Saturday, January 11, 2014

மாலே மணிவண்ணா! (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் - 1)இன்று வைகுண்ட ஏகாதசிதிருவரங்கமே கோலாகலமாக கொண்டாடுகிறது இந்த ஏகாதசி தினத்தினை. பகல்பத்து உற்சவத்துக்கும்ராப்பத்து உற்சவத்துக்கும் இடையில் உள்ள நாளே வைகுண்ட ஏகாதசி! ஏகாதசிகளிலே மிகச்சிறப்பு வாய்ந்த ஏகாதசி. இன்று பரமபத வாசல் வழியாக வந்து பெருமாள் காட்சி தருவார். ஆதலால் மக்களும் இந்த பரமபத வாசலை மிதித்து விட அலையென வருவார்கள். அதே போல் அரிய ரத்னங்களை கொண்ட அங்கியை அணிந்து ரத்னாங்கி சேவை சாதிப்பார். இதுவும் வருடத்தில் ஒருமுறையே.வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து உற்சவம் புத்தாண்டு அன்று தொடங்கியதுதிருவரங்கமே மக்கள் வெள்ளத்தால் தத்தளிக்கிறதுவெளிமாநிலங்களிலிருந்து மக்கள் அலையென கோவிலில் பெருமாளின் தரிசனத்துக்காக காத்து கிடக்கின்றனர்சென்ற வருடமே கடைசி வரை முயற்சித்தும் கும்பல் குறையாததால் முத்தங்கி சேவையை பார்க்க முடியவில்லைஇந்த வருடம் எப்படியாவது பெருமாளை தரிசித்து விட எண்ணிக் கொண்டிருந்தேன்.


பகல்பத்தின் எட்டாம் நாளன்று பக்கத்து வீட்டில் திடீரென்று மதியம் 2 மணிக்கு முத்தங்கி சேவை பார்க்கப் போகலாம், என்னோட வரீங்களாஏதாவது வேலை இருக்கா? எனக் கேட்டவுடனேயே, போகலாங்க, ரெடியாகிடறேன் என்று சொல்லி சரியாக இரண்டு மணிக்கு தயாராகி விட்டேன்.

கோவிலுக்குள் நுழைந்து கொடிமரத்தை தாண்டி மூலவர் ரங்கநாதர் சன்னிதிக்கு உள்ளே சென்றோம். தர்ம சேவை ஒருபுறம், 50 ரூபாய் ஒரு வரிசை என மக்கள் கும்பல் இரண்டிலும் இருந்தது. தர்ம சேவை தரிசனத்துக்கே நிற்கலாம் என்று பார்த்தால் ஏறக்குறைய வரிசை நகர்ந்து பெருமாளை தரிசிக்க மணிநேரத்துக்கும் மேலே ஆகலாம். 50 ரூபாய் வரிசையில் போனால் 2 மணி நேரத்தில் பார்க்கலாம். மகளுக்கு நான் இங்கு வந்திருப்பது தெரியாது. திடீரென கிளம்பியாச்சே. என்னடா செய்வது, அவள் வருவதற்குள் வீட்டுக்கு போக முடியுமாஎன்று யோசிப்பதற்குள்….

வாங்க தர்மசேவையில் போயிடலாம். வரிசை நகருதே என  அவர்கள் சொல்ல, 50 வரிசையில் நிற்கலாம். பள்ளியிலிருந்து வருவதற்குள் போயிடலாமே என்றேன். காசு கொடுத்து பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. யோசிக்காதீங்க, கும்பல் வேற வந்துகிட்டே இருக்கு நில்லுங்க என்றார். நானும் அந்த கொள்கையுள்ளவள் தான் ஆனா இவ்வளவு கும்பலில் அதெல்லாம் யோசிக்க வேண்டாமே என்றேன். அவர்களுக்கு விருப்பமில்லை. சரி! நீங்க நில்லுங்க. நான் வீட்டுக்கு கிளம்பறேன். ரோஷ்ணி வந்து தேடுவாள்” என்றேன்.

இல்லை வாங்க! வீட்டுக்கே போகலாம் என்று அவர்களும் வந்து விட்டார்கள். இன்னொரு நாள் வரலாம் என்றார்.. சரி! கிளி மண்டபத்தில் இருக்கும் நம்பெருமாளை பார்க்கலாம் என இந்த வைகுண்ட ஏகாதசிக்காக வழிகளை மாற்றியமைத்திருக்கும் பாதையில் அர்ச்சுன மண்டபத்திற்கருகில் சென்று அங்கு நின்று கொண்டிருந்த காவல் துறையினரிடம் கேட்க அவர்கள் இங்கு காமிராக்கள் வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டிக் கொள்வீர்கள். பெருமாள் சன்னிதி வழியாகவே சென்று தரிசனம் செய்யுங்கள். கும்பல் அவ்வளவாக இல்லை என்றார்.

