Thursday, January 9, 2014

மார்கழி மாத நினைவுகள் – 4


பட உதவி: கூகிள்

நேற்று கனுப்பொங்கல் பற்றி சொன்னேனல்லவா! வாங்க அதைப் பற்றி பார்க்கலாம். பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப் பொங்கல். வட இந்தியாவில் ரக்‌ஷாபந்தன் போல், உடன்பிறந்த சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டிக் கொண்டு செய்யும் ஒரு நிகழ்வு தான் இந்த கனுப்பொங்கல்.

அதிகாலையில் எழுந்து வீட்டிலுள்ள வயதான பெண்மணிகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ மஞ்சள்கிழங்கை கொடுத்தால், அவர்கள் நம் நெற்றியில் மஞ்சள் கிழங்கால் தேய்த்து விட்டு என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக இருக்கும்படி ஆசீர்வாதம் செய்வார்கள். கோவையில் எங்கள் குவார்ட்டர்ஸிலேயே இருந்த உறவினர் வீட்டிற்குச் சென்று அம்மாவும் நானும் மஞ்சள் தேய்த்துக் கொள்வோம்.  தில்லியில் அதிகாலை குளிரில் யார் வீட்டுக்கும் செல்ல முடியாததால், போனால் போகட்டும் என்று என்னவரிடமே கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வேன் :))

அதன் பின்பு ஏணி போட்ட மொட்டைமாடிக்கு தாவி ஏறி, முதல் நாள் பொங்கலுக்கு செய்த சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை பாக்குடன், மஞ்சள், குங்குமம் மற்றும் தயிருடன் சாதங்களை தனித்தனியாக வெவ்வேறு வண்ணங்களில் கலந்து கொண்டு, மொட்டை மாடியில் ஒரு இடத்தில் தண்ணீர் தெளித்து, வீட்டிலுள்ள பெண்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் கோலமிட வேண்டும்.

மஞ்சள்கொத்தின் இலைகளை போட்டு ஒற்றைப்படையில் சாதங்களை கலர் கலராக காக்கைக்கு சாதம் வைத்துகாக்கா பிடி கனுப்பிடி உன் கூட்டம் கலைந்தாலும் என் கூட்டம் கலையாம இருக்கணும்என்று சொல்லி வைக்க வேண்டும். சின்னஞ்சிறு சிறுமிகளும் வைப்பார்கள். அதன் பிறகு அதை நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டி நமஸ்கரிப்போம். அதன் பின்பு தான் குளியல். சிறப்பாக இதை காலம் காலமாக எங்கிருந்தாலும் செய்து கொண்டு வருவது வழக்கம்.

திருமணமான பின் தில்லியின் கடுங்குளிரில், எதிரே இருப்பவர் கூட தெரியாத அளவு பனிமூட்டம் இருக்கும் சமயத்தில், வீட்டிலேயே ஒரு ட்ரேயில் மஞ்சக்கொத்தின் இலைகளில் சாதங்களை வைத்து எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடி கிடுகிடுவென்று கோலத்தை போட்டு இலைகளை கோலத்தில் வைத்து விட்டு நமஸ்கரித்து விட்டு ஓடி வந்த நினைவுகள் இன்றும் பசுமையாய்….:))

அன்று கலவை சாதங்கள் மட்டுமே செய்வார்கள். ஐந்து ஏழு என்ற கணக்கில் தேங்காய் சாதம், எலுமிச்சை, புளியோதரை, தயிர் சாதம், கல்கண்டு சாதம் இப்படி செய்வார்கள். உடன்பிறந்தவர்கள் வீட்டிற்கும் செல்வதுண்டு.

தில்லியில் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த எனது கணவரின் நண்பர் ஒருவர் எப்போதும் இந்த நாளில் எனக்கு வெற்றிலை பாக்குடன் பொங்கல் பணம் வைத்து தருவார். சென்ற வருடம் அவர்கள் ஓரிடத்தில், நாங்கள் ஓரிடத்தில் இருந்தாலும் என்னுடைய வங்கி கணக்கு எண் வாங்கி MONEY TRANSFER மூலம் அனுப்பி வைத்தார். பணத்தின் மதிப்பை விட அவர்கள் தவறாமல் இதை தொடர்வதும், சகோதரியாக பாவிப்பதுமே இங்கு முக்கியமல்லவா.

இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடியதை எனது நினைவலைகளாக பகிர்ந்ததை நீங்களும் படித்து ரசித்தீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

சொல்ல மறந்துட்டேனே. இந்தப் பகுதியை நேற்று எழுதி கொண்டிருக்கும் வேளையில் தான் அந்த நண்பரும் மும்பையிலிருந்து போன் மூலம் என் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்திருப்பதாகவும், கனுவுக்கு வைத்துக் கொள்ளும்படியும், கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன் தகவல் தெரிவிக்கும் படியும் சொன்னார்...:)

நாளை! என்ன! மார்கழி என்று சொல்லி விட்டு கோலங்கள் இல்லாமலா! அவை சில உங்கள் பார்வைக்கும். 

இன்றைய வலைச்சரத்தில் யார் யாருடைய அறிமுகங்கள் என்பதைப் பார்க்கா விடில் இங்கே க்ளிக் செய்து பாருங்க!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


24 comments:

 1. உடன்பிறந்த சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டிக் கொண்டு செய்யும் ஒரு நிகழ்வு தான் இந்த கனுப்பொங்கல்.//

  உடன்பிறந்த சகோதர்கள் நலமாக இருக்க பிராத்திப்போம்.
  டெல்லி சகோதரர் அன்பு வாழ்க!
  கனுப்பொங்கல் நினைவுகள் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 2. உங்களின் இன்றைய கனுப்பொங்கலும் வித்தியாசமாத்தான் இருக்கு. டெல்லி சகோதரர் பாராட்டப்பட வேண்டியவர். நாளை கோலங்களைப் பார்க்கும் ஆவலில் .....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 3. டெல்லிவாழ் மக்களின் பண்டிகைமுறையை
  விளக்கியவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இது நம்ம ஊர் பண்டிகை முறை தான்...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

   Delete
 4. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 5. ஒவ்வொரு அனுபவங்களும் அருமை.. +1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆனந்த்..

   Delete
 6. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடியதை
  நினைவலைகளாக பகிர்ந்தததற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

   Delete
 7. அனைவரும் நலமாக இருக்க வேண்டும்... பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 8. நாங்கள் பொங்கலின் அடுத்தநாளை காணும் பொங்கலாக கொண்டாடுவோம், அதவாது வெளியே எங்காவது ஊர் சுற்ற கிளம்பி விடுவோம்.. ஆனால் தில்லியில் வித்தியாசமாக கொண்டாடுகிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. இது நம்ம ஊர் கொண்டாட்டம் தான்....

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சீனு...

   Delete
 9. Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 10. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடியதை நினைவலைகளாக பகிர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 11. கணுப்பொங்கல் தகவல்கள் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்...

   Delete
 12. நம் சகோதரப் பாசம் வெளிப்பட ஒரு பண்டிகையை நம்முன்னோர்கள் கடைபிடித்திருக்கிறார்கள் .
  அதை வெளிக்காட்டியது உங்கள் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…