Wednesday, January 1, 2014

புத்தாண்டு கொண்டாட்டம் 2014

அன்பு நட்புகளே,

எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

இந்த வருடம் எங்களுடைய புத்தாண்டு கொண்டாட்டம் இது தான்...

அபார்ட்மெண்ட் வாழ்க்கையில், கிடைத்த சின்ன இடத்தில், வாசலில் நான் போட்ட ஒரு வண்ணக் கோலம்...



நேற்று இரவு எங்கள் கட்டிடத்தின் கீழ் உள்ள பொதுவான இடத்தில் தோழிகள் சிலர் போட்ட கோலத்தில் வண்ணம் கொடுக்க சிறிது உதவினேன்...



இன்று காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கி எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க பிரார்த்தித்துக் கொண்டு , இன்றைய ஸ்பெஷலாக நான் செய்த காரமல் பாயசம்..



காரமல் பாயசம்... எல்லோரும் எடுத்துக்கோங்க...

இந்த பாயசத்தை ”அடுப்பங்கரை கமலா” அவர்களின் பக்கத்தில் பார்த்தேன். வித்தியாசமாக இருக்கிறதே என்று இன்று செய்தேன்... குறிப்பை பகிர்ந்த கமலா அவர்களுக்கு என் நன்றிகள்..

தேவையான பொருட்கள்:-

பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு 
அரிசி மாவு (அ) ரவை - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி திராட்சை - தேவையான் அளவு

செய்முறை :-

பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து, வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்க்காமல், கிளறி விடாமல் வைக்கவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து தேன் கலரில் பாகு போல் வரும். இது தான் காரமல்.... அப்போது தண்ணீர் சிறிதளவு விட்டு கரைத்துக் கொண்டு பாலை விடவும்..

பாலில் மீதியுள்ள சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கண்டென்ஸ்டு மில்க்கும் சேர்த்து கொதிக்க விடவும். நான் அரிசி மாவு சேர்த்ததால் அதை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் விட்டேன்... ரவை என்றால் வறுத்து சேர்க்கவும்.. 

ஐந்து நிமிடங்களில் சுவையான ”காரமல் பாயசம்” ரெடி... நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து சேர்க்கவும்.. காரமலில் பால் சேர்த்தவுடனேயே அழகான இந்த கலர் வந்துவிடுகிறது...



சூடாகவோ, குளிரவைத்தோ பருகலாம்..வித்தியாசமான இந்த பாயசத்தை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் அசத்துங்களேன்...

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

28 comments:

  1. தித்திப்பான அருமையான சூடான சுவையான பாயஸம் பார்க்கவே மிகவும் ருசியாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம்

    அழகான செய்முறை விளக்கம்.. அருமை வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான கோலம், பாயஸம் செய்து அசத்திவிட்டீர்கள் ஆதி.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமபத்தினர் அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செய்முறை விளக்கம் அருமை... நன்றி...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அழகிய கோலங்களுடன் அருமையான பாயாசமும் அசத்தல் ஆதி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
    உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அட, காராமல் பாயசம் புதுசாக இருக்கிறதே! செய்து பார்க்க வேண்டும்.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. Pudhu varudam payasamudan mangalagaramaga kalar kolam. Inippana seidhiyudan 2014 thodakkam. Mikka magizhchi.

    Wish You Happy New Year to You All !!!

    ReplyDelete
  9. புத்தாண்டில் பாயசம் வழங்கியதற்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    (கார்மல் பள்ளிக்கூடம் எங்க வூட்டுப் பக்கம் இருக்கு. காரமல் பாயசம் புச்சா இருக்கே!)

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தங்களுக்கும்... தங்கள் குடும்பத்தினருக்கும்

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    அரிசி மாவு போட்டு பாயசமா?
    வித்தியாசமா இருக்கே?
    செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அபயா மேடம். - அரிசி மாவு ஒரு ஸ்பூன் தான்... காரமல் சுவை தான் மேலிடும்...

      செய்து பாருங்கள். நன்றி.

      Delete
  12. என் அம்மா செய்யும் அரிசி பாயாசம் போலதான் செய்முறை இருக்கு. அம்மா கண்டென்ஸ்டு மில்க் சேர்க்காம செய்வாங்க. ருசி அபாரமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜி - அம்மா செய்தா எப்போதுமே நல்லா இருக்கும்... எல்லோருக்கும்..:)

      அடுப்பங்கரை கமலா கூட கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கலை.. நான் தான் தனிச்சுவைக்காக சேர்த்தேன்..

      இது அரிசி பாயசம் இல்லங்க... அது ஒரு ஸ்பூன்.. கொஞ்சம் கெட்டியாவதற்குத் தான்... சர்க்கரையை கரைத்து வரும் காரமல் தான் இதன் சுவை..நன்றி..

      Delete
  13. கோலங்கள் அழகு.. உங்களின் கனவுகள் நிறைவேற ஊக்கமும் ஆக்கமுமான புத்தாண்டாக உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. செய்து பார்த்திடுவோம்...
    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
  15. காரமல் பாயஸம் புதுசாவும், எளிமையாவும் இருக்கு. செய்யணும் ஒருநாள். வாழ்த்துகள் அனைவருக்கும். அன்புடன்

    ReplyDelete
  16. தித்திப்பான பாயசத்துடன் வருடம் பிறந்துள்ளது இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. பாயஸம் வித்தியாசமா இருக்குங்க. கோலமும் மனதைக் கவர்கிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. காரமல் கஸ்டர்ட் செய்திருக்கேன். பாயசம் செய்ததில்லை. தகவலுக்கு நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க பிரார்த்தித்து இனிய் வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. பாயசத்தை ருசித்து, கோலங்களை ரசித்து, புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள் பல....

    ReplyDelete
  21. பாயாசம் சூப்பர் ஆதி, இன்றே செய்து பார்க்கிறேன்.ஈசியாக தெரிகிறது.கோலங்கள் சூப்பர்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. VERY TASTY LOOKING PAYASAM ADHI.
    KOLAMS ARE WELL AND BEAUTIFULLY DONE.
    HAPPY AND PEACEFUL NEWYEAR MA.

    ReplyDelete
  23. ஆசியா உமர்... மிக்க நன்றிங்க..
    விஜி - மிக்க நன்றிங்க..
    வல்லிம்மா - மிக்க நன்றிம்மா.

    ReplyDelete
  24. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆதி

    ReplyDelete
  25. அமைதிச்சாரல் - மிக்க நன்றிங்க...

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…