Monday, January 6, 2014

மார்கழி மாத நினைவுகள்! – 1

படம்: கூகிள்

இன்றைக்கு மார்கழி மாதம் 23-ஆம் தேதி [ஜனவரி 6, 2014]. மார்கழி மாதம் ஆரம்பத்திலிருந்தே மார்கழியின் நினைவுகள் என்னுள் வந்து போயின.  அதிலும் திருமதி சித்ரா சுந்தர் அவர்களின் பொங்கல் நினைவுகள் படித்ததிலிருந்தே, எனக்கும் மார்கழி மாத நினைவலைகள் மனதுள் அதிகமாக ரீங்காரமிட்ட படியே உள்ளன. மார்கழி என்றாலே கோவில், கோலங்கள், அதிகாலைப்பனி, பண்டிகைகள், ஊர் நினைவுகள் என எல்லாம் தானே!

நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி! இன்று தொடங்கும் வாரத்தில் எனக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்கிறது – அட எந்த பள்ளியில் என சந்தோஷமா கேட்கறீங்களா? மதிப்பிற்குரிய சீனா ஐயா பொறுப்பாசிரியராக இருக்கும் வலைச்சரத்தில் தான். நான் கையில் ஸ்கேல் வைத்துக்கொண்டு தப்பு செய்யற பசங்களை அடிக்கற ஆசிரியர் இல்லை – அதனால தைரியமா இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் வந்து நான் தொடுக்கும் மலர்ச்சரங்களை படிக்கணும் சரியா!

படம்: கூகிள்

அங்கே தினமும் ஒரு பதிவு வெளியாவது போலவே எனது தளத்திலும் ஒரு பதிவு வெளியாகலாம் – நேரம் கிடைத்தால் :)

சரி முதல் பாராவில் சொன்னது போல, எனது மார்கழி மாத நினைவுகளைத் தொடரலாம் இப்போது!

என்னுடைய சிறு பிராயம் கொங்கு நாடாம் கோவையில் தான். அப்பா அரசுத் துறையில் இருந்ததால் ரேஸ்கோர்ஸில் உள்ள அரசுக் குடியிருப்பில் தான் வசித்தோம். சின்னஞ்சிறு அறையும், அடுப்பங்கரையும் உள்ள சிறியதோர் வீடு தான்! அக்கம் பக்கம் உள்ளவர்களை எங்கள் சொந்தம் போல் தான் பாவிப்போம். அவர்களும் அப்படித் தான்.

அந்த சின்னஞ்சிறு வீட்டிற்க்கும் எத்தனை எத்தனை உறவினர்கள் வந்து தங்கியிருக்கின்றனர். இன்று போல் விருந்தினர்கள் தங்களுக்கென்று தனியாக அறையெல்லாம் எதிர்பார்த்ததில்லை :) எனக்குமே எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டாலும் அந்த சின்னஞ்சிறு வீட்டில் கிடைத்த நிம்மதியும், சந்தோஷமும் வேறு எங்கும் வராது என்றே தோன்றுகிறது…:)) நாங்கள் இருந்த அந்த வீடுகளையெல்லாம் பலவருடங்கள் ஆகிவிட்டதால் குடியிருக்க பாதுகாப்பு இல்லை என ஒருசில வருடங்களுக்கு முன்பு இடித்து தரைமட்டமாக்கி விட்டார்களாம்…..:(((படம்: கூகிள்

மார்கழி மாதம் வந்து விட்டால் அம்மா அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து எல்லோருக்கும் பொதுவான வாசலில் மல்லிகாம்மாவுடன் (இவர்களைப் பற்றி முன்பு தனியாக பதிவே போட்டிருக்கிறேன்) சேர்ந்து பெரிதாக கோலம் போட்டு விட்டு பதினைந்து இருபது நிமிடத் தொலைவில் உள்ள சாரதாம்பாள் கோவிலுக்கு சென்று அபிஷேகம், ஆராதனை எல்லாம் பார்த்து விட்டு பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து வைத்து விட்டு, அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கும் (இங்கு 108 பிள்ளையார் வைக்கப்பட்டுள்ளது) சென்று அங்கேயும் இறைவனை தரிசித்து,  வீடு வந்து சமையல் வேலைகளை ஆரம்பித்து விடுவார். இருக்கும் வேலை போதாது என, என்னையும் தம்பியையும் எழுப்பி விடும் வேலையையும் சேர்த்து ஆரம்பிப்பார்…:)படம்: கூகிள்

கோவில் என்று சொல்லி விட்டு பிரசாதங்கள் இல்லாமலா? கோவிலில் தரும் சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்நானும் தம்பியும் பங்கீடு செய்து சாப்பிட்டு விட்டு தான் பள்ளிக்கே செல்வோம்…:)))

எங்க வீட்டு பொங்கல் இதோ….. உங்களுக்காககத்திரிக்காய் கொத்சுடன்….:)அம்மா மட்டும் சென்று வந்தால் தான் பரவாயில்லையே……

என்ன நடந்திருக்கும்? நாளை பார்க்கலாம்...

அதற்கு முன்னாடி இன்னிக்கு வலைச்சரத்தில் இன்றைய எனது பதிவான இரண்டாம் அத்தியாயம்! படிக்க இங்கே க்ளிக்கவும்!

ஊர் நினைவுகள் தொடரும்….