இருவரும் அங்கே ஓடினோம். நிஜமாகவே கும்பல் அவ்வளவாக இல்லை. நகர்ந்து கொண்டே இருந்தது. ஒருபுறம் அரையர் சேவையும் நடந்து கொண்டிருக்கவரிசையில் நகர்ந்து நம்பெருமாளை கண் குளிர தரிசனம் செய்தோம். வெளியே வந்து சந்திர புஷ்கரணி அருகேயுள்ள கோதண்டராமருக்கும் முத்தங்கி சேவை எனத் தெரிய அங்கே சென்றோம். மணி 2.45 தான் என்பதால் கதவு மூடியிருந்தது. அங்கேயே ஓரிடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். மணிக்கு சன்னிதிக் கதவு திறக்கவே உள்ளே சென்று முத்துக்களால் ஆன அங்கியை அணிந்த கோதண்டராமர்லட்சுமணர்சீதாமற்றும் அனுமனை கண்குளிரக் கண்டோம். எல்லோரின் கால்களிலும் கொலுசு வேறு. எந்த தள்ளுமுள்ளும் இல்லை. அருமையான தரிசனம்..

அருகேயிருந்த ஆண்டாள் கண்ணாடி அறை சேவையிலும் ஜடை அலங்காரம் கண்ணாடியில் தெரிய, மடிசார் கட்டில் ஆண்டாளும்அன்றைய பாசுரப்படி அமைத்திருந்த அலங்காரங்களையும் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தோம்.

அடுத்து அப்படியே வந்து தாயார் சன்னிதிக்கு சென்றோம். கும்பல் ஓரளவு இருந்தது. சரி! தாயார் ரங்கநாச்சியாரையும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என்று வரிசையில் நிற்கத் துவங்கினோம். நம்பெருமாள் குறித்து நானும் என்னுடன் வந்தவரும் பேசத் துவங்க, நான் ரிஷபன் சார் எழுதிய ஈரங்கொல்லிகதையை அவரிடம் தெரிவிக்க எங்களுக்கு முன்பிருந்த பெண்மணியும் ஆமாம் உள்ளே மூலவருக்கு அருகில் இன்னொரு உற்சவரும் உண்டு என்றும்மிகவும் ஆர்வமாக எந்த புத்தகத்தில் படித்தீர்கள் என வினவ ரிஷபன் சாரின் வலைப்பூவில் படித்தேன் என்று அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்! அவரும் வேறு சில தகவல்களை எங்களுக்கு சொன்னார்.. 

சரியாக அரை மணியில் தாயாரின் திவ்யமான தரிசனம் கிடைக்கப் பெற்றோம். தாயாருக்கு சாற்றிய ரோஜாப்பூ மாலையிலிருந்து இரண்டு ரோஜாக்கள் எனக்கு கிடைத்தது. மஞ்சள் காப்பு பிரசாதத்தையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். அப்போது தான் நாளை காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலையை முடித்துக் கொண்டு 10 மணிக்கெல்லாம் வந்து முத்தங்கி சேவையை நின்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ரங்கனின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றதாநாளை சொல்கிறேனே…:)

இன்று வலைச்சரத்தில் வைகுண்ட ஏகாதசி பதிவுகளை பார்த்து புண்ணியத்தை பெறுங்கள். இதுவரை சென்று படிக்காதவர்கள், இங்கே செல்லவும்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்..

18 comments:

 1. விஷேசமான தரினம் ..வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 2. சிறப்பான பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

  இன்றைய அறிமுகங்களில் பல அறியாதவை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 3. சிறப்பானதொரு அனுபவம் .எப்போடியோ தரிசனம் கொடுத்துவிட்டார் எம்பெருமான் .
  அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் ??????????? காணும் ஆவலுடன் வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...

   Delete
 4. வைகுண்ட ஏகாதசி... இங்கு தரிசிக்க பெருமாள் இல்லை... அறையில்தான் சாமி கும்பிட்டேன்...
  நல்ல பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க குமார்...

   Delete
 5. வைகுண்ட ஏகாதஸித் திருநாளில் அரங்கனின் விசேஷமான தரிஸனம். ஆனந்தம் தரும் பகிர்வு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 6. அருமையான் பகிர்வு.

  எம்பெருமானை தரிசனம் செய்த பதிவை படிக்க வருகிறேன் நாளை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 7. வைகுண்ட ஏகாதசி தரிசன பதிவு! அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சுரேஷ் சார்..

   Delete
 8. சுவாரஸ்யமான பதிவு!!
  'ஈரங்கொல்லி' நிகழ்வு மற்றும் முகலாயப் படையெடுப்பின் போது நிகழ்ந்ததும் பற்றி மேலும் அறிய ஸ்ரீவேணுகோபாலனின் 'திருவரங்கன் உலா' (இது வரை படிக்கவில்லையென்றால்) படியுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் ரங்கராட்டினத்தில் முகலாய படையெடுப்பில் ரங்கனின் நிலையை படித்திருக்கிறேன்... தாங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தையும் வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்கிறேன்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மிடில்கிளாஸ்மாதவி..

   Delete
 9. தரிசனப் பதிவு அருமை. கொள்கையிலிருந்து மாறாப்பிடிப்பும் மனம் ஈர்க்கிறது. அடுத்த பதிவை எதிர்நோக்கியிருக்கிறேன்.

  ReplyDelete
 10. அடுத்த பதிவை எழுதத் தான் நேரமே கிடைக்கவில்லை... அதற்குள் ராப்பத்து உற்சவமே நாளையோடு முடியப் போகிறது....:))

  தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க கீதமஞ்சரி...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…