல் ஆடோமேடிக் வடா மேகிங் மெஷின் பார்த்திருக்கேன். இப்போது வீட்டுக்கும் வந்துவிட்டதா? ஊருக்குப் போனால் கேட்டுப் பார்க்கிறேன்.

  சுட்ட பிறகு எப்படி வந்ததுன்னு வடையையும், வடா மேக்கரையும் போட்டுவிடுங்கோ.

  ReplyDelete
 2. அறியாத கருவி
  மெதுவடை ரசிகர் என்பதால்
  வாங்கிவிட வேண்டியதுதான்
  காணொளியுடன் சொல்லிச் சென்ற விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. டவுட்டே இல்லை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மெது வடைக்கும் மிஷின் வந்து விட்டதா!..
  அப்படியானால் - மெதுவடை செய்வது யார்?..

  ReplyDelete
 5. ;))))) மகிழ்ச்சியான வடைப்பகிர்வுக்கு நன்றிகள். சுகாதாரமானதாக இருக்கலாம். சுவையாக இருக்குமா எனச் சொல்ல முடியாது.

  ஏற்கனவே நான் ஒரு காணொளி கண்டேன். அதில் வடைகள் இதைவிட பார்க்கவே பிரமாதமாக இருந்தன. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. அனேகமாக அது டொனட் மேக்கர் என்று நினைக்கிறன்

  இருந்தாலும் நல்லா கீது ...

  ReplyDelete
 7. //பொங்கல் அன்று வடை செய்ய வேண்டுமே! :) நீங்களும் பொங்கல்-வடை சாப்பிட வாங்களேன்.//

  ”விஷப்பரீட்சையெல்லாம் எதுக்கு செய்யறீங்க? நான் தான் உங்களுக்கு கிடச்சேனா?"
  [நன்றி : வெங்கட் நாகராஜ் சார்!]

  ReplyDelete
 8. எனது "நிஜாம் பக்கம்" வலைப்பூவுக்கு வந்து மெதுவடை கதை, தோசை கதை இவற்றைப் படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். [நகைச்சுவை லேபிள் சொடுக்கிப் படிக்கலாம்.]

  ReplyDelete
 9. மெதுவடை மேக்கரில் செய்து அது கடிக்க முடியாத வடையா மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 10. வடை சுட்ட்டுத்தரும் கருவியும் வந்துவிட்டால் நம்மவர்கள் நல்லா உக்காந்துண்டே சாப்டுவா...

  ReplyDelete
 11. கருத்துரையிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

  ReplyDelete
 12. அருமையான மெதுவடை மேக்கர்.
  வாழ்த்துக்கள் .வாங்கிவிட்டீர்களா மெதுவடைமேக்கர்?

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…