Tuesday, January 7, 2014

மார்கழி மாத நினைவுகள் – 2


நேற்று மார்கழி மாத நினைவுகள் – 1 என்ற தலைப்பிட்ட பகிர்வில் குறிப்பிட்டது போல அம்மா மட்டும் சென்று வந்தால் தான் பரவாயில்லையே! குறிப்பிட்ட சில நாட்களில் எங்களையும் எழுப்பி விட்டு குளிக்க சொல்லி அதிகாலையிலேயே இரண்டு கோவில்களுக்கும் அழைத்துச் செல்வார்.

கோவை அடடடா! எங்கே சென்றாலும் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிந்துவிட்டால் உற்சாகம் தானாக பிறக்கிறதே! கோவையின் சீதோஷ்ண நிலை இருக்கே, இதமாக இருக்கும். பிறந்தது முதல் 20 வருடங்கள் கோவையில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோடையில் கூட ஒருநாளும் வியர்த்து ஒழுகியதேயில்லை. அதே போல மாலையில் சில்லென்று காற்றடிக்க துவங்கி விடும்.

கோவையில் அப்போ அதிகாலைக் குளிரில் பல்லெல்லாம் நிஜமாகவே டைப்படிக்கும். தேங்காயெண்ணெய் உரைந்து போய் இளக்கிக் கொண்டிருப்போம். அப்பா அம்மாவுக்கு பிறகு ஊரோடு தொடர்பு விட்டுப் போய்விட்டது. எப்போதேனும் மாமா வீட்டுக்கு செல்கிறேன். அவ்வளவு தான். இப்போது எப்படியோ தெரியவில்லை.

எங்கள் வீட்டுக்கு கீழே உள்ள சசியக்காவிடம் கோல நோட்டு கேட்டு வாங்கி கோலங்களை வரைந்து கொண்டு, இருக்கும் சிறிய இடத்திலும் இரண்டு வீட்டை அடைத்தாற்போல் கோலம் போடுவோம். பொங்கல் சமயத்தில் கீழே உள்ள பொது வாசலில் சசியக்கா கோலம் போட நாங்கள் கலர் கொடுத்து உதவி செய்வோம். நள்ளிரவு ஆகிவிட்டாலும் கோலம் போட்டு முடித்து விட்டு ஒரு ரவுண்ட் வந்து யார் கோலம் அழகாக இருக்கிறது என்று பார்வையிடுவோம்….:))

எங்கள் குடியிருப்பில் இந்த மார்கழி மாதத்தில் தான் ஐயப்பன் பூஜை வெகு விமரிசையாக நடைபெறும். குடியிருப்பு விளையாட்டுத் திடலில் பந்தல் அமைத்து கேரளாவிலிருந்து செண்டை மேளங்கள், யானை முதலியவை வரவழைக்கப்படும். மூன்று நாட்கள் எங்கள் குடியிருப்பே கோலாகலமாக இருக்கும். மூன்று வேளையும் எல்லோருக்கும் அங்கு தான் உணவு வழங்கப்படும். வீட்டில் சமையலறைக்கு பெரிய பூட்டு! வாழைத்தண்டுகள் கொண்டு அழகான மண்டபம் கட்டி ஐயப்பனை வைத்து பூஜை புனஸ்காரங்கள் நடைபெறும். சிறுவர், சிறுமிகளான எங்களுக்கு அப்போது அந்த யானையை பார்வையிடுவதே ஒரு குதூகலத்தைத் தரும். அதன் பெயர், என்ன உணவு சாப்பிடும் போன்றவற்றை தெரிந்து கொள்ளும் ஆவல்…:))


பட உதவி: கூகிள்

இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக விளக்கு எடுத்தல் - அதாவது சின்னஞ்சிறு பெண்கள் தட்டுகளில் அகல் விளக்குகளை எடுத்துக் கொண்டு வரிசையாக மண்டபத்திலிருந்து புறப்பட்டு நடைபயணமாக போலீஸ் துணையுடன் சாரதாம்பாள் கோவில் வரை சென்று விட்டு திரும்ப மண்டபத்திற்கே வந்து விளக்குகளை ஐயப்பனை சுற்றி வைக்க வேண்டும். விளக்கு எடுத்துச் செல்லும் போது செண்டை மேளங்கள் முழங்க, ஆடி வருவார்கள். சிறுமிகள் அனைவரும் பட்டுப்பாவாடை சரசரக்க அலங்காரங்களுடன் இந்த விளக்கு எடுக்க கொள்ளை அழகாய் இருக்கும்!…:)) நானும் மூன்று வருடங்கள் எடுத்திருக்கிறேன்….:))

இனிய மார்கழி நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.  அது சரி, இன்றைக்கு வலைச்சரத்தில் சக பதிவர்களின் அறிமுகப் படலம் ஆரம்பம் – இன்றைய பதிவான சமுதாய விழிப்புணர்வு படித்தீர்களா?  அதையும் படிச்சுடுங்க!

