Wednesday, January 8, 2014

மார்கழி மாத நினைவுகள் – 3

பட உதவி: கூகிள்

தை மாதத்தின் முதல் நாளே பொங்கல் என்றாலும் நாம் மார்கழி நினைவுகளோடே பொங்கலையும் வைத்துக் கொள்வோம். எல்லோரும் போகிக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பெரும்பாலும் பொங்கலுக்காக வெள்ளையடிப்பார்கள். வீட்டிலும் வெளியிலும் கோலமிட்டு வைத்திருப்போம். போகியன்று எல்லார் வீட்டிலும் காப்பு கட்டுவார்கள். மாவிலை, வேப்பிலை, பூளைப்பூ (திருச்சியில் பார்த்த மாதிரி தெரியலை) ஆகியவற்றை வைத்து நல்ல நேரத்தில் காப்பு கட்டுவார்கள். அம்மா பருப்பு வடை, போளி, பாயசம் ஆகியவற்றை செய்து நைவேத்தியம் செய்வார்.

பொங்கலன்று அதிகாலையிலேயே குளித்து எல்லோரும் கோவிலுக்கு சென்று விட்டு வந்து பொங்கல் வைப்பார்கள். குவார்ட்டர்ஸில் இருந்ததால் கேஸ் அடுப்பில் தான் பொங்கல்..:) வீட்டில் பூஜை செய்த பிறகு, அக்கம் பக்கம் விநியோகம் செய்து, எல்லோரும் சாப்பிட்டு விட்டு சிலர் பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு சென்று விடுவார்கள். சிலர் தொலைக்காட்சியோடு சரி. உறவினர் வீடுகளுக்கும், நண்பர் வீடுகளுக்கும் கூட செல்வதுண்டு. சர்க்கரை பொங்கலுடன், உளுந்து வடை அன்று அம்மா செய்வார். மதியத்துக்கு மேல் அப்பா கரும்புகளை வெட்டி துண்டு துண்டாக நறுக்கித் தருவார். :)

பொங்கல் பண்டிகை என்று சொல்லும் போது முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால். ஒவ்வொருவரின் குடும்ப வழக்கங்கள் வெவ்வேறாக இருக்கலாம். எங்கள் குடும்பத்தில் பொங்கல் சமயத்தில் உடன்பிறந்த சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பொங்கல் வைக்க தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், ரவிக்கைத்துணி, போன்றவற்றை பொங்கலுக்கு முன்பே தந்துவிட்டு செல்வார்கள்.

அந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறது. என் அம்மாவுக்கு கூட உள்ளூரிலேயே இருந்த மாமா வருடம் தவறாமல் தந்து விட்டு செல்வார். வெளியூரில் இருந்த மாமாக்கள் மணியார்டர் மூலம் பணம் அனுப்புவார்கள். எனக்கும் அப்பா இருந்தவரை சரியாக ஒரு மாதம் முன்பே மணியார்டர் அனுப்பி விடுவார். அதில் அனுப்பும் பணத்தை விட எங்களை விசாரித்து அப்பாவின் மணி மணியான கையெழுத்தில் எழுதும் நாலு வரிகள் தான், எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அப்பாவை பார்த்த உணர்வைத் தரும் அந்த கடிதமும் அதில் உள்ள வார்த்தைகளும்.

தற்போது இந்த பழக்கம் MONEY TRANSFER செய்வதாக மாறியிருக்கிறது. உடனேயும் கணக்கில் வரவு வைக்கப்படுவதால் வசதியாக இருக்கிறது. சென்ற வாரம் திருச்சிக்கு வந்த என் தம்பி எனக்கு பொங்கல் பணத்தை தந்து விட்டு சென்றான்.

அடுத்தது மாட்டுப் பொங்கல். கிராமங்களில் தான் சிறப்பாக கொண்டாடுவார்கள். எங்கப்பா தன்னுடைய சிறு வயது பொங்கல் பற்றி சொல்லும் போது கற்பனை செய்து பார்த்ததுண்டு. சரி! நாம் தான் நகரவாசிகளாச்சே! அதனால் கனுப்பொங்கல் கொண்டாடுவோம்..

அது என்ன கனுபொங்கல்? என்ன செய்வீர்கள்? என்ற கேள்விகளுக்கான விடை நாளை பார்க்கலாம்!

அதற்கு முன்னர் இன்றைய வலைச்சரத்தில் நான் இன்றைக்கு எதைப் பற்றி எழுதி இருக்கிறேன், யாரை அறிமுகம் செய்திருக்கிறேன் எனப் பார்த்தாயிற்றா இல்லையா? இங்கே போய் பாருங்களேன்....

