Wednesday, January 29, 2014

ரங்கா! ரங்கா! (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் – 2)வைகுண்ட ஏகாதசியன்று வெளியிட்ட ”மாலே மணிவண்ணா” பதிவில் (மன்னிக்கவும்! சற்றே இடைவேளை ஆகி விட்டது) நாளை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு முத்தங்கி சேவையைப் பார்க்கப் போகலாம் என்று முடிவு பண்ணியிருந்தோம் இல்லையா? அதே மாதிரி சரியாக 10 மணிக்கெல்லாம் தயாராகி கோவிலுக்கு சென்றோம்.. நேற்று இருந்ததை விட கும்பல் இன்னும் கூடுதலாகத் தான் இருந்ததுஇன்று விட்டாலும் பொங்கல் விடுமுறை வேறு வருகிறதேஅப்போது பார்ப்பது கடினம்.. ஆதலால் எப்படியாவது பார்த்து விட வேண்டும்..என்று தர்மசேவை வரிசையில் நிற்கத் துவங்கினோம்..


கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரும், தன்னார்வ தொண்டர்களும் அங்கங்கே காணப்பட்டனர்சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தன்னார்வ தொண்டு புரியும் பெண்மணிகள் வாளிகளில் எடுத்து வந்து வரிசையில் நிற்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..

எங்களுக்கு முன்னே ஒரு வட இந்திய குடும்பம் நின்று கொண்டு காவல்துறையினரிடம் எத்தனை நேரம் ஆகும் என்று இந்தியில் கேட்டுக் கொண்டிருந்தனர்.. அவர்களும் புரிந்தும், புரியாமலும் என்ன பதில் சொல்வதென்று முழித்துக் கொண்டிருக்கவே, எங்கிருந்து வருகிறீர்கள் என இந்தியில் கேட்கஉடனே சந்தோஷத்துடன் பாபீஜி! நாங்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள்

எங்கள் வரிசையும் கொஞ்சமாக கொஞ்சமாக நகரத் துவங்கவே, அப்படியே நாங்களும் அவ்வப்போது பேசிக் கொண்டும் வந்தோம்அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இங்கே வந்திருக்கிறார்களாம்இன்று இரவு இங்கேயிருந்து திருப்பதிக்கு செல்வதாகவும் தெரிவித்து தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார்ரங்கநாதர் கோவிலின் சிறப்புகளையும், ஏன் கும்பலாக  இருக்கிறது எனவும் பலவாறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தனர்

இந்தோரில் பிரசித்தி பெற்ற பாலாஜி கோவில் இருப்பதாகவும் அங்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்… வரிசையில் நின்று கொண்டிருந்த சபரிமலை பக்தர்களை காண்பித்து இவர்கள் ஏன் இந்த நிற உடை அணிந்திருக்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? எப்போதுமே இங்கு இப்படித் தான் கும்பல் இருக்குமா? என்று பலக் கேள்விகள்… தெரிந்தவரை அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன்…

அவர்கள் மிகச்சிறப்பான சமயத்தில் தான் இங்கு வந்திருப்பதாகவும்… விசேஷமான நாட்கள் தான் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்தும், ராப்பத்தும் எனச் சொன்னேன்…. மிகவும் சந்தோஷமடைந்தார்கள்… நீங்கள் தினமும் வந்து பெருமாளை தரிசிப்பீர்களா? எனக் கேட்டனர்… பெருமாளை தரிசிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல…என்றேன்….:)

ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்து உட்கார கொஞ்சம் இடம் கிடைத்தது… 50 ரூபாய் கட்டண வரிசையை சிறிது நேரம் அனுமதித்து, அடுத்து எங்களை அனுமதித்து என ரங்கநாதரின் உள் சன்னிதி வரை நின்று நின்று தான் சென்றோம்…. உள் சன்னிதியில் நகர்ந்து கொண்டே சென்று கொண்டிருந்தோம்இங்கே காவல் துறையினர் விரட்டிக் கொண்டேயிருந்தனர்.. வட இந்திய குடும்பம் உணர்ச்சி வசப்பட்டு கோவிந்தா கோவிந்தா என்று சத்தமாக சொல்லிக் கொண்டும், மந்திரங்களை சொல்லியும் ஒருவழியாக இதோ ரங்கனை காணப் போகிறேன்


அவசரப்படுத்தும் காவலர்களும், கோயில் பணியாளர்களுக்கும் மத்தியில் அவசரமாக திருவடியை முதலில் தரிசனம் செய்து கொண்டு, அடுத்து முகத்தை பார்ப்பதற்குள், பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்கள்இரண்டு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த நாங்கள் இரண்டு நிமிடங்கள் கூட முத்தங்கி சேவையை பார்க்கவில்லை என்று தான் சொல்லணும்…:)

வெளியே வந்து தங்க கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு, அப்படியே அன்று பகல்பத்து உற்சவத்தின் 9ம் நாள் ஆகையால் கிளி மண்டபத்தில் இருந்த உற்சவரையும் வரிசையில் நின்று தரிசனம் செய்து விட்டு, அப்போது நடந்து கொண்டிருந்த அரையர் சேவையையும் பார்த்து விட்டு வெளியே வந்தோம்…

இரண்டு மணிநேரங்கள் வரிசையில் நின்று இரண்டு நிமிடங்களுக்குள் பெருமாளை முத்தங்கி சேவையில் பார்த்து விட்டு வந்தோம்… முத்தங்கி சேவையை காண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது…


அடுத்து வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல்படி மிதித்தேனா? அடுத்த பகிர்வில்… நாளையே வெளியிட்டு விடுகிறேன்…..:)

படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்…

10 comments:

 1. நாங்களும் பரமபத வாசல் மிதிக்க காத்திருக்கோம்

  ReplyDelete
 2. தங்களின் பார்வையில் நாங்களும் தரிசித்தோம். படங்களும் விளக்கங்களும் அருமை.

  ReplyDelete
 3. இரண்டு மணிநேரங்கள் வரிசையில் நின்று இரண்டு நிமிடங்களுக்குள் பெருமாளை முத்தங்கி சேவையில் பார்த்து விட்டு வந்தோம்//

  இரண்டு நிமிடம் பார்தததே பெரிய விஷயம் அல்லவா?
  அரையர் சேவை கண்டு பாசுரங்கள் கேட்டு மகிழ்ச்சிஅடைந்தீர்கள் தானே!

  ReplyDelete
 4. ரங்கா ரங்கா ரங்கா !!!!!

  சென்னை அடையாறு அநந்தபத்மநாபனின் முத்தங்கி சேவையை கால்கள் சோர்வடையும் வரை நின்னு தரிசிக்கும் பாக்கியம் கிடைச்சது.

  அந்த திருப்பாதங்களின் அழகு........... ஹம்மா!!!!

  ReplyDelete
 5. பெருமாளை முத்தங்கி சேவையில் தரிசித்து பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 6. உங்கள் பகிர்வின் மூலம் நாங்களும் கலந்து கொண்டோம்... தரிசித்தோம்... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. முத்தங்கி சேவை கண்ணாரக் கண்டேன். நன்றி ஆதி . பரமபத வாசலுக்கு நானும் வருகிறேன்.

  ReplyDelete
 8. தங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 9. //இரண்டு மணிநேரங்கள் வரிசையில் நின்று இரண்டு நிமிடங்களுக்குள் பெருமாளை முத்தங்கி சேவையில் பார்த்து விட்டு வந்தோம்… //

  சந்தோஷமான விஷயம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. வை.கோ சார் - மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…