Thursday, January 30, 2014

அரங்கமா நகருளானே.... (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் – 3)

பகல்பத்துக்கும், ராப்பத்துக்கும் இடைப்பட்ட நாள் தான் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது.. பெருமாள் அர்ஜுன மண்டப வழியாக நுழைந்து பரமபத வாசல் வழியாக, அரிய ரத்னங்களை கொண்ட அங்கியை அணிந்து கொண்டு அதிகாலையில் காட்சி தருவார்…. ஆகவே அன்று சொர்க்க வாசல் படி மிதித்தல் என்பது வைபவமாக கொண்டாடப்படுகிறது

ஸ்ரீரங்கமே கோலாகலமாக காணப்பட்டது.. ஏறக்குறைய ஒரு மாதகாலமாகவே தட்டிகள் கட்டி வரிசையில் மக்களை அனுப்புவதற்கும், அவர்களுக்கான குடிநீர் வசதி, பாதுகாப்பு, உறைவிடங்கள் போன்றவற்றை திருச்சி மாநகராட்சியும், காவல்துறையினரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்தனர்இன்று அந்த நாளே வந்துவிட்டது


சொர்க்க வாசல் படி மிதிக்க தெற்கு வாசலில் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், மற்ற வாசல்களில் அனுமதி கிடையாது என்றும் சொல்லவேகாலை 7 மணிக்கெல்லாம் மேற்கு உத்திர வீதியில் சென்று கொண்டிருந்த வரிசையில் நிற்கத் துவங்கினோம்இங்கேயே நான்கு வரிசைகள்எங்கு செல்கிறது..என்று தெரியவில்லைஅப்படியே நகர்ந்து கொண்டே சென்றோம்

அந்த காலை நேரத்தில் ஒருபுறம் சூடான இட்லிகள், சாம்பாருடன் ஃபாயில் டப்பாக்களில் எல்லோருக்கும் விநியோகித்து கொண்டிருந்தனர்… அதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வரிசையில் நின்றவர்களும், இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு பிடிக்காமல் போனதால் தூக்கி சாலையில் வீசி எறிந்தவர்களும், என எங்கும் இட்லி மயமாக இருந்தது…. நமக்கு தான் குப்பை போட மிகவும் பிடிக்குமே…. கேட்கணுமா!

ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள், முதலில் ஒரு பொட்டலம் வாங்கி சாப்பிட்டு பார்த்து விட்டு பிறகு எல்லோருக்கும் வாங்கியிருக்கலாம்…. ஆனால் யார் அதெல்லாம் யோசிக்கிறாங்க! வீணாக தூக்கி போட்ட உணவு வேறு ஒருவருக்கு தேவையாக இருந்திருக்கலாம்…. அவர்களாவது சாப்பிட்டிருப்பார்கள்….:(

ஒலிப்பெருக்கியில் வயதான ஆந்திர பெண்மணி யாரோ வழி தெரியாமல் கூட்டத்திலிருந்து காணாமல் போய் காவல் துறையினரிடம் உதவி கேட்க அவர்கள் அறிவித்து விட்டு அந்த பாட்டியை விட்டே பேச சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படிப் பலர்…


மறுபுறம் காவல் துறையினர் பொதுமக்களுக்கு திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்புகள் அங்கங்கே வெளியிட்டிருந்தனர்… நகைகளை அணிந்து கொண்டு வர வேண்டாம், காமிராக்கள் அனுமதியில்லை, தாலிச் சரடை ப்ளவுஸ் ஹூக்கில் பொருத்தி வரவும் போன்ற பல எச்சரிக்கைகள்…. இதெல்லாம் பார்த்தும் கழுத்து நிறைய நெக்லஸ், ஹாரம் அணிந்து வந்தவர்கள் ஒருபுறம் என ஸ்ரீரங்கமே களைகட்டியிருந்தது…

வரிசையும் நகர்ந்து கொண்டே வந்தது…. அடுத்து கல்யாண மண்டபம் ஒன்றின் வாசலில் சர்க்கரைப் பொங்கல் தந்து கொண்டிருந்தார்கள்.. நாங்களும் வரிசையில் இப்போது ஒன்றரை மணி நேரங்களை செலவழித்திருந்தோம்… இன்னும் கோவில் உள்ளேயே நுழையலை….:) நடுவில் சிலர் நுழையப் பார்க்க, எங்களுடன் நின்றிருந்தவர்கள் எல்லோரும் கொந்தளிக்க, காவல் துறையினர் வந்து கண்டித்தும், அவர்கள் காதிலேயே வாங்காது நுழைந்து செல்கின்றனர்…. சிரமமே படக்கூடாது போல இவர்களுக்கு……:(