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம். 


28 comments:

 1. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அப்பாவை பார்த்த உணர்வைத் தரும் அந்த கடிதமும் அதில் உள்ள வார்த்தைகளும்.// எத்தனை வயசானாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை என்பது என் அம்மா முகத்தைப் பார்க்கும் போது தெரியும்.. அவர் அண்ணா தரும் 50 ஓ 100 ஓ அவர் கையில் இருக்கும்போது !

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக... எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்...

   Delete
 2. கூடப்பிறந்த சகோதரிகளுக்கு புடைவை, ரவிக்கை வைத்துக்கொடுக்கும் வழக்கம் எங்கள் வீட்டிலும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

   Delete
 3. எங்கள் ஊர் பக்கம் 'பொங்கல் வரிசை' என்று திருமணமான முதல் வருடம் செய்வதோடு சரி. நீங்கள் சொல்வது புதுசா இருக்கு.

  உங்களுடன் சேர்ந்து கனுவைக் கொண்டாட நாளை நாங்களும் வருகிறோம் !!

  ReplyDelete
  Replies
  1. என் பிறந்தவீட்டில் கார்த்திகைக்கும் சீர் செய்வது உண்டு...:) புகுந்த வீட்டில் பொங்கலுக்கு மட்டுமே சீர்....:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா....

   Delete
 4. அட??? தம்பி வந்திருந்தாரா?? அவரை அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. மார்க்கெட்டிங்கில் இருப்பதால் நேரமே கிடையாது.. இம்முறை தான் ஒருநாள் எங்களுடன் தங்கினான்... அடுத்த முறை அழைத்து வருகிறேன்..மாமி..

   Delete
 5. எனக்கும் பொங்கல் சீர் அண்ணன், தம்பிகளிடமிருந்து வரும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி...

   Delete
 6. //பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அப்பாவை பார்த்த உணர்வைத் தரும் அந்த கடிதமும் அதில் உள்ள வார்த்தைகளும்.//

  உண்மை... இன்று எந்த நாட்டில் இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்துப் பேசக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, அன்றைய காலகட்டத்தில் நமக்கு கடிதங்கள் அந்த உணர்வைத் தந்தது....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை..

   Delete
 7. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அப்பாவை பார்த்த உணர்வைத் தரும் அந்த கடிதமும் அதில் உள்ள வார்த்தைகளும்....

  அழகான பொங்கல் நினைவலைகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

   Delete
 8. அனுப்பும் பணத்தை விட எங்களை விசாரித்து அப்பாவின் மணி மணியான கையெழுத்தில் எழுதும் நாலு வரிகள் தான், எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.//
  உண்மை ஆதி.

  மதுரைக்கு இப்போது போன போது தம்பி பொங்கல் சீர் கொடுத்துவிட்டான். பொங்கல் அன்று அதிகாலை வாழ்த்தி பேசிவிடுவான். அது தான் ஆனந்தம்.
  அழகான பொங்கல் மலரும் நினைவுகள் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக... அது தான் ஆனந்தம்...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 9. Replies
  1. அதுவா... ஒருமுறை போட்டுட்டா போச்சு...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 10. இன்று அனைத்தும் எளிது தான்...

  ரசிக்க வைக்கும் இனிய நினைவுகள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 11. உங்கள் பொங்கல் நினைவுகள் மிக மிக அருமை. நம் கலாசாரத்தில் பெரிய பெரிய விஷ்யங்களி மிக எளிதாக சொல்லி விடுவார்கள். அதில் இந்த சகோதரப் பாசம் வெளிப்படும் முறை ஒன்று என நினைக்கிறேன். உங்கள் பதிவில் உங்கள் சகோதரப் பாசமும் வெளிப்பட்டது.
  அருமையான பதிவு. ஆதி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்...

   Delete
 12. //பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அப்பாவை பார்த்த உணர்வைத் தரும் அந்த கடிதமும் அதில் உள்ள வார்த்தைகளும்.//

  கரும்பாய் இனிக்கும் இதுபோன்ற நினைவுகள் யாவும் உண்மையான மகிழ்ச்சி தருபவைகளே. ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 13. பொங்கலே வந்திட்ட மாதிரி இருக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமா மகேஸ்வரி மேடம்..

   Delete
 14. மார்கழி நினைவுகள் அருமை! காணும் பொங்கல் நினைவுகளை வாசிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…