மீண்டும் நாளை சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

38 comments:

 1. மார்கழி நினைவுகள்
  அதிகாலைச் சிறப்பாய் அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 2. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 3. மீண்டும் வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள். உங்கள் மார்கழி மாத நினைவுகளை சுவாரசியமாகக் கொண்டுசென்று 'தொடரும்'னு போட்டு ஆவலை உண்டாக்கிட்டீங்க. ம்...கலக்குங்க !

  என்னுடையை பொங்கலையும் குறிப்பிட்டமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரம் முழுதும் மார்கழி நினைவுகளைத் தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்...:) மீதியை நாளைக்கு வந்து படித்து விடுங்கள்.

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..

   Delete
 4. வணக்கம்
  சிறப்பாக உள்ளது.. வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள் அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

   Delete
 5. ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள் ஆதி..
  மார்கழி பதிவு அருமை...கொத்சு செய்முறை முடிந்தால் பகிரவும்.

  ReplyDelete
  Replies
  1. கொத்சு செய்முறை.. நேரம் கிடைக்கும் போது பகிருகிறேன்..

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ஷமீ...

   Delete
 6. நாங்க கூட திருச்சியிலே இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரங்க கூட போட்டி போட்டு பெரிய
  கோலமா ல்லாம் போட்டிருக்கோம்.
  பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தினீர்கள் நன்றி
  ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களையும் கொசுவத்தி சுத்த வெச்சது குறித்து மகிழ்ச்சி...

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உமா மகேஷ்வரி மேடம்..

   Delete
 7. மார்கழி மாதம், கோவில், பிரசாதங்கள்... என்னுள்ளும் பல நினைவுகளை கிளறி விடுகின்றன.. மார்கழி மாத நினைவுகள் என்றுமே பசுமையானவை தான்

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய பஜனை குறித்த பதிவும் இந்த பகிர்வுக்கு ஒரு காரணம்.. மிக்க நன்றி..:)

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சீனு..

   Delete
 8. இனிய மார்கழி நினைவுகள்...

  ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தன்பாலன் சார்..

   Delete
 9. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்..

   Delete
 10. valaichchara asiriyaraga porupperpadharku vazhththukkal

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 11. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, மார்கழிப் பனியில் பஜனை செய்த ஞாபகம் வருதே. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete
 12. ஆசிரியப் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஆதி. உங்கள் மார்கழி மாத நினைவுகளை ஆவலுடன் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..

   தொடர்ந்து வருகை தாருங்கள் .. இன்னும் பல விஷயங்கள் உள்ளன...

   Delete
 13. ;) அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 14. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு
  தேர் இழுக்க தவறாமல் வந்த நாட்கள் உண்டு..
  108 பிள்ளையார் கோவில் நடைப்பயிற்சியின் போது தரிசிப்போம்..!
  மார்கழி நினைவுகள் மலர்ந்து மனம் மகிழச்செய்தன..பாராட்டுக்கள்..!
  வலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! எங்கள் வீட்டிருகே தான் தாங்களும் இருந்தீர்களா? மகிழ்ச்சி... நான் தங்களை எப்போதேனும் பார்ந்திருக்கலாம்... ஆச்சரியமாக உள்ளது இப்போது...:)

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 15. அம்மாவுடன் மார்கழி மாதம் அதிகாலை கோவிலுக்கு போய் வரும் நினைவு எனக்கும் வந்து விட்டது.

  அருமையான மலரும் நினைவுகள். படங்கள் எல்லாம் மிக அருமை.
  வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய நினைவுகளையும் தூண்டி விட்டதில் மகிழ்ச்சி..

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 16. 2நாட்களாக எதையும் பார்க்க முடியவில்லை. மார்கழிமாதம் எங்கள் ஊரில்,பஜனை வருமுன்னரே கோலம்போட அரிக்கன் விளக்கு ஒளிகூட சிலஸமயம் தேவைப்படும். வைகுண்ட ஏகாதசியும்,திருவாதிரையும், ஏக அமக்களமாக இருக்கும். பொங்கல் கேட்கவே வேண்டாம்.

  எல்லாம் மலரும் நினைவுகள்தான். அருமையாயிருக்கு. எது? உன் கட்டுரை. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. பொறுமையாக முடியும் போது பார்த்து கருத்து சொல்லுங்கள்....

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 17. இன்றுதான் இப்பதிவை படிக்க நேரம் வந்தது. மார்கழி என்றாலே வாசலில் போடுதல்தான் மங்கையருக்கு முதலில் நினைவுக்கு வரும். நீங்களும் உங்கள் பாணியில் சொல்லி இருந்தீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா...

   Delete
 18. நானும் ரேஸ் கோர்ஸ் குடியிருப்பில் இருந்திருக்கிறேன்! ஆனால் மதுரையில்! நண்பர்களுடன் பழகிய அந்த நாட்கள் ரொம்பவே இனிமையானவை!

  ReplyDelete
  Replies
  1. முதல் வரிகளைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.... ஆனால் மதுரையில் என்றதும்....:)))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

   Delete
 19. எனக்கும் திருவரங்கம்தான் பிறந்த ஊர்...அழகான பதிவு உங்களுடையது படங்கள் மனசை அள்ளுகின்ற்ன

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஷைலஜா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…