அடுத்து பொங்கல் பண்டிகை தொடர்பான எனது நினைவுகளை நாளை பார்க்கலாமா?

நாளை மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

32 comments:

 1. Margazhi maadha ninaivugal - 2 romba interest aga irundhadhu. Ayyappan poojail vilakkuyeduthhalukku yedhavadhu sirappu irukkiradha ? Yaudaya kolam azhagu yendru parppadhil voru sandhozhamdhan. Pongal pagirvinai avaludan yedhirparkkirom.

  ReplyDelete
  Replies
  1. விளக்கு எடுத்தலுக்கான காரணத்தை அந்த வயதில் தெரிந்து கொள்ளத் தோன்றவில்லை...:)) பட்டுப்பாவாடை கட்டிக் கொண்டு போக வேண்டும் என்று தான் தெரிந்திருந்தது...:)) பொங்கல் நினைவுகளை படிக்க நாளை வருகைத் தாருங்கள்...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 2. ஆதி,

  உங்களின் இன்றைய பதிவு எல்லாவற்றையும் நேரில் பார்த்ததுபோலவே இருந்தது. அடுத்து பொங்கல் பண்டிகைக்காக வெயிட்டிங்...

  கோவையை 'மேப்'பில் பார்த்ததோடு சரி. என்றாவது போக நேர்ந்தால் ஆதி, மகி இவர்களையெல்லாம் நினைத்துக்கொள்வேன்.

  ReplyDelete
  Replies
  1. கோவை சென்றால் என்னை நினைத்துக் கொள்வதை எண்ணி மகிழ்கிறேன்.. நன்றி..விரைவில் அந்த வாய்ப்பு அமையட்டும்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..

   Delete
 3. மார்கழி மாத சிறப்புப் பதிவு
  வெகு சிறப்பாக உள்ளது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 4. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 5. மார்கழிப்பனிபோல் குளிர்ச்சியான நினைவலைகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 6. வணக்கம்
  சிறப்பாக உள்ளது... மேலும் தொடர எனத வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

   Delete
 7. நீங்கள் கூறிய முதல் இரண்டு பாராவின் நிலையம் தென்காசியில் அப்படியே நிலவும், ஆனால் இப்போது சீதோஷ்ண நிலை மாறத் தொடங்கிவிட்டது...

  மார்கழி நினைவுகள் பசுமை மாறா நினைவுகள்

  ReplyDelete
  Replies
  1. எல்லா இடத்திலுமே மாற்றங்கள் வந்து விட்டன...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சீனு..

   Delete
 8. மிகவும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 9. மார்கழிமாத சிறப்புப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  தோழி அடுத்த பகிர்வும் இது போல மென்மேலும் சிறந்து விளங்கிட .

  ReplyDelete
 10. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் மிகப்பல.

  டெல்லி விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்..

   Delete
 12. அருமை, இனிமை, குளிர்ச்சி, நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 13. மார்கழி நினைவுகள் மிக அருமை.
  சமுதாய விழிப்புணர்வு சரம் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 14. சூபாராய் இரட்டைக் குதிரையிலும் அழகாய் , ஒய்யாரமாய் சவாரி செய்கிறீர்களே!(இங்கும், வலைச்சரத்திலும்)
  அசத்துகிறீர்கள் . வாழ்த்துக்கள் .........தொடருங்கள்.......

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..

   Delete
 15. மார்கழி நினைவுகள்! எங்கள் ஊர் மார்கழிக் காலைப்பொழுதை அசைபோட வைத்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்...

   Delete
 16. மார்கழியில் சிறப்பான பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி சார்...

   Delete
 17. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்! பதிவுகளைப் படித்துக்கொண்டேதான் இருக்கேன், கருத்துப் பதிய அதிக நேரம் கிடைக்கவில்லை! தொடருங்க உங்க நினைவலைகளை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…