”ரங்கா ரங்கா” கோபுரத்தின் உள்ளே நுழைவதற்கு முன் ஒரு இடத்தில் சின்ன அளவில் பூஜையில் வைத்து வணங்குவதற்காக இராமர் ஜாதகம் எல்லோருக்கும் வழங்கப்பட்டது…. வாங்கி கைப்பையில் வைத்துக் கொண்டேன்… அடுத்து சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் இனிப்பு பூந்தி எல்லோருக்கும் தரப்பட்டது… இதை மட்டும் வாங்கி நானும் ரோஷ்ணியும் சாப்பிட்டோம்… வாங்க! எல்லோரும் தெற்கு கோபுரத்தின் உள்ளே நுழையப் போகிறோம்…

இங்கேயும் வரிசைகளில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தோம்… கீதா ப்ரஸ் கோரக்பூர் வழங்கும் பகவத்கீதை விளக்கங்களுடன், அவரவர்கள் மொழியை கேட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டது… தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தோம்.. பெருமாள் சன்னிதி உள்ளே செல்வதற்கு முன் கருடமண்டபத்தில் ஒரு இடத்தில் வரிசைகள் நீக்கப்பட்டு எல்லோரும் சேர்ந்து நசுக்க ஒருவழியாகி விட்டோம்… எல்லோருக்கும் அவசரம்… உடனே பெருமாளை பார்க்கணும், சொர்க்க வாசல் படி மிதிக்கணும்… ஐந்து நிமிடம் கூட தாமதிக்கக்கூடாதாம்…:))

அடுத்து பெருமாள் சன்னிதி உள்ளே அனுமதி…. இதுவரை முத்தங்கி சேவை பார்க்க வந்தவர்கள், ரத்னாங்கி சேவை பார்க்க வந்தவர்கள், சொர்க்க வாசல் படிமிதிக்க வந்தவர்கள் என ஒரே வரிசையில் தான் வந்து கொண்டிருந்தோம்… இனி அவரவர்கள் எங்கு செல்ல வேண்டுமோ பிரிந்து செல்லலாம்… ஓட்டம் தான்….:)) ஒருவழியாக தங்க பல்லி, வெள்ளி பல்லி எல்லாம் பார்த்து இதோ…. மூன்றரை மணி நேரங்களுக்கு பிறகு சொர்க்க வாசல்படி மிதித்து விட்டேன்… ரங்கநாதா எல்லோரையும் நீதான் காக்கணும்….:)


இரண்டு மூன்று மாதங்களாக குதிகால் வலி வந்து நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்… இன்று சொர்க்க வாசல் படி மிதிக்க காலை குமிழ் குமிழாக இருந்த பித்தளைத் தகடு அடித்த படியில் வைத்து அழுத்த….. உயிரே போனாப் போல ஆயிடுத்து….:( அதனால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்…:)

நாளை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை ரத்னாங்கி சேவையில் தரிசிக்கலாமா….:)

படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

20 comments:

 1. நம்மவர்கள் பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள என்றுதான் கற்கப் போகிறார்களோ... சாதாரண கோவில்களிலேயே செம கூட்டம் இருந்திருக்கும். ஸ்ரீரங்கத்தில் கேட்கவும் வேண்டுமோ!

  ReplyDelete
 2. வீணாக போகிறதே என்கிற எண்ணம் தரிசனத்தை விட சிறந்தது... வாழ்த்துக்கள்...

  ரங்கநாதா எல்லோரையும் நீதான் காக்கணும்...!

  ReplyDelete
 3. உங்கள் கண்கள் வழியாக ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா நேரடியாக கண்டேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ரங்கநாதரை தரிசித்து புண்ணியம் பெற விரும்பி வரும் கூட்டத்தில தாங்கதான் புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டு குறுக்கால பூந்து பலபேர் கிட்ட திட்டும், வயித்தெரிச்சலையும் வாங்கிட்டுப் போற இந்த ஜந்துக்களுக்கு என்ன புண்ணியம்ங்க கிடைக்கும்? புரியலை.... அப்புறம்... இந்த குப்பை போடற மனோபாவம் எனக்கும்கூட கொஞ்சமும் பிடிக்காத ஒண்ணு. அந்தப் பொட்டலத்தை கைல வெச்சிருந்து கோயிலை விட்டு வெளில வந்ததும் குப்பைத் தொட்டில போட்டிருந்தா உத்தமமா இருந்திருக்கும்! பாருங்க... இந்த விஷயங்களெல்லாம் கவனிச்சதுல புகைப்படங்களோட அழகா தரிசனத்துக்குக் கூட்டிட்டுப போன உங்களோட பக்தியை விட்டுட்டோம்...

  ReplyDelete
 5. தங்கள் பதிவின் முலம்
  ரங்கனைச் சேவித்தோம்
  மிக்க நன்றி
  பதிர்விற்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. உங்களோடு சேர்ந்து நாங்களும் சொர்க்க வாசலை மிதித்தோம். ரெஸ்ட் எடுத்துகிட்டு வாங்க. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. நான் ஸுலபமாக உங்களுடனே வந்து தரிசித்துவிட்டேன். நல்ல தரிசனம். கொஞ்சம் காலையும் பார்த்துக் கொள்ளணும். அன்புடன்

  ReplyDelete
 8. படி மிதிக்காத வருத்தம் தீர்ந்தது.. படித்ததும்

  ReplyDelete
 9. Indha padhivin moolam naanum SORGA VAASAL Padiyai midhithithu vitten. Padhivu romba suvaiyaga irundhadhu.Koottaththil Roshini yeppadi samaliththaql ?

  ReplyDelete
 10. I have been to Sri Rangam only once. Thanks for sharing the vaikunda ekadasi experiences!
  Take care of your leg!

  ReplyDelete
 11. நேரில் சென்று பார்த்த உணர்வைத் தந்தது உங்கள் பதிவு.

  ஸ்ரீரங்கத்துக்கு சாதாரண நாட்களில் போனாலே கூட்டம் நிரம்பி வழியும். ஏழெட்டு வருஷங்கள் திருச்சியில் இருந்தும் சொர்க்க வாசல் படியை மிதித்ததில்லை. பரமபத வாயில் என்ற பெயரில் பார்த்ததோடு சரி.

  ReplyDelete
 12. //இதெல்லாம் பார்த்தும் கழுத்து நிறைய நெக்லஸ், ஹாரம் அணிந்து வந்தவர்கள் ஒருபுறம் என ஸ்ரீரங்கமே களைகட்டியிருந்தது…//

  எத்தனை சொன்னாலும் சிலர் திருந்துவதில்லை....

  ReplyDelete
 13. வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை அழகாய் சுவாரஸ்யமாய் கொண்டு செல்கிறீர்கள். ரத்னாங்கி சேவை காண காத்திருக்கிறேன்.......

  ReplyDelete
 14. உங்களுடன் நாங்களும் வரிசையில் வளைந்து நெளிந்து சென்று சொர்க்க வாசலை மிதித்த திருப்தி வந்தது. காலைப் பார்த்துக்கோங்க.

  எதெதுக்கோ பேனர் வைக்கிறோம். இந்த குப்பையை அதற்குரிய இடத்தில் போடுவது மாதிரியான படங்கள் உள்ள தட்டிகள் ஆங்காங்கே வைத்தால் தெரியாதவர்கள் புரிந்துகொள்வார்கள்.

  ReplyDelete
 15. அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 16. அழகான படங்களுடன் அற்புத வர்ணனை. உச்சிமுதல் கு தி கா ல் வரை ஒன்றுவிடாமல் எழுதியுள்ளது சிறப்பு. ;)

  ReplyDelete
 17. அருமையான படங்களுடன் அழகான பதிவு. கோபுர உச்சிமுதல் தங்கள் கு தி கா ல் வரை எல்லாவற்றையும் எழுதியுள்ளது சிறப்பு. ;)

  ReplyDelete
 18. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 19. வை.கோ சார் - மிக்க நன்றி.

  ரூபன் சார் - வலைச்சர அறிமுகத் தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…